Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் நேற்று 61 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது.
34 பேர் போட்டியின்றி தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் 56 உள்ளாட்சி பதவி உள்பட தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28–ந் தேதி தொடங்கி கடந்த 4–ந் தேதி வரை நடந்தது. வேட்பு மனு பரிசீலனை முடிந்து, மனுக்கள் கடந்த 8–ந் தேதி வரை வாபஸ் வாங்கப்பட்டன. இதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் நகராட்சி 17–வது வார்டு கவுன்சிலர், 4 பேரூராட்சி கவுன்சிலர், குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரியகுமாரபாளையம் ஊராட்சி தலைவரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 28 பேரும் என்று மொத்தம் 34 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
22 பதவிகளுக்கு 72 பேர் போட்டி
திருப்பூர் மாநகராட்சியில் 2 வார்டு, பல்லடம் நகராட்சி 6–வது வார்டு, தளி பேரூராட்சி 5–வது வார்டு ஆகியவற்றில் கவுன்சிலர் பதவிக்கும், மடத்துக்குளம் பேரூராட்சி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி ஆகிய 2 பேரூராட்சி தலைவர் பதவி உள்பட மொத்தம் 22 பதவிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த 22 பதவிகளுக்கு 72 பேர் போட்டியிட்டனர்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. நகரப்பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலமும், ஊரக பகுதியில் வாக்குச்சீட்டு மூலமும் ஓட்டுப்பதிவு நடந்தது. நகரப்பகுதியில் 57.47 சதவீதமும், ஊரக பகுதியில் 63.59 சதவீதமும் என்று மாவட்டம் முழுவதும் 60.98 சதவீதம் பேர் வாக்களித்தனர். குறைந்த பட்சமாக திருப்பூர் மாநகராட்சி 22–வது வார்டில் 52.51 சதவீதமும், அதிகபட்சமாக குடிமங்கலம் ஒன்றியம் பொன்னேரி ஊராட்சி 3–வது வார்டில் 90.63 சதவீதமும் வாக்குப்பதிவானது.
பலத்த பாதுகாப்பு
பதற்றமான வாக்குச்சாவடிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் ஓட்டுப்பதிவு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. தேர்தல் பணிகளை கண்காணிக்க உள்ளூர் பார்வையாளர்களாக 10 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஓட்டுப்பதிவை கண்காணித்தனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு ஊரக பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் உத்தரவின் பேரில் 5 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 15 இன்ஸ்பெக்டர்கள், 75 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோல் மாநகர பகுதியில் 2 வார்டுகளுக்கு 2 உதவி கமிஷனர்கள் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பதிவான வாக்குகளை எண்ண 20 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஓட்டுப்பெட்டிகளும் சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன. வருகிற 22–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
On Friday, September 19, 2014 by farook press in ,    
தாராபுரம் அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அலங்கியம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
ஆடு மேய்ப்பதில் தகராறு
தாராபுரம் அருகே உள்ள உண்டாரப்பட்டியை சேர்ந்தவர் குமரவேல் (வயது50). இவருடைய மனைவி முருகாத்தாள் (45). இவர்களுக்கு சொந்தமான நிலம் பாலமரத்து தோட்டத்தில் உள்ளது. இங்கு கணவன்–மனைவி இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள். இங்குள்ள தோட்டத்தில் காய்கறி, கரும்பு மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
இவர்களின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் சொந்தமாக ஆட்டுப்பட்டி அமைத்து ஆடு வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று கருப்புசாமியின் ஆடுகள், முருகாத்தாள் தோட்டத்திற்குள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதல்
இதை பார்த்த முருகாத்தாளும், குமரவேலும் சத்தம் போட்டனர். அப்போது அங்கு வந்த கருப்புசாமிக்கும் முருகாத்தாளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது கருப்புசாமிக்கு ஆதரவாக அவருடைய மனைவி பாப்பாத்தி, மகன் ஆனந்தன், மகள் பானுமதி ஆகியோர் வந்தனர். பின்னர் இருதரப்பினரும் அங்குள்ள பொருட்களை ஒருவர் மீது மற்றொருவர் வீசி தாக்கிக்கொண்டனர். இதில் முருகாத்தாளும், கருப்புசாமியும் காயம் அடைந்தனர்.
உடனே அவர்கள் இருவரும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து முருகாத்தாள் அலங்கியம் போலீசில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு
போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரித்து, முருகாத்தாளை தாக்கியதாக கருப்புசாமி, அவருடைய மனைவி பாப்பாத்தி, மகன் ஆனந்தன் மற்றும் மகள் பானுமதி ஆகியோர் மீது கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதே போல் கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் முருகாத்தாள் மற்றும் அவருடைய கணவர் குமரவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முருகாத்தாள் கணவரின் தம்பிதான் கருப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
On Friday, September 19, 2014 by farook press in ,    
திருப்பூர்  குமரன்  ரோட்டில்  உள்ள  அரிமாசங்கத்தில்  பத்திரிகையாளர்கள் பொது  உரிப்பினர்   கூட்டம் 19/09/2014 அன்று  நடைபெற்றது. இதில் தலைவர்  R .V .சுப்ரமணியம் , செயலாளர்  தூயவன் , பொருளாளர்  பழனியப்பன் மேலும் சகபத்திரிகையாளர்கலும்  கலந்துகொண்டனர் . இதில்  துணை  தலைவராக  பணிபுரிந்த ஜோசப்  ராஜா அவர்கள் ஈரோட் டிர்க்கு பணிமாற்றம்  செய்யப்படபட்டதால்  பி .கே .முகைதீன்  அவர்கள்  சக  பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் துணை  தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.    

On Friday, September 19, 2014 by Unknown in ,    
ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நாளை வியாழக்கிழமை நடக்கவுள்ள நிலையில், இது குறித்த இரு தரப்பு பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

 
ஸ்காட்லாந்து மக்கள் தங்கள் எதிர்காலத்தை தங்கள் கைகளிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சரும், ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கான பிரசாரத்துக்கு தலைமை தாங்குபவரான , அலெக்ஸ் சால்மண்ட் கோரியிருக்கிறார்.
 
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றாலும், அது பவுண்டையே தனது நாணயமாக வைத்துக்கொள்ளும் என்று அவர் பிபிசியிடம் பேசுகையில் கூறினார்.
 
எஞ்சியிருக்கும் பிரிட்டனுடன் பவுண்டை பொது நாணயமாக வைத்துக்கொள்வது என்பது குறித்த ஒரு பொதுப் புத்தியின் அடிப்படையிலான உடன்பாடு ஒன்றை பிற பிரிட்டிஷ் அரசியல் தலைவர்களுடன் எட்டலாம் என்றும் அவர் கூறினார்.
 
ஸ்காட்லாந்து பிரிந்துபோகக் கூடாது என்று வாதாடும் அணியின் தலைவரான, அலிஸ்டர் டார்லிங், ஸ்காட்லாந்து ஐக்கிய ராச்சியத்தின் ஒரு பகுதியாகவே இருக்கவேண்டும் என்று கோருவதில் தேச பக்தியற்ற செயல் ஏதுமில்லை என்றார்.
 
போட்டி மிகவும் கடுமையாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
 
சமீபத்தில் வெளிவந்த மூன்று வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரான தரப்புக்கு சுமார் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் கூடுதல் ஆதரவு இருக்கிறது என்றும் ஆனால் இன்னும் சுமார் 8லிருந்து 14 சதவீத வாக்காளர்கள் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்றும் காட்டின.
 
'ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்'
 
இதனிடையே, இத்தகைய கருத்தறியும் வாக்கெடுப்புகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நல்லதல்ல என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் கூறியிருக்கிறார்.
 
இவை பொருளாதார மந்தநிலையையும் வறுமையையும்தான் விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.
 
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றால், அது ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திரும்ப விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்று அவர் மீண்டும் கூறினார்.
 
ஆனல் ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றால் அதன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை இழக்கக்கூடும் என்று சொல்லப்படுவதை பிபிசியிடம் பேசிய ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் நிராகரித்தார்.
 
ஓய்வு பெற்ற ராணுவத் தளபதிகள் அறிக்கை
 
ஸ்காட்லாந்து ஐக்கிய ராச்சியத்திலிருந்து பிரிந்து போவதென்பது சம்பந்தப்பட்ட எல்லோரையும் பலவீனப்படுத்தும் என்று பிரிட்டிஷ் ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வுபெற்ற 14 உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 
ஸ்காட்லாந்து மக்களுக்கு, பிரிட்டனின் 'சன்' பத்திரிகையின் மூலம் எழுதிய வெளிப்படையான கடிதத்தில், இந்த ஓய்வு பெற்ற ஜெனெரல்கள், அட்மிரல்கள் மற்றும் விமானப் படைத் தளபதிகள் , வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான கூட்டணியான ஐக்கிய ராச்சியம், இந்தப் பிரச்சினையால் உடைந்து, அதன் மூலம், ஒரு சிக்கலான உலகில், மக்களை அபாயத்தில் ஆழ்த்திவிடும் என்று கூறினர்.
 
ஆனால், ஸ்காட்லாந்து தேசியவாதிகளின் தலைவரான, அலெக்ஸ் சால்மண்ட், இந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் தலையீட்டை விமர்சித்தார். தங்களது ராணுவ சேவையை அரசியல் காரணங்களுக்காக இவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றார் சால்மண்ட். இந்த சேவை என்பது ஜனநாயகத்துக்கு, மகாராணிக்குமானது என்றார் அவர்.
On Friday, September 19, 2014 by Unknown in ,    



நைஜீரிய நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் பல பெண்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.

நைஜீரியாவை சேர்ந்த போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு அந்நாட்டில் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் அப்பாவி கிராம மக்களைக் கொல்வது, பெண்களைக் கடத்திச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னதாக ஒரு பள்ளி விடுதிக்குள் நுழைந்து சுமார் 300 மாணவிகளைக் கடத்தி சென்றனர். அவர்களின் நிலைமை என்ன ஆனது என்று எந்த தகவலும் புலப்படவில்லை.

இந்நிலையில் குலாக் என்ற நகரத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு அவர்கள் திடீர் தாக்குதலிலும் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பல பெண்களைக் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் திருமணமான பெண்களும் அடங்குவர்.

இவ்வாறு கடத்தப்படும் பெண்களை தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைத்தல் போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
On Friday, September 19, 2014 by Unknown in ,    

தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக, இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் கொடுத்தது நியூயார்க் நகர நிர்வாகம்.

இந்தியாவைச் சேர்ந்த கிருத்திகா பிஸ்வாஸ் என்ற மாணவி கடந்த 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள குவீன்ஸ் ஜான் பிரவுன் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.

அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரது வகுப்பு ஆசிரியருக்கு ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பியதான சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் அவரை கைது செய்து ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த கிருத்திகா தன்மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக 1.5 மில்லியன் டாலர்கள் கோரியிருந்தார்.

இந்த வழக்கு குறித்த விசாரணைகள் முடிவடைந்து தற்போது தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் கோயெல்டல் கிருத்திகாவிற்கு நஷ்ட ஈடாக 2,25,000 டாலர் தொகையினை நியூயார்க் நகர நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் கிருத்திகா மதிப்பு மிக்க மாணவியாக இருந்துள்ளார் என்றும் அவர்மீது தவறான குற்றம் சுமத்தப்பட்டது என்பதையும் நீதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்தியாவில் இருக்கும் கிருத்திகா இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த வழக்கு சம்பந்தமான தனது அனைத்து புகார்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதாக அறிவித்துள்ளார்.

தனக்கு இந்த வழக்கில் உதவி புரிந்த இந்திய அமெரிக்க சமூகம், முன்னாள் இந்தியத் தூதுவர்கள் பிரபு தயாள், மீரா ஷங்கர் மற்றும் தன்னுடன் துணை நின்ற தனது பள்ளித் தோழிகள், வகுப்பு ஆசிரியர்கள் என்று அனைவருக்கும் தனது நன்றியையும் அவர்  வெளியிட்டுள்ளார்
On Friday, September 19, 2014 by Unknown in ,    


நமது இந்திய நாட்டிற்கான புதிய அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
அமெரிக்க வாழ் இந்தியரான ரிச்சர்ட் வர்மா, 2009 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்தார்.
 
மேலும் இவர்,இந்தியாவின் அமெரிக்க தூதராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். இப்பொறுப்பில் இருந்த நான்சி பாவெல், கடந்த மார்ச் மாதம் பதவி விலகியதை தொடர்ந்து, தற்போது ரிச்சர்டு வர்மா புதிய அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த  உத்தரவை அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
On Friday, September 19, 2014 by Unknown in ,    
திருப்பூர்:மூன்று ஆண்டுகளாக விண்ணபித்தும், குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் விதவை உதவி தொகை கிடைக்காததால், மனமுடைந்த விதவை பெண், நேற்று தனது நான்கு குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.    திருப்பூர் காங்கயம் ரோடு பூலவாரி சுகுமார் நகரை சேர்ந்தவர் பானுமதி (30). இவரது கணவர் முருகன். இவர்களுக்கு சபரீஸ் (13), முத்துமார் (10) என்ற இரண்டு மகன்களும், அங்குலட்சுமி (8), சீதாலட்சுமி (4) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில்Êசமையல் தொழில் செய்து வந்த முருகன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து, நான்கு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்ற பானுமதி, பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டு, தனது குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், பானுமதி குடும்ப சூழ்நிலை காரண மாக கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொ கை கேட்டு விண்ணப்பித்து வருகிறார். ஆனால், இதுவ ரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைக்க பெறவி ல்லை. இதையடுத்து, கலெக் டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக் கள் குறைதீர் கூட்டத்திலும், பலமுறை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். ஆனாலும், இதுவரை அவருக்கு விதவை உதவி தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்து போன பானுமதி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு தனது நான்கு குழந்தைகளுடன், அவரது தந்தை அய்யாசாமியையும் அ¬ ழத்து கொண்டு கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு அளிக்க வந்திருந்தார்.
இதுகுறித்து பானுமதி கூறுகையில், எனது கணவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனது பெற்றோர் உதவியுடன் அவர்களை கஷ்டப்பட்டு வளர்த்து வருகி றேன். நான்கு குழந்தைகளும் பூலவாரி சுகுமார் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக விதவை உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து வருகிறேன். இதுவரை அதற் கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை.

இன்று (நேற்று) ஏழாவது முறையாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளேன். இந்த முறை யாவது கலெக்டர் நடவடிக்கை எடுத்து, எனக்கு விதவை உதவி தொ கை கிடைக்க உதவ வேண்டும் என்பதற்காக தான் எனது நான்கு குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளேன் என்றார்.
On Friday, September 19, 2014 by Unknown in ,    

பல பல வென  வெயில் அடிக்கும்  வேளையில் மின் விளக்கு எரியும்  காட்சி  இடம் திருப்பூர் அவினாசி சாலை குமார் நகர் பஸ் நிறுத்தம்  பொதுமக்களுக்கு  சிக்கனம் செய்யும் மின்சார வாரியம்