Monday, March 16, 2020

On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.



 சங்க தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
 மூன்று ஆண்டுகள் பணி முடித்த ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு சம்பள மற்றும் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மாதந்தோறும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். டேங்க் சுத்தம் செய்ய மாதம்  1000 ரூபாய் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: