Thursday, March 26, 2020

On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி:

திருச்சி அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து விதமான வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டண வசூல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

திருச்சி சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி- புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் அருகில் உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -தஞ்சை சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடி, திருச்சி- மதுரை ரோட்டில் விராலிமலை அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -கரூர் ரோட்டில் முக்கொம்பு அருகே உள்ள சுங்கச்சாவடி ஆகியவை வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

0 comments: