Sunday, March 15, 2020

On Sunday, March 15, 2020 by Tamilnewstv in    
எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் பைஜி தலைமை வகித்தார்.

தேசிய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத், மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது  செய்தியாளரிடம்  மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 48 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது என்பிஆர்.க்கு எவ்வித ஆவணமும்  வழங்க வேண்டியதில்லை. 'டி' பிரிவு குடிமக்கள் என்று கணக்கெடுப்பின்போது குறிப்பிடப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார். எனினும் என்பிஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எதிராக நடைபெறும் ஒத்துழையாமை இயக்கத்தில் எஸ்டிபிஐ கட்சி பங்கேற்கும்.  தமிழக அரசு நிச்சயம் தீர்மானம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. என் ஆர் பி க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் தேசிய குடியுரிமை சட்டத்திதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் தூண்டுதலின் பேரில்தான் டெல்லியில் கலவரம் நடைபெற்றது. இது முற்றிலும் இனக்கலவரம் தான். இதில் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு எவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்டதோ அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா பாதுகாப்பு வேளாண் மண்டலத்தை வரவேற்கிறோம். அதேசமயம் இதில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்த்து முழுமையான ஒரு சட்டமாக கொண்டுவர வேண்டும். மேலும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இதர பகுதிகளுக்கான நகராட்சி, மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றார்.

0 comments: