Friday, February 21, 2020
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வகித்தார். திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இதில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வீரமணி செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார்.
அவர் கூறுகையில், மணியம்மையார் நூற்றாண்டு விழாவை மார்ச் 10ஆம் தேதி சென்னையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். திராவிடர் கழகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதை வரவேற்கிறோம். இந்த நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் 23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம் மூலம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க அழுத்தம் கொடுக்கப்படும். இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். உயர் ஜாதியினரின் பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டம் மோசடி திட்டமாகும். அதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை நாங்கள் வரவேற்றோம். அதேசமயம் இந்த முயற்சியை வரவேற்றாலும், அது முழு முயற்சியாக இருக்க வேண்டும். அவசர அவசரமாக இல்லாமல், ஆழமாக இதை செய்து முடிக்க வேண்டும். ஐந்து மாவட்டங்களில் மட்டும் இந்த சட்டத்தை அமல்படுத்தி விட்டு விட்டால், இதர மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். அதனால் முழுமையாக சட்டத்தை கொண்டு வரவேண்டும். தற்போது மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமையாக செயல்படுத்தியும் ஒப்புதல் பெறவேண்டும். ஒரு துறையில் நிபுணரை தேர்வு செய்வதில் தவறில்லை. அவர் எந்த ஜாதியாக இருந்தாலும் அவரை நியமித்துக் கொள்ளலாம். நாங்கள் தனிப்பட்ட பிராமணருக்கு எதிரானவர்கள் கிடையாது. பிராமணியத்தை தான் எதிர்க்கிறோம். அதனால் பிரசாந்த் கிஷோர் நியமனத்தில் தவறில்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment