Thursday, February 20, 2020

On Thursday, February 20, 2020 by Tamilnewstv in ,    
அரசு செய்ய வேண்டியதை நாங்கள் செய்கிறோம் என பந்தா காட்டும் எல்பின் நிறுவனம்.
                 

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி அடுத்ததாக நமக்கு அனுப்பியிருக்கும் பதிவில் கூறியிருப்பது:-
சமீபத்தில் திருச்சியில் நடு இரவு நான்கு மணிக்கு திருட்டுத்தனமாக கூட்டம் நடத்தினார்கள். காவல்துறைக்கு தகவல் அளித்தும் அவர்களால் தடுக்க முடியவில்லை ?. கூட்டத்தில் அவர்கள் வரும் 23ம் தேதி மதுரையில் தங்களது எல்பின் நிறுவன லீடர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மதுரை செல்லம்மாள் மருத்துவமனை அருகில் அல்லது ஏதோ ஒரு இடத்தில் காவல்துறையிடம் அனுமதி வாங்கி விட்டார்களா என தெரியவில்லை அரசு செய்ய வேண்டிய கொரோனா  வைரஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அரசு பொது மக்களுக்கு செய்ய வேண்டியதை நாம் செய்யப்போகிறோம் என தங்களுக்குள் பந்தா பேசி வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்ல காரியம் தான் ஆனால் எல்பின் நிறுவனத்தினர் செய்வது பொது மக்களுக்காக அல்ல தங்கள் நிறுவனத்தின் சார்பில் கூட்டம் நடத்த காவல்துறை தடை விதித்து விட்டது. இதை மீறி மக்களிடம் தங்கள் நிறுவனத்தை எடுத்துச் செல்வதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளை பயன்படுத்த உள்ளனர். மதுரை காவல்துறை அதிகாரிகள் இதனை தீவிர விசாரித்து அனுமதி வழங்கி பொது மக்களை மயக்கும் இவரது செயலை தடுத்து நிறுத்த வேண்டுகிறேன். நன்றி ஜெய் ஹிந்த்.

மேலும் சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது:-

சமீபத்தில் எஸ். ஆர். கே. ரமேஷ் என்னும் ரமேஷ் குமாரை 4. 63 கோடி ரூபாய்க்கு வெடி வாங்கி ஏமாற்றியதாக தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மதுரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்தனர். மதுரை கமிஷனரிடம் ரமேஷ் குமார் அவர்களை அடிக்காமல் விசாரியுங்கள் என திருச்சியிலிருந்து ஒரு விஐபி போன் செய்து கூறினாராம் அவருக்கு 10 லட்சம் கொடுக்கப்பட்டதாக தகவல்  அழைத்துச் சென்ற காவல் துறையினருக்கு 17 லட்ச ரூபாயும் கொடுத்தார்களாம் ரமேஷ் குமார் இடம் சில பத்திரிக்கையாளர் கேட்டதற்கு எங்களிடம் பணம் உள்ளது கொடுக்கிறோம் அதை யார் கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என கூறியுள்ளார். தற்போது மதுரை செல்வதற்கு முன்பு தங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவரிடமும் மதுரை போலீஸ் கமிஷனரை மற்றும் காவல்துறையினர் அனைவரையும் பேசி சரி செய்தாகிவிட்டது. அதேபோல் நகைக்கடை போல் தோற்றமளிக்கும் மதுரை பிரபல ரவுடியையும்   மிரட்டி ஒதுக்கி விட்டோம். இனி மதுரையில் நாம்தான் என எல்பின் உரிமையாளர்கள் அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் கெத்தாக பேசி வருவதாக தகவல். காவல்துறையினர் நன்றாக விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்பது எனது வேண்டுகோள், நன்றி.


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


******************************************

 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரி நாதன் என்னும் நான் ) தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

 *தற்போதைய நிலை வரை ராமஜெயம் கொலை வழக்கில் ஆவணங்கள்  தடயங்கள் ஏதும் காவல்துறையால் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது*

0 comments: