Thursday, February 20, 2020

On Thursday, February 20, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 20-02-2020

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். 
                  

அப்போது அவர் பேசுகையில்,
வேளாண் மண்டலம் குறித்த சட்ட முன்வடிவை

                  

 முதலமைச்சர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலம் நடைமுறையிலுள்ள, செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நிறுத்தப்பட மாட்டாது. இந்த தேதிக்கு முன்பாக செயல்பாட்டில் உள்ள திட்ட அளவில் ஏற்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நிறுத்தப்படாது.

 இனிமேல் வரக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தான் அனுமதி மறுப்பு என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியை ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணி தொடங்கப்பட்டுள்ளது. 

 இப்பொழுது செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். 
ஏற்கனவே ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்காக பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும் என்பதற்காக போராடினார்களோ அந்த குழாய்கள் எடுக்கப்படாது. இப்போதுள்ள சட்டப்படி செயலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக உள்ள இவைகளுக்கு தடை கிடையாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

 எனவே இதில் பல குழப்பங்கள் இருக்கிறது. குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி,  புள்ளம்பாடி இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் சேர்க்கப்படவில்லை. கரூர் மாவட்டம் குளித்தலை சேர்க்கப்படவில்லை. இவை அனைத்தும் வேளாண்மை நிறைந்த பகுதிகள் ஆகும். இதுகுறித்து குறைகளை களைய முதலமைச்சர் தலைமையில் துணை முதலமைச்சர் உள்பட 24 பேர் கொண்ட குழு பரிசீலித்து அதன் முடிவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதனால் குறைபாடுகளுடன் தற்போது அவசரமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை  நிறைவேற்றாமல் அடுத்து ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கழித்து வேறு சட்டமன்ற கூட்டத்தில் இதை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்காக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் குறித்த எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.  என்றார்.

0 comments: