Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by Unknown in ,    
வியட்நாம், ஒப்பந்தங்கள் கையெழுத்து, பிரணாப் முகர்ஜி, விமான சேவை, இயற்கை எரிவாயு

4 நாள் அரசு முறைப் பயணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்நாம் சென்றுள்ள நிலையில் அங்கு 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதில் இந்தியா - வியட்நாம் இடையே எண்ணெய், இயற்கை எரிவாயு இறக்குமதி, நேரடி விமானச் சேவை உள்ளிட்ட அம்சங்களும் அடங்கும்.

தலைநகர் ஹனோயில் வியட்நாம் அதிபர் துரூங் தன்சாங்கும், பிரணாப் முகர்ஜியும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், தென் சீனக் கடற்பகுதியில் நடைபெற்று வரும் எண்ணெய் துரப்பணப் பணியை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளது.

மேலும், அரசியல், ராணுவம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான தொடர்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக, வியட்நாம் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்குவதற்காக 10 கோடி டாலரை இந்தியா கடனாக வழங்குவது என்றும் முடிவானது. இந்தியா - வியட்நாம் இடையே நவம்பர் 5 ஆம் தேதி முதல் நேரடி விமானப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து வியட்நாமின் ஹோசிமின் நகருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் விமானச் சேவையைத் தொடங்கவ உள்ளது
On Wednesday, September 17, 2014 by Unknown in ,    
எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்நோய் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தம் உபயோகப்படுத்தப்படுவதாகவும், இதனால் அதிக தேவை இருக்கும் அந்த ரத்தம்  கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
Blood Of Ebola Survivors Now In High Demand In ‘Black Market’

 
ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் பாதிக்கப்பட்ட சிலர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர். இவ்வாறு குணமடைந்துள்ளவர்களின் ரத்தத்தில் எபோலா வைரஸை எதிர்த்து வீழ்த்தும் தன்மை உள்ளதால், அவர்களின் ரத்தத்தை நோயுற்றவர்களுக்கு பயன்படுத்தி அவர்களை குணப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
எனவே, குணமடைந்தவர்களின் ரத்தத்திற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தேவை அதிகமாக  ஏற்பட்டுள்ளதாகவும்,  அந்த ரத்தம்  கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
 
லைபீரியாவில் பணிபுரிந்து கொண்டிருந்த அமெரிக்க மருத்துவரும், சமூக சேவகருமான ரிச்சர்ட் ஸக்ராவை அண்மையில் எபோலா நோய் தாக்கியது. 
 
இவருக்கு சிகிச்சை மேற்கொள்ள, எபோலா நோய் தாக்கி சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த கென்ட் பிரான்ட்லி என்பவரின் ரத்தம் பயன்படுத்தப்பட்டது
On Wednesday, September 17, 2014 by Unknown in ,    

அகமதாபாத் வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்


 
சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தடைந்தார்.

அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை புரிந்துள்ளனர்.

ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தனி விமானத்தில் ஜின்பிங் வந்திறங்கினார்.

அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரை மாநில ஆளுநர் ஓ.பி.கோலி, முதலமைச்சர் ஆனந்தி பென் படேல், வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

முன்னதான இலங்கை சென்றிருந்த அவர் கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார்
On Wednesday, September 17, 2014 by Unknown in ,    


மாயமான மலேசிய விமானத்தை தேடும் குழுவினர் இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8–ந்தேதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லாமல் இருந்தது. தொடர்ந்து மர்மமே நீடித்து வருகிறது. தற்போது இவ்விவகாரத்தில் சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மாயமான மலேசிய விமானத்தை தேடும் குழுவினர் இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். கடலில் கண்டுபிடிக்கப்பட்டு பொருட்கள் விமானத்தின் உதிரி பாகங்கள்தானா என்பதை அறிய அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாக ஆஸ்திரேலியா போக்குவரத்து துறை அமைச்சர் லியோ டியாங் லாய் தெரிவித்துள்ளார். கண்டுபிடிக்கப்பட்டு உள்ள 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாக தெரியவில்லை எனபதினாலே இந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் உதிரி பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவின் பர்கோ டிஸ்கவரி ஷிப் தேடுதல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு உதவியாக  மலேசியாவின் கோ பீனிக்ஸ் என்ற கப்பலும் தேடுதல் வேட்டைக்கு செல்கிறது. மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க இந்தியப் பெருங்கடலில் இதுவரை ஆய்வு செய்யாத ஆழ்கடல் பகுதிகளையெல்லாம் ஆஸ்திரேலிய தேடுதல் அணி ஆய்வு செய்து வருகிறது. மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்திய பெருங்கடல் அடித்தரை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் 2000 மீட்டர்கள் உயரமுள்ள எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தொடர்ந்து 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
On Wednesday, September 17, 2014 by Unknown   

திண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.


இப்படியும் ஒரு கொடூரக் கணவர்.. அடுத்தடுத்து 10 பிள்ளை பெற்ற பெண்.. 11வது பிரசவத்தில் பலி!

இவரது மனைவி சித்ரா. இவருக்கு 16 ஆவது வயதில் மணிகண்டனுடன் திருணம் நடந்தது.

10 குழந்தைகள்:

இவர்களுக்கு 4 மகன்கள், 6 மகள்கள் என மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர்.

மீண்டும் கர்ப்பம்:

இந்நிலையில் 11 ஆவது முறையாக சித்ரா கர்ப்பமானார். ஆனால் கர்ப்பகாலத்தில் எடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சத்தான உணவுகள் எதுவும் உட்கொள்ளவில்லை.

வயிற்றில் இறந்த குழந்தை:

இதனால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது. இது தெரியாமல் சித்ரா வீட்டில் எப்போதும் போல் வேலை பார்த்து வந்தார்.

பிரசவ வலி என்று சந்தேகம்:

சம்பவத்தன்று அவருக்கு திடீரென வலி ஏற்பட்டது. பிரசவ வலி வந்துள்ளதாக நினைத்து அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தாயும் பரிதாப பலி:

ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வயிற்றில் குழந்தை இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தை வெளிவந்தவுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்மதிக்காத கணவர்:

சித்ரா குடும்ப கட்டுப்பாடு செய்ய தயாராக இருந்தபோதிலும் அவரது கணவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

கணவருக்காவது செய்திருக்கலாம்:

இது குறித்து முன்பே தெரிந்திருந்தால் மணிகண்டனுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்திருப்போம் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

சோகத்தில் கிராம மக்கள்:

நாகரீகம் வளர்ந்த இந்த காலத்திலும் 35 வயதில் 10 குழந்தைகளை பெற்ற பெண் சரியான விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

On Wednesday, September 17, 2014 by Unknown in ,    
திருப்பூர்:திருப்பூரில் டிசம்பர் இறுதிக்குள் வியாபார கடைகள் மற்றும் வீடுகளை நைஜீரியர்கள் காலி செய்யவேண்டும் என திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர் அசோசியேஷன் சார்பில் நேற்று நடந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர் அசோசியேஷன் சார்பில் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு செயலாளர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார். தலைவர் சுந்தரம், துணை தலைவர் குமார், பொருளாளர் கந்தசாமி, துணை செயலாளர் சித்திக், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், திருப்பூரில் வசிக்கும் நைஜீரியர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. எனவே டிசம்பர் இறுதிக்குள் நைஜீரியர்கள் வியாபார கடைகள், வீடுகள் மற்றும் கம்பெனிகளை காலி செய்ய வேண்டும், நைஜீரியர்கள் பனியன் துணிகளை வாங்கி செல்லுவது மட்டுமே நடைபெற வேண்டும், மேலும் கடந்த ஆண்டு காதர் பேட்டையில் கடைகளை காலி செய்து விட்டு சரக்குகளை வாங்கி செல்லும் வர்த்தகர்களாக வந்து செல்லுவதாக உறுதியளித்து நைஜீரியர்கள் கடைகளை காலி செய்தனர். அதன் பிறகு புதிதாக வந்த நைஜீரியர்கள் மீண்டும் கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு நடக்காவிடில், காதர் பேட்டை வியாபாரிகள் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு நடத்தப்படும், தற்போது காதர் பேட்டைக்குள் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாக்கடைகள் தூர்வாரப்படாமலும், தார்சாலைகள், மின் விளக்கு சரி செய்யப்படாமலும் உள்ளது.  இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
On Wednesday, September 17, 2014 by Unknown in ,    
 




திருப்பூர், : திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி தலைமறைவானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக் டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் சிலுக்குவார்ப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (52). இவர், தனது குடும்பத்துடன் திருப்பூர் பாளையக்காடு, சஞ்சய் நகர் பகுதியில் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகிறார். இவர், தனது மனைவி பரிமளா பெயரில், கடந்த 15 வருடங்களாக பலகார சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை வாரம், மாதம் என பணத்தை வசூல் செய்து ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக தெரிகிறது. இதில், அப்பகுதியில் உள்ள கோல் டன் நகர், சஞ்சய் நகர், சூர்யா காலனி, ஆர்.எஸ் புரம் ஆகிய பகுதிகளில் இரு ந்து 100க்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் ஏலச்சீட்டு மூலமாக பணம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த வருடம் ஏலச்சீட்டு முடிவடைந்து, பலநாட்களாகியும் பாலசுப்ரமணி பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளார். மேலும் சீட்டு போட்டவர்கள் பணம் கேட்கும் போதெல்லாம் ஒரு மாதத்தில் தந்து விடுவதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் வீட்டைகாலி செய்து விட்டு பாலசுப்ரமணி தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து, ஏலச் சீட்டு நடத்தி மோ சடியில் ஈடுபட்டு தலைமறைவான பாலசுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
On Wednesday, September 17, 2014 by Unknown in    


மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் கொளத்துரை சேர்ந்தவர் மேகலா. மேகலா மாடு வளர்ந்து வருகிறார். கடந்த மாதம் நிறைமாதமாக கர்ப்பிணியாக இருந்த பசு ஒன்று கன்று ஈன்றது. அந்த கன்று அதிசயமாக மூன்று கண்களுடன் பிறந்தது. இதனையடுத்து இதுதொடர்பான தகவல் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரவியது. இதனையடுத்து அப்பகுதிவாசிகள் விரைந்து வந்து கன்றுகுட்டியை பார்த்து செல்கின்றனர். கன்றுகுட்டி நெற்றிக் கண் உள்ளிட்ட மூன்று கண்களுடன் உள்ளதால் அதனை இந்து கடவுள் சிவனின் அவதாரம் என்று கருதி மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

சிவனின் அவதாரமக கருதப்படும் அந்த கன்றுவுக்கு அப்பகுதி மக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். கன்றுகுட்டியின் படம் அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவியுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்துவந்து சில சிவன் அவதாரமாக கருதப்படும் கன்றுவை வழிபாடு செய்து வருகின்றனர். "நாம் இந்த கன்று வழிபாட்டால் கிராம மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்புகிறோம்." என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


ஷர்மிளா என்ற இளம்பெண் கூறுகையில், இந்த கன்று மூன்று கண்களுடன் பிறந்துள்ளது. எனவே நாங்கள் கன்றுவை இந்து கடவுள் சிவன் என்று நம்புகிறோம். கடவுள் சிவனுக்கும் மூன்று கண்கள், அவர் இங்கே பிறந்துள்ளார் என்று நம்புகிறோம். என்று தெரிவித்துள்ளார். இது எங்களுடைய கடவுள் என்பதினாலே நாங்கள் பல்வேறு கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பயணம் செய்து கன்றுவை வழிபாடு செய்கிறோம். என்று அவர் தெரிவித்துள்ளார். 
On Wednesday, September 17, 2014 by farook press in ,    


திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனுக்கு ஆதரவாக  திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனநதன் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர், பொதுமக்கள் இரு சக்கர வாகன பேரணியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டனர். திருப்பூர் பார்க் ரோடு எம்.ஜி. ஆர் சிலை அருகில் துவங்கிய இந்த பேரணியை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்து இரு சக்கர வாகனத்தில் சென்றார். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வேட்பாளர் எம்.கண்ணப்பன் உள்ளிட்டோர் பேரணியில் வாகனம் ஒட்டி சென்றனர். திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் வீதி, புதுமார்க்கட் வீதி, காமராஜர் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் இந்த பேரணி சென்றது. இதில் மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்டவர்களும் தம்பி மனோகரன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஏ.எஸ்.கண்ணன், சி.எஸ்.கண்ணபிரான், சடையப்பன், ராஜேஷ்கண்ணா, புலவர் சக்திவேல், கேபிள் பாலு, ராஜ்குமார், ஈஸ்வரமூத்தி ஆகியோர் உலபாத் பலர் கலந்து கொண்டனர்.