Sunday, March 01, 2020

On Sunday, March 01, 2020 by Tamilnewstv in    

திருச்சி மன்னார்புரம் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எல்பின் எம்எல்எம் நிதிநிறுவனம். இந்நிறுவனத்தின் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சமீபத்தில் தஞ்சையில் இந்நிறுவன லீடர்கள் இரண்டு பேர் தஞ்சை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். எல்பின் சகோதரர்கள் அழகர்சாமி என்னும் ராஜா, எஸ், ஆர், கே (எ) ரமேஷ் குமார் இருவரும் நிறுவன ரகசியம் வெளியில் கசிந்து விடும் என்பதற்காக  பல கோடி ரூபாய் செலவு செய்து கைதான இருவரையும் ஜாமினில் எடுத்து உள்ளனர்.
கிங்ஸ்லி என்பவர் கைது ஆன அன்று அழகர்சாமி என்னும் ராஜா காவல்துறையினரை மிரட்டும் வகையில் வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டார். இதை காவல் துறையினர் கண்டுக் கொள்ளவே இல்லை. தனது லீடர்களிடம் நம்மிடம் வாலாட்டும் அனைவரையும் பணத்தால் அடக்கி விட்டோம் என வீராப்பாக பேசி வருகிறார்களாம். இதற்கு காரணம் என்ன  என்று விசாரித்ததில் ஓர் உயர்  அதிகாரி அவரது மனைவி சமூக சேவையாற்றி வருகிறாராம் அதற்கு மாதம் பல கோடி ரூபாய் ELFIN சகோதரர்கள் வழங்கி வருகிறார்களாம். அந்த நன்றி விசுவாசத்தால் அந்த  உயர் அதிகாரி இவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறாராம். மேலும் எல்ஃபின்  நிறுவனத்தின் முக்கிய கோப்புகள் அனைத்தும் அந்த உயர் அதிகாரி தனது கட்டுப்பாட்டில் உள்ள சில நண்பர்களிடம் கூறி சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள தங்களது விசுவாசிகளிடம் மறைத்து வைக்க ஐடியா கொடுத்துள்ளதாகவும் அதன்படி சென்னையில் மற்றும் பல இடங்களில் அந்த கோப்புகள் மறைத்து வைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவுகிறது. இவற்றை மத்திய புலனாய்வு காவல்துறை அதிகாரிகள் வந்து தேடினாலும் கோப்புகள் யார் கையிலும் மாட்டாது என உறுதியாக அந்த உயர்  அதிகாரி எல்பின் சகோதரர்களுக்கு உறுதி கூறியுள்ளாராம். மக்களின் பணத்தில் ஏமாற்றி வாழும் இவர்களை நேர்மையான காவல்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதி வெல்லுமா ? நிதி வெல்லுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

0 comments: