Saturday, October 04, 2014
திருப்பூர், அக்.4-
திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மகளிர் சட்ட உதவி மன்றம் சார்பில் சட்டம் ஓர் அறிமுகம் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் சனியன்று இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர் வை.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்ட உதவி மன்றத் துணைத் தலைவர் பி.ஜெயலட்சுமி வரவேற்றார். சட்ட உதவி மன்றச் செயலாளர் எஸ்.விஜயா இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். "சட்டம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மத்தியக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் விளக்கிப் பேசினார். இதில், பெண்களுக்கான சட்டங்கள், அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும், நடைமுறையில் அமலாக்குவது, நீதித்துறை, காவல் துறையுடன் வைத்துக் கொள்ள வேண்டிய அணுகுமுறை தொடர்பாக விரிவாக அவர் எடுத்துக் கூறினார்.
திருப்பூர், அக்.4-
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்பு கொடிக்கம்பத்தை இரவோடு இரவாக மர்ம மனிதர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
நடேசன்நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையின் சார்பில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைஸ்கூல் மேடு பயணிகள் நிழற்குடை அருகில், சுமார் 15 அடி உயர இரும்பு குழாயில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்தது.
இந்த கொடிக்கம்பத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் முழுமையாக அகற்றி எடுத்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக நடேசன் நகர் மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் கே.வடிவேல் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குருச்சிக்கோட்டையில் அ .இ .அ .தி .மு .கவினர் .உண்ணாவிரதப்போராட்டம்
உடுமலை . அ .இ .அ .தி .மு .க.பொது செயலாளர் செல்வி .ஜெ .ஜெயலலிதா அவர்களை சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து கவுன்சிலர் வாசு தலைமையில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது .போராட்டத்தில் 2000-க்கும் மேல் கலந்து கொண்டனர் .மானுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் .வாசுதேவ் ராம்குமார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .கொட்டும் மழையுளும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது .முடிவில் அமராவதி பாசனசங்கத்தலைவர் எஸ் .ராஜ்குமார் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் .உடன் வழக்கறிஞர் ராமகிருஸ்ணன் கவுன்சிலர் வாசு மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்
முன்னிலை அழகர்சாமி ஊராட்சி கழக செயலாளர் மடத்துக்குளம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி ஒன்றிய குழுத்தலைவர் திருமலைசாமி ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி கிட்டுசாமி ஒன்றியகுழு உறுப்பினர் செந்தில் [எ ]பொன்னுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் 1500 க்கும் மேல் கலந்து கொண்டனர் . முடிவில் நன்றி கழகப் பொருளாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார் உடன் மடத்துக்குளம் கவுன்சிலர் எ .குணசேகரன் கெ .எஸ் .பாலு மற்றும் திரளான கழக உடன் பிறப்புக்கள் கலந்து கொண்டனர் .
திருப்பூர்,அக்.4-
மடத்துகுளம் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ.தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் நடைபயணம் சென்று ஜெயலலிதா விடுதலையாக கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனர்.
திருப்பூர்மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில்அண்ணா தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டிகொழுமம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடும், நடைபயணமாக கொமரலிங்கம், மி.நீலம்பூர், மடத்துக்குளம்,கழுகரை, சோழமாதேவி, கணியூர் வழியாக காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவில், நீலம்பூர் முனியப்ப சுவாமி கோவில், செங்குளம்தர்கா ஆகிய இடங்களில்
சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் ஒன்றியச்செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை, கொமரலிங்கம்பேரூராட்சி துணை செயலாளர் எஸ்.ராஜ்குமார், அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், மாவட்ட கழக துணைச்செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித்தலைவர் எஸ்.பழனிச்சாமி, துணைத்தலைவர் ஜி.கே.தண்டபாணி, மடத்துக்குளம் வீட்டு வசதி கூட்டுறவு சங்க தலைவர் இயேசுதுரை, குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவலிங்கம், ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் சிவலிங்கம், கணியூர் பேரூராட்சித்தலைவர் தேவி, துணைத்தலைவர் கணியூர் காஜா மைதீன், கணியூர் ராஜ், காரத்தொழுவு ரவி, சோழமாதேவி இப்ராகிம், சந்திரசேகர்,கொழுமம் தலைவர் இந்திராணி, கொழுமம் ராகவன், அண்ணா தொழிற்சங்கம் சி.டி.சி. மகாலிங்கம், ரத்தினசாமி, பழனிச்சாமி, சி.டி.சி. தங்கவேலு, தம்பிதுரை, பாபு, பாலு, முருகன், கருப்புசாமி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிவாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பூர்,அக்.4-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,வழக்கறிஞர் பிரிவு சார்பில் கோர்ட் வீதியில் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், தலைவர் ஏ.ஆர்.வெளியங்கிரி ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.5 1/4 லட்சமாக உயர்த்தி கொடுத்து திருப்பூர் மாவட்டத்திற்கு முதல்வராக இருந்த காலத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவும், கூடுதல் சார்பு நீதிமான்றம் ஏற்படுத்தி கொடுத்தும், மாவட்ட நீதிபதியை நியமனம் செய்த மக்கள் முதலவர் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும் அமைதியான முறையில் அறவழியிலும், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தங்கமுத்து, ராஜேஷ்கண்ணா, பூலு வபட்டி எம்.பாலு,ஹரிஹரசுதன், பட்டுலிங்கம் .ரத்தினகுமார், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், கே.பி.சண்முகம், சிவா, நீதிராஜன் ஆகியோர்களும்,
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,வழக்கறிஞர் பிரிவு சார்பில் கோர்ட் வீதியில் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், தலைவர் ஏ.ஆர்.வெளியங்கிரி ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.5 1/4 லட்சமாக உயர்த்தி கொடுத்து திருப்பூர் மாவட்டத்திற்கு முதல்வராக இருந்த காலத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவும், கூடுதல் சார்பு நீதிமான்றம் ஏற்படுத்தி கொடுத்தும், மாவட்ட நீதிபதியை நியமனம் செய்த மக்கள் முதலவர் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும் அமைதியான முறையில் அறவழியிலும், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தங்கமுத்து, ராஜேஷ்கண்ணா, பூலு
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ரூபன், சத்தியநாராயணன், சதீஷ்,முருகேஷ்,வேலுசாமி, பரிமளா, தங்கவேல்,மணிகண்டன்,யோகேஷ், ஷிலாதேவி, சித்ரா, கண்ணன்,சையத் இப்ராகிம், திவ்யா, ஜோதிமணி,நடராஜ், உதயகுமார், ராமமூர்த்தி,பூபதி, தங்கமணி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அமைதியான முறையில் அறவழியிலும், அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூலுவபட்டி எம்.பாலு தலைமையில்
உண்ணாவிரதம் இருந்தனர், இந்த நிகழ்ச்சிகளில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி உள்ளிட்டவர் கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்,அக்.4-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சு.குணசேகரன் தலைமையிலும்,,வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூலுவபட்டி எம்.பாலு தலைமையிலும், தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு அருகில் 4வது மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமையிலும், திருப்பூர் மாநகராட்சி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் கடை அடைப்பு நடத்தி காமராஜ் ரோட்டில் சங்கத்தலைவர் தலைமையிலும் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அமைதியான முறையில் அறவழியிலும், கோவில், மசூதி, சர்ச் ஆகிய வழிப்பட்டு தலங்களில் பிராத்தனை செய்தும் 45 பேர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியும் அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது நீதிக்கும், தர்மத்திற்கும் வழங்கப்பட்ட தண்டனையாகும்.நீதிபதி என்பவர் சுய விருப்பு, வெறுப்பு இல்லாமல் தீர்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் இந்த தீர்ப்பை பொருத்தவரையில் தனிப்பட்ட முறையில் வேண்டும் என்றே ஜெயலலிதாவை பழிவாங்க வேண்டும் என்று மனித செயலற்ற வெறித்தனமான தீர்ப்பு ஆகும். இது வரை நடந்த வழக்குகளில் எந்த நீதிபதியும் இது போன்ற அநீதியான நீதியை கொடுத்தது இல்லை.இந்த செயலை அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி கூறினார்.

துணை மேயர் சு.குணசேகரன் பேசும்போது, மக்களால் நான், மக்களுக்காக நான் என வாழ்ந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஒரு துறவியைபோல் வாழ்ந்து வந்தார்.அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது என்பது பெரும் பாக்கியமாக கொள்ள வேண்டும். இன்று அவரை கர்னாடகா கோர்ட் தவறான தீர்ப்பினை வழங்கியுள்ளது.அவர்களை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டர்கள்.அவர் வெளியே வரும்போது எதிர் கட்சியினருக்கு தக்க பாடம் புகட்டுவார்.என அவர் பேசினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணி யம்,ஸ்டீபன்ராஜ், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிகுமார், எஸ்பி.என்.பழனிசாமி, ராஜேஷ்கண்ணா, கலைமகள் கோபால்சாமி எம்.சி., டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சி.எஸ்.கண்ணபிரான், அ.கண்ணப்பன், வடக்கு ஒன்றிய செயலளார் விஜயகுமார், ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன், வி.பட்டுலிங்கம் .ரஞ்சித்ரத்தினம், அசோக்குமார், ராஜ்குமார், ரத்தினகுமார், ஈஸ்வரமூர்த்தி,காலனி செல்வராஜ், பாசறை ஏ.எம்.சதீஷ், யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், பரமராஜன், அன்பரசன்,ஆகியோர்களும்
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசாமி, திருப்பூர் கிளை நிர்வாகிகள் ராஜேந்திரன்,சரவணன், ரவிகுமார்,முருகன், குணசேகரன், கணேஷ், சிவகுமார், சி.டி.சி.பழனிசாமி ஆகியோர்களும்
அஹமது பைசல்,சாகுல்அமீது, தாமோதரன், காதர்பேட்டை ஜின்னாபாய்,அப்பாஸ், ராபிதீன், கே.எம்.பி.சாகுல்ஹமீது, ஷேக்தாவூத், முஹமதுயூனுஸ்,இஸ்மாயில், கவுன் சிலர்கள் முருகசாமி, செல்வம், பாலசுப்பிரமணியன், கணே ஷ்,பாலன், கனகராஜ், விஜயகுமார், சபரீஷ்வரன், சின்னசாமி, ஈஸ்வரன், ஆகியோர்களும், நல்லூர் லோகநாதன், சுரேந்தர், மணிகண்டன்,நீதிராஜன் , மகளிர் அணியை சேர்ந்த கோமதி, அன்னபூரணி, சுந்தரம்பாள், இந்திராணி, மும்தாஜ், பேபி பழனிசாமி, சம்சாத், ரிஸ்வானா,ரஹ்மத்நிசா, கதிஜாபானு, சாராபானு மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கொங்கு ராஜாமணி, ராஜசேகர், அஜீம்பாஷா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பப்பீஸ் ஏ.சக்திவேல் அனுப்பியுள்ள செய்தியில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் தொழில் மேம்பாடு, தொழிலாளர்கள் நலன் இவற்றுடன் திருப்பூர் நகர வளர்ச்சியிலும் தனி கவனம் செலுத்தி வரும் அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக ஆதரவு செரிவித்து இன்று அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் அதன் தொடர்புடைய சங்கங்கள் சார்பாக ஒருநாள் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக் கக்கோரி, திருப்பூரில், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 1-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.இதை தொடர்ந்து இன்று அனைத்து பின்னலாடை தொழில் துறை சங்கங்கள் இணைந்து முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பின்னலாடை துறையினர் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்கர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்கர் ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
நீலகிரி மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி குறித்து கூடலூரில் ஆலோசனை நடத்தினேன். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்து உள்ளோம்.
சிறுபான்மையினத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு கட்டாய திருமண சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டந்தோறும் இஸ்லாமிய பள்ளி வாசல்களில் உள்ள காஜிகளுக்கு திருமண பதிவுக்கான அதிகாரம் அளிக்க வேண்டும். அப்போது தான் இஸ்லாமியர் கலாசாரத்தை பாதுகாக்க முடியும்நாடு முழுவதும் பலகோடி ரூபாய் மதிப்பு உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த சொத்துக்களை மீட்க கடந்த 2013–ம் ஆண்டு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சீர் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டம் நிறைவேறியதால் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ, சென்னை என்ற 5 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, வக்புவாரிய சொத்துக்களை விரைவாக மீட்கப்பட உள்ளன. தமிழகத்தில் ஊட்டியில் தான் வக்பு வாரிய சொத்துக்கள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதை மீட்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...