Tuesday, September 30, 2014
ஜப்பானில் சனிக்கிழமையன்று எரிமலை ஒன்று திடீரென வெடித்து சிதறி, அதற்கு அருகில் நூற்றுக்கணக்கான மலையேறிகள் அகப்பட்டுக் கொண்டதில், 30க்கும் அதிகமானோர் இறந்துவிட்டதாக இப்போது நம்பப்படுகின்றது.
மீட்புப் பணியாளர்கள், ஒண்டாகே எரிமலை உச்சிக்கு அருகே சடலங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், ஆனால், அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.
சுமார் 40 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை எதுவும் இன்றி எரிமலை திடீரென பாறைச் சிதறல்களையும், சாம்பலையும் விசிறியடித்தபோது அங்கிருந்து நூற்றுக்கும் அதிகமான மலையேறிகள் ஒருவாறு தப்பித்து வந்துவிட்டார்கள்.
சிலரை இராணுவ ஹெலிக்கொப்டர்கள் மீட்டிருக்கின்றன.
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் ஒருபால் உறவைத் தடை செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 100 பிரம்படிகள் கொடுக்கப்படும்.
திருமணத்துக்கு வெளியில் பாலுறவை வைத்துக்கொள்பவர்களுக்கும் இதே தண்டனை அளிக்கப்படும்.
ஆச்சே மாகாணம், கடுமையான இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளில் ஒருபால் உறவுக்குத் தடை இல்லை.
அரசாங்கத்துக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாகப் பத்தாண்டுகளுக்கு முன்னர் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது.
இதன்படி, ஆச்சே மாகாணத்தில் மட்டும் இஸ்லாமிய சட்டக் கோவையான ஷரியா சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஒருபால் உறவுக்குத் தண்டனை அறிவித்துள்ள புதிய சட்டம், மனித உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று அம்னஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்காயின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கிறார்.
ஆப்கானிஸ்தானில் அதிரபராக இருக்கும் ஹமீத் கர்காயின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து ஜனநாயக முறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது.
அந்தத் தேர்தலில் அஷ்ரப் கனி மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அஷ்ரப் கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை அப்துல்லா அப்துல்லா ஏற்கவில்லை. இதனால் தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாமல் இழுபறி நிலை நீடித்தது.
இந்நிலையில் தற்போதைய அதிபர் கர்சாய் முன்னிலையில் அவர்கள் இருவரும் இடையில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி அஷ்ரப் கனி அதிபராகவும், அப்துல்லா அப்துல்லா பிரதமராகவும் நியமனம் செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, புதிய அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கிறார். இவருடன் 100 உயர் அதிகாரிகளும் பதவி ஏற்கின்றனர். பதவி ஏற்பு நிகழ்ச்சி தலைநகர் காபூலில் நடைபெறுகிறது.
அதிபராகப் பதவி ஏற்கும் அஷ்ரப் கனி மற்றும் அப்துல்லா அப்துல்லா இருவரும் தலிபான் எதிர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் - முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரின் மகள் செல்சியா, பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதன் மூலம் கிளின்டன் தம்பதியினர், தாத்தா - பாட்டி ஆகியுள்ளனர்.
செல்சியா கிளின்டன், 2010ஆம் ஆண்டு மார்க் மெஸ்வின்ஸ்கி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தான் கர்ப்பமாக இருப்பதை 2014 ஏப்ரலில் அறிவித்தார்.
எங்கள் மகள் சார்லோட் கிளின்டன் மெஸ்வின்ஸ்கி பிறந்துள்ள இந்த நேரத்தில், கணவர் மார்க்கும் நானும் முழுமையான காதலுடனும் பிரமிப்புடனும் நன்றியுடனும் இருக்கிறோம் எனச் செல்சியா, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செல்சியா, ஸ்டான்போர்டு, கொலம்பியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்தவர். தன் பெற்றோருடன் இணைந்து, கிளின்டன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அவருடைய கணவர் மார்க், முதலீட்டு வங்கியாளராகப் பணி புரிகிறார்.

திருப்பூர் மாவட்டம், மூலனூர் சர்வோதய சங்கத்தின் சார்பில், வடுகபட்டி சாலையில் காதி பவன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, திருப்பூர் தமிழ்நாடு சர்வோதய சங்கச் செயலாளர் ஏ.செந்தில்நாதன் தலைமை வகித்தார். மூலனூர் சர்வோதய சங்கச் செயலாளர் சி.ராமசாமி வரவேற்றார். திருப்பூர் சங்க பொருளாளர் எஸ்.ராஜு, மூலனூர் கனரா வங்கி முதுநிலை மேலாளர் பி.பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோவை, கதர் கிராமத் தொழில்கள் ஆணைய உதவி இயக்குநர் ஆர்.கணேசன் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.
இதில், காதி பவனை திறந்து வைத்து கதர் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குநர் டி.தனபால் பேசியது:
கதர் தொழில்களை மேம்படுத்த, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி அளித்து வருகிறது. இவற்றின் உற்பத்தி, விற்பனை, தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான ஒத்துழைப்பு மூலம் தற்போது இதற்காக ரூ. 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தமிழகத்தில் 5 கதர் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும் 11 நிறுவனங்கள் இணைய உள்ளன. கதர் தொழில்கள் மூலம் உற்பத்தியாகும் தரமான பொருள்களை தனியாரைப் போல நவீன விற்பனையகங்கள் மூலம் விற்றால், அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியும். கதர் கிராமத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கிளஸ்டர் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது என்றார்.
மூலனூர் சங்கத் தலைவர் கே.ஈஸ்வரன், பொருளாளர் கே.பாண்டித்துரை, கிளை மேலாளர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி கே.லிங்கசாமி நன்றி கூறினார்.

உடுமலை அருகில் அமராவதி பிரதான கால்வாயில் குளித்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
உடுமலை, காந்தி சவுக் பகுதியைச் சேர்ந்த தாவூத்கான் மகன் பஷீர் அகமது(36). ஆட்டோ ஓட்டுநரான இவர், திங்கள்கிழமை நண்பர்களுடன் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணைப் பகுதிக்கு சென்றார். பின்னர் பஷீர் அகமது அங்குள்ள அமராவதி பிரதான கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் வாய்க்காலின் தடுப்புச் சுவர் மீது ஏறி நின்று தண்ணீருக்குள் குதித்தபோது பஷீர் அகமது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பஷீர் அகமது உயிரிழந்தார். அமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க. சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் .கைதாகினர்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன், தம்பி மனோகரன்,நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய தலைவர் சாமிநாதன், கவுன்சிலர்கள் கீதா, சபரி, கணேஷ், சத்யா, சுப்பிரமணி, ரங்கசாமி, சண்முகசுந்தரம், விஜயகுமார், பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ, அமுதா வேலுமணி, கட்சி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், தேவராஜ், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன், ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசு தன், வேலுமணி, நீதிராஜன், மதுரபாரதி, பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி, ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்
திருப்பூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த கணவருக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
திருப்பூர் அருகே மங்கலம், சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ் (45). இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி தங்கமணி (38). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவி தங்கமணி நடத்தையில் தங்கராஜூக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 2013 அக்டோபர் 4-ஆம் தேதி இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தங்கமணியின் தோள்பட்டை, இடதுகையை தங்கராஜ் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த தங்கமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதன் பிறகு தங்கமணி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணவர் தங்கராஜை கைது செய்தனர். இதையடுத்து, திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நீதிபதி வசந்தலீலா திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், தங்கமணியை கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக தங்கராஜூக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
.jpg)