Thursday, June 03, 2021

On Thursday, June 03, 2021 by Tamilnewstv in    

 திருச்சி

"ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட்" சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.


கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக மக்களை தாக்கி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வற்ற ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.  பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது


அதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடி வாழ்ந்து வருகின்றனர். அப்படி கஷ்டப்படும் 100 மேற்பட்ட ஏழை எளிய நபர்களுக்கு திருச்சியைச் சேர்ந்த ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் சார்பில் நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.


திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் 120 பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், பிஸ்கட், சேமியா அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் தினேஷ்பாபு, காவல்துறை உதவி ஆய்வாளர் மதியழகன், தர்கா ஜமாத் தலைவர் ஜாகீர் உசேன், என்டிஎஃப் மாநிலச் செயலாளர் ஆல்பா நசீர், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இலியாஸ், ஆசிரியர் காஜாமைதீன், எஸ்டிபிஐ முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் இப்ராஹிம், தலைவர் முகமது ரசூல், பொருளாளர் சாகுல் ஹமீது, அறங்காவலர்கள் சையது முஸ்தபா, அப்துல்லா, பாஸ்கர், ஜோ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

நலிவடைந்த பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நிவாரண பொருட்களை  பெற்று சென்றனர்.

0 comments: