Tuesday, September 07, 2021

 திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர்  கண்டன ஆர்ப்பாட்டம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் 
டெல்லியில் காவலர் சபியா கொல்லப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில்
திருச்சி மாவட்ட தலைவர் குலாம்ரசூல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.


 கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு டெல்லியில் பெண் காவலர் சபியா சமூக விரோதிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரின் உடல் உறுப்புகளை வெட்டியெறிந்த கயவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக கோரியும் 
சபியா கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்ட கலந்து கொண்டனர்.


சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பள்ளி மாணவி தவ்பீக் சுல்தானா பற்றி கேட்டதற்கு பேட்டியளித்த
பேச்சாளர் ஜமாத்உஸ்மாயின்  அவர்கள் என்னவென்று தெரியாமலே திகைத்து நின்றார்அருகில் இருந்த மாவட்டத் தலைவர் குலாம் முஹம்மத் கூறுகையில் எத்தனையோ முறைகள் நாங்கள் கேட்டோம் இன்றும் தவ்ஹீத் சுல்தானா அதற்கு முறையாக நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தார் தமிழகத்தில் திருச்சியில் சிறுமியை தவ்ஹீத் சுல்தானா கொலை வழக்கு தமிழகத்தையே திரும்பிப்பார்க்க செய்தது இன்றும் யாராலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது


பேட்டி : 
ஜமாத்உஸ்மாயின்
பேச்சாளர்

0 comments: