Thursday, September 18, 2014
உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்டரேக்ட் தொடக்க விழா தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் வக்கீல் பி.ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ந.முத்துக்குமார் வரவேற்றுப்பேசினார். இன்டரேக்ட் சங்கத்தை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பிரிசில்லா சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். சங்க தலைவராக அருண், செயலாளராக ஏசுராஜ் ஆகியோர் பதவி ஏற்றனர். முடிவில் தேஜஸ் ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.நாகநாதன் நன்றி கூறினார்.
Wednesday, September 17, 2014
திருப்பூர்,செப்.17[
திருப்பூரில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 17 அமைச்சர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை யொட்டி பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் முதல் முறையாக சந்தித்த இடமான ரெயில் நிலையம் அருகில் உள்ள புஷ்பா தியேட்டர் அருகில் ரவுண்டாணாவில் அமைக்கபபட்டிடிருந்த அவரது திருவுருவ படத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன்,சமுக நலத்துறை அமைச்சர் ப.வளர்மதி,உயர்க்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்,உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி,கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, கைத்தறி மற்றும் துணி நூல்ததுறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், செய்தித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுசுழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம்,பிற்படுத்தப்பட்டோதிருப்பூரில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 17 அமைச்சர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாமன்ற உறுப்பினர்கள் உமா மகேஸ்வரி வேலுசாமி, சிணசாமி, சி.பி.வசந்தமணி, கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் நா.சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, சி.எஸ்.கண்ணபிரான், பி.கே.எஸ்.சடையப்பன், ராஜ்குமார், அசோக்குமார்,அன்னபூரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க விசாச் சிக்கல்கள் குறித்து, சென்ற வாரக் கட்டுரையில்
அலசினோம். அதன்பின் இணையக் குழுக்களில் அது குறித்துப் பலத்த விவாதம்
நடைபெற்றது. அதனால் என் நண்பர்கள், அறிந்தவர்களின் அனுபவங்களைத் தொகுத்து
அளிப்பது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுவதால் இப்பதிவு.
மாணவனாக இருந்த காலத்தில் அமெரிக்கா வந்ததால் எப்1 எனும் மாணவர் விசாவின்
சிக்கல்கள் குறித்து அறிய முடிந்தது. இங்கே கல்லூரிகளில் இரட்டைக் கட்டண
முறை அமலில் உண்டு. இதன்படி பல்கலைக்கழகம் இருக்கும் மாநிலங்களின்
குடிமக்களுக்குக் குறைந்த கட்டணமும், வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்களுக்கு
அதிக கட்டணமும் உண்டு. இந்திய மாணவர்கள் இப்படி அதிக கட்டணம் கட்டும் சூழல்
உருவானதுடன், அவர்கள் படிக்கும் காலத்தில் வெளியே பணிபுரிய தடையும்
இருப்பதால் அவர்களுள் பலர் சட்ட விரோதமாக இந்திய உணவகம், இந்திய மளிகைக்
கடைகள், பெட்ரோல் பங்குகள் (இவற்றில் பெரும்பாலானவை இந்தியர் நடத்துபவை)
ஆகியவற்றில் பணியாற்றுவார்கள்.
இவையெல்லாம் சட்டப்பூர்வமான வேலை இல்லை என்பதால் இவர்களுக்குக் குறைந்த
சம்பளமே வழங்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ஏழு டாலர் குறைந்தபட்ச கூலி
என்றால் இவர்களுக்கு ஐந்து டாலர் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால் இதிலேயே
எப்படியும் மாத வாடகை, உணவுச் செலவுகளை ஈடுகட்டிவிடுவார்கள். அவ்வப்போது
குடியேற்றத் துறை அதிகாரிகள் ரெய்டு வரும் அபாயம் இருந்தாலும், பல
மாணவர்கள் சட்ட விரோதமாக இதில் ஈடுபடுவதைக் காணலாம்.
அமெரிக்கப் பெட்ரோல் பங்குகளில் பணிபுரிவதில் உள்ள சிக்கல் என்னவெனில்
அங்கே அடிக்கடி கொள்ளை நடப்பதே. இரவில் காரில் துப்பாக்கியுடன் வந்து
இறங்குவார்கள். எல்லாப் பெட்ரோல் பங்குகளிலும் உணவு, ஸ்னாக் விற்கும்
கடைகள் இருக்கும். கல்லாவில் இருக்கும் நூறு, இருநூறு டாலரைக் கொடுத்தால்
பேசாமல் போய்விடுவார்கள். எதிர்த்துச் சண்டை போட்டால் சுட்டுவிடுவார்கள்.
பெட்ரோல் பங்குகளில் பணிபுரிவதில் இத்தகைய ரிஸ்க் இருப்பதால் அமெரிக்கர்கள்
அதிகமாக இதைச் செய்வதில்லை. இந்திய மாணவர்கள் பலர் செய்கிறார்கள்.
அமெரிக்கப் பெட்ரோல் பங்குகள் பலவற்றையும் குஜராத்திகள், குறிப்பாகப்
பட்டேல்கள் எடுத்து நடத்துவதைக் காணலாம்.
பல்கலைக்கழகக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த, மிகப் பெரும் தொகை
தேவைப்படும். ஊரில் எப்படியோ போலியாக வங்கி பேலன்ஸ், சொத்துக் கணக்கு
எல்லாம் காட்டி விசா வாங்கிவிட்டாலும் இக்கட்டணத்தைச் செலுத்தப் பணம்
இருக்காது. எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் இதற்குப் பயந்து வயதில் மூத்த
அமெரிக்க பெண் ஒருவரைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான். அவருக்கு சுமார் 60
வயது இருக்கும். படிக்கும் காலம் முழுவதும் அவர் வீட்டில் தங்கி, அவருடன்
காரில் போய், அவர் இவனது கல்விக் கட்டணம் அனைத்தையும் செலுத்தி, இவனது
செலவுகளைப் பார்த்துக்கொண்டார். ஊருக்கு வருடம் ஒரு முறை கோடையில்
போய்வரும் செலவையும் ஏற்றுக்கொண்டார். கடைசியில் டிகிரி முடித்து ஊருக்குப்
போய் அம்மா, அப்பா பார்த்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு அதன்பின்
அந்த அம்மையாருடன் எத்தொடர்பும் இல்லாமல் அவன் மறுபடி அமெரிக்காவில் வேறு
ஊருக்குப் போய், செட்டிலாகிவிட்டான். அவனைத் தேடி அந்த அம்மையார் எங்கள்
பலரையும் விசாரித்ததும் திட்டியதும் இன்னமும் நினைவில் உள்ளது.
கடந்த ஆண்டு சிரியாவில் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் உதவிப் பணியாளர் டேவிட்
ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை வெட்டி எறிந்த வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ்.
வெளியிட்டது.
முன்னதாக இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதாகக் கூறிய
பிரிட்டன் அரசு, இன்று வீடியோ உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.எஸ்.ஐ.எஸ்.-இன் இந்தக் கொடுஞ்செயலை “முற்றுமுழுதான தீமைச் செயல்” என்று சாடியுள்ளார்.
மேலும் “இந்த கொடூரக் கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்த எங்கள்
அதிகாரத்தினால் இயன்றவை அனைத்தும் செய்யப்படும். இதற்கு எத்தனை நாட்கள்
ஆனாலும் பரவாயில்லை” என்று கூறியுள்ளார்.
தலைத் துண்டிக்கப்பட்ட ஹெய்ன்ஸின் குடும்பத்திற்கு அரசு தன்னால் ஆன
உதவிகளையும் ஆதரவுகளையும் அளிக்கும் என்று பிரிட்டன் வெளியுறவுச் செயலகம்
தெரிவித்துள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர்களான ஜேம்ஸ் ஃபோலி மற்றும் ஸ்டீவன் சோல்டாஃப்
ஆகியோரின் தலைகளைத் துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த வீடியோவையும் சமீபத்தில்
வெளியிட்டது. மேலும் குர்திஷ் மற்றும் லெபனான் ராணுவ வீரர்கள் தலையைத்
துண்டித்த வீடியோக்களையும், சிரிய ராணுவ வீரர்களைக் கொன்று குவித்த
வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர் சோல்டாஃப் தலையைத் துண்டித்த வீடியோவின்
இறுதியில் பிரிட்டன் உதவிப்பணியாளர் ஹெய்ன்சை சிறிது காண்பித்து இவரது
தலையும் துண்டிக்கப்படும் என்று இஸ்லாமிக் ஸ்டேட் காண்பித்தது. ஹெய்ன்ஸ்
தலையைத் துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடுஞ்செயலை அமெரிக்க அதிபர்
ஒபாமா கடுமையாகக் கண்டித்துள்ளார்.
ஹெய்ன்ஸ் தலையைத் துண்டித்த அதே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி அமெரிக்காவுடன்
கூட்டுச் சேர்ந்தால் அழிவு இன்னும் அதிகமாகும் என்று எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் 40 ஜப்பான் நிறுவனங்கள்
இந்தியாவில் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான்
நிறுவனங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில் 40 ஜப்பான்
நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்று வந்தார். அங்கு நடந்த தொழில் அதிபர்கள் மாநாட்டில் பிரதமர் பேசிய போது, இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை அறிவதில் ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
கட்டுமானப் பொருட்கள், மின்சாரம் போன்ற துறைகளில் நடுத்தர முதலீட்டாளர்கள் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்று வந்தார். அங்கு நடந்த தொழில் அதிபர்கள் மாநாட்டில் பிரதமர் பேசிய போது, இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை அறிவதில் ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
கட்டுமானப் பொருட்கள், மின்சாரம் போன்ற துறைகளில் நடுத்தர முதலீட்டாளர்கள் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
4 நாள் அரசு முறைப் பயணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்நாம் சென்றுள்ள நிலையில் அங்கு 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில் இந்தியா - வியட்நாம் இடையே எண்ணெய், இயற்கை எரிவாயு இறக்குமதி, நேரடி விமானச் சேவை உள்ளிட்ட அம்சங்களும் அடங்கும்.
தலைநகர் ஹனோயில் வியட்நாம் அதிபர் துரூங் தன்சாங்கும், பிரணாப் முகர்ஜியும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், தென் சீனக் கடற்பகுதியில் நடைபெற்று வரும் எண்ணெய் துரப்பணப் பணியை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளது.
மேலும், அரசியல், ராணுவம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான தொடர்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக, வியட்நாம் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்குவதற்காக 10 கோடி டாலரை இந்தியா கடனாக வழங்குவது என்றும் முடிவானது. இந்தியா - வியட்நாம் இடையே நவம்பர் 5 ஆம் தேதி முதல் நேரடி விமானப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து வியட்நாமின் ஹோசிமின் நகருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் விமானச் சேவையைத் தொடங்கவ உள்ளது
எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்நோய்
பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தம் உபயோகப்படுத்தப்படுவதாகவும்,
இதனால் அதிக தேவை இருக்கும் அந்த ரத்தம் கள்ளச்சந்தையில்
விற்கப்படுவதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் எபோலா நோய்
பாதிக்கப்பட்ட சிலர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர். இவ்வாறு
குணமடைந்துள்ளவர்களின் ரத்தத்தில் எபோலா வைரஸை எதிர்த்து வீழ்த்தும் தன்மை
உள்ளதால், அவர்களின் ரத்தத்தை நோயுற்றவர்களுக்கு பயன்படுத்தி அவர்களை
குணப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, குணமடைந்தவர்களின் ரத்தத்திற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தேவை அதிகமாக
ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ரத்தம் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும்
உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
லைபீரியாவில் பணிபுரிந்து கொண்டிருந்த அமெரிக்க மருத்துவரும், சமூக சேவகருமான ரிச்சர்ட் ஸக்ராவை அண்மையில் எபோலா நோய் தாக்கியது.
அகமதாபாத் வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை புரிந்துள்ளனர்.
ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தனி விமானத்தில் ஜின்பிங் வந்திறங்கினார்.
அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரை மாநில ஆளுநர் ஓ.பி.கோலி, முதலமைச்சர் ஆனந்தி பென் படேல், வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
முன்னதான இலங்கை சென்றிருந்த அவர் கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார்
சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8–ந்தேதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லாமல் இருந்தது. தொடர்ந்து மர்மமே நீடித்து வருகிறது. தற்போது இவ்விவகாரத்தில் சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை தேடும் குழுவினர் இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். கடலில் கண்டுபிடிக்கப்பட்டு பொருட்கள் விமானத்தின் உதிரி பாகங்கள்தானா என்பதை அறிய அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாக ஆஸ்திரேலியா போக்குவரத்து துறை அமைச்சர் லியோ டியாங் லாய் தெரிவித்துள்ளார். கண்டுபிடிக்கப்பட்டு உள்ள 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாக தெரியவில்லை எனபதினாலே இந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் உதிரி பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவின் பர்கோ டிஸ்கவரி ஷிப் தேடுதல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு உதவியாக மலேசியாவின் கோ பீனிக்ஸ் என்ற கப்பலும் தேடுதல் வேட்டைக்கு செல்கிறது. மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க இந்தியப் பெருங்கடலில் இதுவரை ஆய்வு செய்யாத ஆழ்கடல் பகுதிகளையெல்லாம் ஆஸ்திரேலிய தேடுதல் அணி ஆய்வு செய்து வருகிறது. மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்திய பெருங்கடல் அடித்தரை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் 2000 மீட்டர்கள் உயரமுள்ள எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தொடர்ந்து 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...


