Monday, March 02, 2020

On Monday, March 02, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

+2 தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இன்று 2ம் தேதி ஆரம்பித்து
வரும் மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வில் 250 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள்
17823 பேர், மாணவர்கள் 14,482 பேர் என மொத்தம் 32,305 பேர் தேர்வெழுதுகிறார்கள்.
இதற்காக 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதே போல்
11 ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 4ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 26ம் தேதி
முடிவடைகிறது. இத்தேர்வை மாணவிகள் 18,049 பேர், மாணவர்கள் 15,798 பேர் என
மொத்தம் 33,847 பேர் எழுதுகின்றனர். இதற்காக 126 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. 11 ம் வகுப்பு/12 ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு
எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்காக 4 தேர்வு மையங்கள், பழைய பாடத்திட்டத்தில்
பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்காக 2 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுகளுக்கான வினாத்தாட்கள் 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில்
போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன.
10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச்
14ம் தேதி ஆரம்பித்து மார்ச் 29ம் தேதி
முடிவடைகிறது. இத்தேர்வை 457 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் 17,886 பேர் ,
மாணவர்கள் 17,798 பேர் என மொத்தம் 35,684 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வுக்காக 164
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு
எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்காக 5 தேர்வு மையங்களும், இத்துடன் சிறைக்கைதிகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிட திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஒரு தேர்வு
மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று +2 தேர்வு நடைபெறும் புனித ஜான் வெஸ்டரி பள்ளியில் உள்ள தேர்வு  மையத்தை  மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையட்டார்.

பேட்டி : சிவராசு,
மாவட்ட ஆட்சியர்


0 comments: