Monday, March 16, 2020

On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 37வது வணிகர் தின மாநாடு மே மாதம் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா
தலைமையில் நடைபெற்றது.

சிறப்புறையை
மாநிலத் தலைவர்  வெள்ளையன் வழங்கினார்.
பின்னர்  செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்த அவர்

சென்னையில் வருகிற மே 5ஆம் தேதி வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளது இதில் முதல் முறையாக அரசியல் கட்சித் தலைவர்களையும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க உள்ளோம். கட்சித் தலைவர்கள் சார்பில் யார் வந்து வேண்டுமானாலும் பேசலாம், இந்த மாநாட்டில் நாங்கள் எந்தவித கோரிக்கையும் மத்திய, மாநில அரசுக்கு வைக்க போவதில்லை, அதற்கு மாறாக சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம் இந்த முடிவுகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
காந்திய வழியில் எங்களது முடிவு இருக்கும் என கூறினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாவட்ட செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: