Tuesday, March 31, 2020

On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
கரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் தீவிர ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் காவல்துறை வாகனங்களில் ரோந்து வரும் காவலர்கள் தேவையின்றி யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுரை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இதையும் மீறி பலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வீதிகளில் உலா வருகின்றனர்.

 தேவையின்றி சுற்றுபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அதையும் மீறி இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உலா வந்தது. இதையடுத்து காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்த வகையில் இன்று திருச்சி மாநகரில் சுமார் 300 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு ஊரடங்கு உத்தரவை மீறியது, ஹெல்மெட் அணியாமல் வந்தது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 250-க்கும் மேற்பட்ட வழக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருச்சி கே.கே. நகரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.

0 comments: