Friday, February 21, 2020

On Friday, February 21, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட பெரம்பலூர் மாவட்டம் 103 வயது முதிர்ந்த ஆண் திரு. துரைசாமிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 50 நாட்களுக்கு முன்னர் இடுப்பு மூட்டு முறிவிற்கு நாட்டு வைத்தியம் செய்து அது பயனற்ற நிலையில் திருச்சிஅப்போலோ சிறப்பு மருத்துவமனையை நாடினார்.


அவருடைய நடக்க இயலாமை மற்றும் வலி அவரையும் அவரைச்சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு மிகுந்த கவலை மற்றும் வேதனை அளித்ததுஇதற்கு முன்னர் மருத்துவசிகிச்சை பெறாததற்கு வயது முதிர்ச்சியே காரணம் காட்டப்பட்டதுஅவரது இடுப்பு முறிவினால் நீண்ட நாள்படுத்த படுக்கையில் இருந்ததால் அவரதுகால் நரம்புகளில் இரத்தக்கட்டு(Deepveinthrombosis) மற்றும் படுக்கைப்புண்கள் ஏற்பட்டு மிகவும் அவதிக்கு உள்ளாகியிருந்தார். இவருக்கு இருதய சிகிச்சை நிபுணர்,பொதுமருத்துவர் மற்றும் மயக்க மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவினரால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அவருக்குஎலும்பு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்கீதாயன் தலைமையில் வெற்றிகரமாக அரை இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்இது அவரை விரைவாக நடக்கவைக்க அவசியமானதாக இருந்தது.அறுவை சிகிச்சைக்குப்பின் இவர் உதவியுடன் நடக்கவும் வலியின்றி உட்காரமுடிந்தது.  இவை இரண்டும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் சந்தோசம் மற்றும் பேராறுதலாக இருந்ததோடுஅவரை கவனிக்கவும் எளிதாக இருந்தது.
முதியோருக்கு ஏற்படும் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வயது ஒரு தடையாக இருக்கிறதா? நிச்சயமாக இல்லை ஏனெனில் இடுப்பு எலும்பு முறிவுகள் மற்றும் பிறபலவீனமான எலும்பு முறிவுகள் (ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக) வயதானவர்களுக்கு பொதுவாக ஏற்படுகின்றன. இந்த வயதில் நீடித்தபடுக்கை ஓய்வு, நுரையீரல் நோய்த்தொற்று, சிறுநீர்தொற்று, கால் நரம்புகளில் இரத்த உறைவு மற்றும் படுக்கை புண்கள் போன்ற வற்றிற்கு வழிவகுக்கிறது. இவைகள் இறுதியில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
இந்த எலும்பு முறிவிற்கு நாட்டு வைத்தியம் உதவுமா? ஒவ்வொரு வரும் தங்கள் வாழ்க்கையின் அணைத்து அம்சங்களிலும் சமீபத்திய தொழில்நுட்பத்தை அனுபவிக்கவிரும்பும் பொழுது அவர்கள் நோய்வாய்ப்பட்டு உடலுக்கு சிகிச்சையளிக்க எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத ஒரு சிகிச்சையை ஏன் தேர்வு செய்ய வேண்டும். திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இவரைப் போன்ற வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தொழில் நுட்பவசதிகளை கொண்டு மருத்துவக்குழுவினர்களால் மேற்கத்திய நாடுகளுக்கு இணையான மருத்துவ சிகிச்சை வழங்குகிறோம்.
குறிப்பு: நாட்டு வைத்தியத்தில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக எலும்பு முறிவிற்கு பிறகு விரைவில் முறையான மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டால், வயது முதிந்தோர்களுக்கு விரைவில் குணமடைய வாய்ப்பாக அமைகிறது.
இது போன்ற வயதான நோயாளிகளுக்கு இடுப்பு பகுதிக்கு கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொழுது அந்த பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து செலுத்தி அறுவைசிகிச்சை செய்வதே பாதுகாப்பான முறையாகும்.
இந்த பத்திரிக்கை சந்திப்பில் அப்போலோ மருத்துவமனைமதுரை மண்டல தலைமை மருத்துவர் ரோகினிஸ்ரீதர், எலும்பு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர் அருண்கீதாயன் மற்றும் பாலசுப்ரமணியன் மயக்கவியல் நிபுணர் கார்த்திக், அழகப்பன் மற்றும் திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவ நிர்வாகி மருத்துவர் சிவம் இருந்தனர்

0 comments: