Monday, February 17, 2020

On Monday, February 17, 2020 by Tamilnewstv in ,    


*ரிசர்வ் வங்கி கூட கொடுக்க முடியாத வட்டியை கொடுக்கும் திருச்சி எல்பின் நிறுவனம்.*

திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தொடர்ந்து மோசடி வழிகளில் பணம் சம்பாதித்து வரும் நிறுவனம் எல்பின் நிறுவனம் ஆகும்.

தற்போது மாநகரங்களில் காவல்துறையினர் என்பின் நிறுவனத்தினர் கூட்டம் நடத்த தடை விதித்து இருப்பதால் கிராம புற மக்களை கோடிஸ்வரர்  ஆக்கலாம் என தனது டீம் லீடர்களிடம் கூறி கிராமங்களில் கிராம மக்களின் வீடுகளுக்குச் சென்று மூளை சலவை செய்து வரும் பணி நடைபெற்று வருகிறது தற்போது.
புதிதாக தற்போது எல்பின் டிராவல்ஸ் என்று ஒன்றை ஆரம்பித்து
(இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் ? எந்த முகாந்திரம் வைத்து இந்த ட்ராவல்ஸ் ஆரம்பிக்கப்பட்டது  யார் யார் துபாய் செல்ல உள்ளனர் யார் யார் இந்தியா திரும்ப உள்ளனர் ? என மத்திய புலனாய்வு பிரிவு  போலீசார் விசாரிக்க வேண்டும் ) வரும் மார்ச் 3ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட  நபர்களை துபாயில் உள்ள உயரமான கட்டிடத்தின் மேல் வர்த்தக கூட்டம் நடத்த உள்ளதாக கூறி தலைக்கு ஒரு லட்சம் கட்ட வேண்டும் அப்படி கட்டுபவர்களுக்கு துபாய் டூர் மற்றும் அவர்களது வங்கி கணக்கில் தினமும் 550 ரூபாய் என ஒரு வருடம் பணம் ஏறும் அதாவது ஒரு லட்சம் போட்டால் ஒரு வருடத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம் என நோட்டீஸ் அடித்து மூளை சலவை செய்து வருகின்றனர்.. இதுபோல் பணம் கட்டியவர்கள் பலரும் தற்போது திரும்ப பணம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். முதலில் தினமும் பணம் ஏறியது, பிறகு வாரம் ஒரு முறை ஏறியது, பிறகு மாதம் ஒரு முறை அதன்பின் அதுவும் இல்லை என பொதுமக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
இன்று கிடைத்த தகவலின்படி இந்நிறுவனத்தின் தலைவர் அழகர்சாமி (எ) ராஜா வரும் 24ஆம் தேதி அல்லது ஏதோ மார்ச் அல்லது மே 24 ஆம் தேதி அன்று முன்னணி கட்சியின் மாநில பதவி பெறப் போவதாகவும் அதன்மூலம் நமது நிலை மேலும் உயர போவது என்றும் காவல்துறை நமது பின்னால் நிற்கும்  என்றும் தனது டீம் லீடர் களிடம் உறுதியாக கூறி வருகிறாராம். தற்போது தஞ்சையில் கைதான பிரசன்ன வெங்கடேஷ் அவர்களுக்கு ஜாமின் கூட கிடைக்கவில்லை .அவரது புகைப்பட கலைஞர்கள் மூலம் தஞ்சை நடைபெற்ற கூட்டங்கள் அதன் புகைப்படம் மற்றும் வீடியோ கிளிப்பிங்ஸ் பெற்று தஞ்சை போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனால் பல டீம் லீடர் விலகி போக உள்ளதாக வந்த தகவலை அடுத்து ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் இதுபோன்ற தகவலை பரப்பி வருகின்றாராம். டீம் லீடர் களை குஷிப்படுத்தி கிராமப்புற மக்களை மூளை சலவை செய்து வேறு வழியில் பணம் சம்பாதிக்க செல்ல உள்ளனர் இதை உடனடியாக பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். ஜெய்ஹிந்த்.
என சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய வீடியோவில் கூறியுள்ளார்.

பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*

0 comments: