Thursday, September 25, 2014
திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த 7–ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. உடுமலை குடிமங்கலம் கொங்கல் நகரை சேர்ந்த ஒருவர் பாசன நீரை தனியாக பைப் லைன் அமைத்து திருடுவதாக ஆர்.டி.ஓ. குணசேகரனுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடுமலை தாசில்தார் சைபுதீன் உத்தரவின் பேரில் பி.ஏ.பி. அதிகாரி தயாளான், ஆர்.டி.ஓ.க்கள் பொன்ராஜ், ராமலிங்கம், கணேஷ்., கிராம நிர்வாக அதிகாரி ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர் கொங்கல் நகரை சேர்ந்த மூர்த்தி (வயது 42) என்பதும், தனியாக பைப் லைன் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து இணைக்கப்பட்டிருந்து குழாயை அதிகாரிகள் அகற்றினர். இது குறித்து குடிமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் வையாபுரி (வயது 70). இவரது மகன் கதிரவன் (வயது 35). இவரது மகள் சந்தியா (பெர் மாற்றப்பட்டுள்ளது). சந்தியா அருகிலுள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு சந்தியாவின் தாயார் தனலட்சுமி இறந்துவிட்டார்.
அவரது இறப்புக்கு பின்னர் சந்தியா மனமுடைந்த நிலையில் இருந்தார். ஆறுதலாக சந்தியா பள்ளிக்கு சென்று வந்தார். ஆனால் அவரது தாத்தா வையாபுரி மற்றும் தந்தை கதிரவன் 2 பேரும் சேர்ந்து சந்தியாவை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அதற்கு மாறாக வீட்டில் துணி துவைக்கவும், சமையல் செய்யவும் கூறி துன்புறுத்தி வந்தனர்.
சிறுமியான சந்தியா வால் அவர்களது தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் மனஉளைச் சலுக்கு ஆளானார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கணேஷ் பாபுவை தொடர்பு கொண்ட சிறுமி சந்தியா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில் கணேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் சந்தியாவின் வீட்டில் ஆய்வு நடத்தி சந்தியாவின் தந்தை மற்றும் தாத்தாவை எச்சரித்து வந்தனர். மீண்டும் 2 நாட்கள் கழித்து ஆய்வுக்கு சென்ற போது தொடர்ந்து சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கணேஷ் பாபு உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி சந்தியாவை கொடுமைப்படுத்தியதாக கதிரவன் மற்றும் வையாபுரி மீது புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தநாயகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். புகார் உண்மை என தெரிய வந்ததை தொடர்ந்து கதிரவன் மற்றும் வையாபுரியை போலீசார் கைது செய்து உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் பேரூராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பேரூராட்சி அலுவலக கட்டிடத்தையும், வணிக வளாக கட்டிடத்தையும், நிழற்குடையையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பேரூராட்சி அலுவலகத்தில் பணிகளை தொடங்கி வைத்தார். காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முத்தூர் பேரூராட்சி தலைவர் செல்வ விநாயக முத்துக்குமார், செயல் அலுவலர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்த கொண்டனர்.
இதேபோல் புதிய நீர் தேக்க தொட்டியையும் முதல்வர் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சி கருங்கல் மேட்டில் ரூ.34.80 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முதல்வர் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் குழாயினை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று எழுதப்பட்டிருந்தது . ஜெ.ஜோசப் .மாவட்ட செயலாளர் . கணேஷ் .மாநில செயற்குழு உறுப்பினர் . பாண்டியன் நகர் தொடக்கப்பள்ளி மாவட்ட ஆட்சியருக்கு தங்களுக்கு நேரிடும் குற்றங்களை அந்த மனுவின் மூலம் தெரிவித்தனர் . மதிபிற்குரிய ஐயா . பொருள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் BLO .பனி பயுற்சி குழந்தைகள் கல்வி நலன் பாதிப்பு தவிர்ப்பு வழங்கி மாற்று ஏற்பாடு செய்திட இயக்க வேண்டுகோள் சார்பு . வணக்கம் 22/09/2014.முதல் 26/09/2014.முடிய முதல் பருவத்தேர் வினை ஒட்டி மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு வாய்மொளித்தேர்வு மதிப்பீட்டு பணிகள் ஆகிய தொடர் செயல்பாடுகளில் ஆசிரியர்கள் ,தங்களை ஆட்படுதிக்கொல்லவெண்டிய சூழ்நிலையில் உள்ளோம் . எங்களது கல்வித்துறையின் பல்வேறு ஆணைகள் மூலமாக புள்ளிவிவரங்கள் அவசர அவசரமாக தயாரிக்க வேண்டிய கட்டாய நிலையுள்ளது . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது .
அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், சீன அதிபரின் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சீன அதிபர் ஜி ஜின் பிங் 3 நாள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பான செய்தியை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் ஒரு நாள் மாலையில் ஒளிபரப்பியது.
அப்போது, செய்தி வாசிப்பாளர் சீன அதிபர் பெயரின் முதல் இரு ஆங்கில எழுத்துக்களான ‘எக்ஸ்ஐ’ என்பதை ‘ஜி’ என உச்சரிப்பதற்குப் பதிலாக ‘எக்ஸ்ஐ’ என்ற எழுத்துக்களை ‘11‘ (இலெவன்) என்னும் ரோமானிய எண்ணைக் குறிக்கும் எழுத்துக்கள் என்று கருதி ‘லெவன் ஜின்பிங்’ என வாசித்து விட்டார்.
இது குறித்து தூர்தர்ஷன் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சீன அதிபரின் பெயரை தவறாக உச்சரித்த அந்த செய்தி வாசிப்பாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவர் தற்காலிக செய்தி வாசிப்பாளர் என்றும், வழக்கமான செய்தி வாசிப்பாளர் விடுப்பில் இருக்கிறபோது, இத்தகைய தற்காலிக செய்தி வாசிப்பாளர்களின் பணி பயன்படுத்தப்படுகிறது என்றும் தூர்தர்ஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் போராட்டங்களில் கலந்துகொள்ளச் செல்லும் குடிமக்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஈராக்கில் 15 நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிரியாவின் ஒரு பகுதியையும் கைப்பற்றி இரண்டையும் இணைத்து இஸ்லாமிய அரசாக அறிவித்துள்ளனர். இதனால் அண்டை நாடுகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து போர் புரிவதற்குப் பல்வேறு நாட்டை சேர்ந்த ஜிகாதிகள் ஈராக் சிரியாவிற்குச் செல்கின்றனர்.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவிலிருந்து அதிகமான ஜிகாதிகள் செல்கின்றனர். இதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்புச சட்டம் ஒன்றைக கொண்டு வந்துள்ளது. இஸ்லாமிய போராளிகள் எழுப்பிவரும் உள்நாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் போராட்டங்களில் கலந்து கொள்ளச செல்லும் குடிமக்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு புதிய பயங்கரவாதத் தடுப்புச சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
செய்தி ஊடகங்களின் தகவல் படி இந்த புதிய சட்டம் புதன்கிழமை செனட் சபையில் அறிமுகபடுத்தப்பட்டது. இந்தச சட்டப்படி ஆஸ்திரேலிய குடிமகன் செய்யும் போது அந்த அரசாங்கத்தால் போகக் கூடாத பகுதிக்கு செல்வது சட்டபடிக் குற்றமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள், கூட்டாளி அரபு நாடுகளின் பங்கேற்புடன் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) ஆயுததாரிகளுக்கு எதிராக 14 இடங்களில் விமான குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமைக் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.
சிரியாவின் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள இஸ்லாமிய அரசு இயக்கத்தின் பயிற்சி வளாகங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், வாகனங்கள், சேமிப்புக்கூடங்கள் போன்றவை இத்தாக்குதலில் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன என்று அது தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய அரசு இயக்கத்தினரின் தலைமையகம் அமைந்துள்ள சிரியாவின் வடகிழக்கிலுள்ள ரக்காவின் இலக்குகளும் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் கூறுகின்றன. இத்தாக்குதல்களில் குறைந்தது 20 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனிலிருந்து செயல்படுகின்ற சிரியா நிலவர கண்காணிப்புக் குழு கூறுகிறது.
மேற்குலக நலன்களுக்கு எதிராக விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுக்கொண்டிருந்த அல்கொய்தா மூத்த உறுப்பினர்களின் வலையமைப்பு மீதும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் கட்டுப்பாட்டுத் தலலமையகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.4 லட்சம் கோடி முதலீட்டைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற செப், 26 ஆம் தேதி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார். இந்தத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 25 ஆம் தேதியே பிரதமர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். ஜெர்மனி தலைநகர் பிராங்பர்ட் நகரில் ஓய்வு எடுத்து விட்டு பயணத்தைத் தொடருவார். பின்னர், 26 ஆம் தேதி நியூயார்க்கில் தரை இறங்குவார். அன்றிரவு நியூயார்க்கில் தங்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து 27 ஆம் தேதி மோடியின் 6 நாள் அமெரிக்க சுற்றுபயணம் தொடங்குகிறது. இதில் நியூயார்க்கில் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட இரட்டைக் கோபுரம் பகுதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்துவார். பின்னர், அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசுவார். பேச்சு வார்த்தையில் அமெரிக்கா – இந்தியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின் உற்பத்தி திட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ. 7 கோடி செலவில் உபகரணங்கள் நிறுவப்பட வேண்டும். ஆகையால் 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.4 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும். இத்திட்டத்தை அமெரிக்கா உதவியுடன் செயல்படுத்த பிரதமர் மோடி மிகவும் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாநகராட்சி 45- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.,க. வேட்பாளர்எம்.கண் ணப்பனுக்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம் ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன், ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசு தன், வேலுமணி, நீதிராஜன, ரத்தினகுமார், பி.லோகநாதன் பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...


