Thursday, February 20, 2020
டெண்டர் பிரச்சனையால் கதறும் வியாபாரிகள் வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளபோது இடத்தை கைப்பற்ற முயற்சியா
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம் உள்ளது ஆம்னி பேருந்து நிலையம்
இந்திய ரயில்வேயில்
காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் பெருக்க ரயில்வே வாரியம் 5 ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்து இதனடிப்படையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் ரயில் நிலையம் இடையே உள்ள ரயில்வேக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தை திருச்சி கோட்ட ரயில்வே தேவகுமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு குத்தகைக்கு விட்டது அப்போது தேவகுமார் தரப்பு ஆம்னி பஸ் நிலையத்தில் புதிதாக வணிக நிறுவனங்கள் அமைக்க விளம்பரம் செய்தது பயணிகள் வரத்து அதிகம் இருந்ததால் வருவாய் கிடைக்கும் என நம்பி 60க்கும் மேற்பட்டோர் கடை திறக்க முன்வந்தனர் இவர்களிடம் இருந்து முன்வைப்புத் தொகையை தேவகுமார் தரப்பு பெற்றுக்கொண்டு கடை நடத்த அனுமதித்தது
இந்நிலையில் ஒப்பந்தம் முடிந்தது ரயில்வே நிர்வாகம் 2 மாதங்களுக்கு முன்பு பெற்ற டெண்டரில் ஆம்னி பஸ் நிலையத்தை விஷ்ணு என்பவர் எடுத்தார் இதைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தகாரர் தற்போது ஆம்னி பஸ் நிலையத்தில் ஏற்கனவே பணம் கொடுத்து கடை நடத்தி வந்தவர்களிடம் முன்வைப்பு தொகை வேண்டும் என கேட்டுள்ளார் ஏற்கனவே கொடுத்த முன்வைப்பு தொகை என்ன ஆனது என கேட்டு வியாபாரிகள் பணம் தர ஒத்துக் கொள்ளவில்லை இது தொடர்பாக புதிதாக ஒப்பந்தம் எடுத்த நபரும் வியாபாரிகளும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர் இதனால் விவகாரத்தில் ரயில்வே அதிகாரி தலையை பியித்து கொண்டுள்ளனர்
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ஒரு ஒப்பந்தம் விடப்பட்டு அதே இடம் வேறு ஒருவர்க்கு டெண்டர் முறையில் விடும்போது ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்தவர்கள் ரயில்வேக்கு தர வேண்டிய தொகை அந்த இடத்தில் வேறு வில்லங்க நடவடிக்கைகள் இல்லை என உறுதி செய்து டாக்குமெண்ட் உரிமை பத்திரத்துடன் ஒப்படைக்க வேண்டும் ஆனால் ஆம்னி பஸ் நிலைய விவகாரத்தில் வில்லங்க நடவடிக்கை இல்லை என டாக்குமெண்ட் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்பதுதான் இதில் உள்ள சிக்கலாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார்
இதனால் ஒரு கடைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை முன்வைப்பு தொகை கொடுத்தவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் இதற்கு முக்கிய காரணம் ரயில்வேயில் நிலவும் ஊழல் தண்டர் மூலம் ஒருவருக்கு ஒப்பந்த விட்டாலும் சம்பந்தப்பட்ட இடத்தில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்றால் உரிய அதிகாரிகளை கவனிக்க வேண்டும் இப்படி வாங்கி பழக்கப் பட்டவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர் என்றனர் ரயில்வே நிர்வாகத்திடம் ஏமாற்று வேலைகள் இருக்காது என நம்பி ஒப்பந்ததாரரிடம் பணம் கொடுத்து கடை தொடங்கியவர்கள் பாதிக்கப்படாத வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...


0 comments:
Post a Comment