Thursday, March 28, 2019

On Thursday, March 28, 2019 by Tamilnewstv in ,    
நத்தஹர்வலி தர்காவில் வழிபட்ட அமமுக வேட்பாளர்

திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர் வலி தர்காவில் நத்தர் அவர்களின் கலீபா அப்துர் ரகுமான் சித்தீகி அவர்களும், வளர்ப்பு மகள்  ஹலீமா என்ற மாமா ஜிக்னியும், நத்ஹர் அவர்களின் கால்மாட்டிலும், ஷம்ஸ் கோயான் அமைச்சர் கீழ்புறத்தில் மற்றொரு அமைச்சரான ஷம்ஸ்பீரான் அடக்கம் பெற்றுள்ள இடத்தில் வழிபாடு செய்தார்கள்.அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அடங்கப் பெற்று உள்ள இடத்திற்கு வெளியே நின்று வழிபட்டு மயிலிறகால் மதிக்கப்பட்டது


மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பச்சை நிற போர்வையை போற்றி மலர்கள் தூவி வழிபட்டார்.

அவைத் தலைவர் ராமலிங்கம் இணைச் செயலர் சிறுபான்மை பிரிவு செயலர் நத்தர்ஷா பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் மகளிரணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்
On Thursday, March 28, 2019 by Tamilnewstv   
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்

 ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12-வது ஜீயர் ஸ்ரீவராஹ மகாதேசிகன் சுவாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினார்கள் கழக அமைப்புச் செயலாளர் மனோகரன்  உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
On Thursday, March 28, 2019 by Tamilnewstv   
அமமுகவிற்கு திருச்சி மாவட்ட முக்குலத்தோர் தேவர் நல அறக்கட்டளை ஆதரவு

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமானுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் திருச்சி மாவட்ட முக்குலத்தோர் தேவர் நல அறக்கட்டளை தலைவர் சுப்பு தேவர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர் அவைத்தலைவர் அவைத் தலைவர் ராமலிங்கம் இணைச்செயலர் சேட் மகளிர் அணிச் செயலாளர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர பகுதி வட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
On Thursday, March 28, 2019 by Tamilnewstv   
அதிமுக நிர்வாகி அமமுகவில் ஐக்கியம்

அஇஅதிமுக திருச்சி மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் ஜான்கென்னடி அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இணைந்தார். திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் முன்னிலையில் அவைத்தலைவர் ராமலிங்கம் துணைச் செயலர் சேட் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மோகன் தாஸ் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் மகளிர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
On Thursday, March 28, 2019 by Tamilnewstv   


திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்


திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் மகேஷ் பொய்யாமொழி MLA, முன்னாள் MLA .க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், உட்பட காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன், கலை, சுப.சோமு 'ஜெரோம், சுஜாதா, ம.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் சோமு, புறநகர் மாவட்ட செயலாளர் சேரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள், CPI - இந்திரஜித்,CPM - ஸ்ரீதர் இந்திய யுனியன் முஸ்லீம் லீக் ஹபிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி ரபிக், தேசிய வாழ்வுரிமை கட்சி, இந்திய ஜன நாயக கட்சி, விவசாய சங்கம் விஸ்வரநாதன், கதி தமிழர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, பொன் முருகேசன், பழனியாண்டி தி.மு.க) உட்பட பலர் பேசினார்கள் முன்னதாக மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார்
On Thursday, March 28, 2019 by Tamilnewstv   
பத்தாண்டுகளாக நாடாளுமன்றம் சென்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர்,  கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது திருச்சி மக்களவைத் தொகுதி. இந்தத் தொகுதியின் வெற்றி வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு அதிக பக்கங்கள் இருக்கின்றன. காங்கிரஸ் வேட்பாளராக அடைக்கலராஜ் 4 முறை வெற்றி பெற்றார். 2009-க்குப் பின்னர் இத்தொகுதி அதிமுக வசம் உள்ளது. திமுக ஒரே ஒரு முறை மட்டுமே திருச்சியில் வெற்றி பெற்றது. அது 1980-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்.

இத்தகைய சூழலில் திருச்சியை அதிமுக, கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கும், திமுக, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும் விட்டுக் கொடுத்துள்ளன.

இந்தத் தேர்தலில் கவனம் ஈர்த்துள்ள அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர், இரண்டு முறை திருச்சி மேயராக இருந்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர், இப்போது அமமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் இல்லாவிட்டாலும்கூட, டிடிவி என்ற அடையாளத்தை வைத்தே தமிழகம் முழுவதும் வெற்றிகள் குவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

 வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார் செல்லும் இடமெல்லாம் நல்ல வரவேற்பு இருக்கிறது. திருச்சியில் ஏற்கெனவே இரண்டு முறை மேயராக இருந்துள்ளார். அதனால்,  மக்களிடம் நன்கு அறிமுகமாகியுள்ளார். இது  கூடுதல் பலமாக இருக்கிறது.

தேர்தல் வரலாற்றின்படி திருச்சி காங்கிரஸின் கோட்டையாக இருந்துள்ளது.
அப்போது இருந்த காங்கிரஸ், இப்போது இல்லை. அதனால், திருநாவுக்கரசரைப் போட்டியாகப் பார்க்கவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் அதன்பின்னர் அதிமுகவில் சேர்ந்ததற்கு காரணமே காங்கிரஸின் பலவீனம்தான். மேயராக இருந்தபோதே 'அம்மா'  அதிமுகவில் சேருமாறு அழைத்தார். அவர் மீதுள்ள ஈர்ப்பால்தான் அதிமுகவில் இணைந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் மறைந்துவிட்டார். அதன்பின்னர் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவு, டிடிவி தினகரன்தான் உண்மையான தலைவர் என்று அடையாளம் காட்டியது. அதனால், டிடிவி தினகரன் பக்கம் நின்றார்

இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த ப.குமார் தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் ஏர்போர்ட் ரன்வே விரிவாக்கம், தஞ்சை நெடுஞ்சாலை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்ற கோரிக்கைகள் இன்னும் பேப்பரில் மட்டுமே இருக்கின்றன. 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக 10 ஆண்டுகளாக டெல்லி சென்றவர் மக்களுக்காக செய்யாதவற்றை செய்து முடிப்பதே எனது இலக்கு என தொகுதி மக்களிடம் ஆதரவு கோரி வருகிறார்

 மேயராக இருந்தபோது ரயில்வே நிலத்தை கேட்டுப்பெற்று, மாநகராட்சி நிதியில் பேருந்து நிலையங்களை அமைத்தார் ஆனால், நாடாளுமன்றம் வரை சென்றவரால் இன்னும் திருச்சிக்கு எதுவும் செய்ய இயலவில்லை.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர், புதுக்கோட்டை தனி மக்களவைத் தொகுதி என்ற அந்தஸ்தை இழந்திருக்கிறது.

எங்கள் சின்னமே டிடிவி.தான். அவரை அடையாளப்படுத்திதான் நாங்கள் வாக்கு சேகரிக்கிறோம்.  கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட சின்னத்துடன்தானே ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவரைப் போலவே எந்த சூழலிலும் நிதானமாக, அச்சமின்றி நின்று, வெற்றி பெறுவோம்.
சின்னம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு வந்தது முதல், அமமுக ஒரு விவாதப் பொருளாகியுள்ளது. இதுவே கட்சிக்கு 3% வாக்குகளை உறுதியாக்கிவிட்டது
மேலும், இங்கு களத்தில் உதய சூரியன் சின்னமும் இல்லை, இரட்டை இலை சின்னமும் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்காக தொண்டர்கள் ஆற்றும் பணி வேறு, சொந்தக் கட்சிக்காக செய்யும் வேலை வேறு.
அமமுகவில் இருக்கும் தொண்டர்களில் 95% பேர் அதிமுகவினர்தான். அவர்கள் களத்தில் உற்சாகமாக தினகரனுக்காக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இதன் பலன், தேர்தல் முடிவின்போது தமிழகம் முழுவதும் தெரியும்.
அமமுகவைப் பொறுத்தவரை நாங்கள் பெரும் ஓட்டுகள் அனைத்துமே டிடிவி என்ற அடையாளத்துக்குத்தான். பெண் என்பதைவிட, டிடிவி கட்சியைச் சேர்ந்தவர் என்பதே எனக்கு மக்கள் ஆதரவை பெற்றுத்தரும் என்பேன். டிடிவி தினகரனுக்கு இளைஞர்களும் பெண்களும் ஆதரவாக உள்ளனர் என வெற்றி நடை போட்டு வருகிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்

Tuesday, March 26, 2019

On Tuesday, March 26, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
செம்பட்டு:  இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது 4 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர் அப்போது அவர்கள் ஆசனவாயில் மறைத்து இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூபாய் 49.5 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி பேஸ்ட் வடிவில் செய்து மறைத்து எடுத்து வந்ததை கண்டு பிடித்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசல், அலி கான், காஜா, மற்றும் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அவர்களிடமிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 1.9 கிலோ மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Tuesday, March 26, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி மார்ச் 26

தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-இல் மக்களவைக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோன்று புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. தற்போது  நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிட 721-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 626 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவர். 2 பேர் மூன்றாம் பாலித்தனவர் ஆவர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை  காங்கிரஸ், தேமுதிக, மநிம கட்சி உட்பட 20 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். இதில் இரண்டு நபர்ள் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது.

சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிட 257 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. 212 ஆண்களும், 45 பெண்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 23ஆம் தேதி எண்ணப்பட உள்ளன

திருச்சியில் அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது கடைசி நாளான இன்று தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சாருபால தொண்டைமான் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான  சிவராசுவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன்,மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்

அமமுக திருச்சி தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பேட்டியில் கூறுகையில்


டிடிவி தினகரன் தான் எங்களது வெற்றி சின்னம்

அம்மா அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர் நான். திருச்சி தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டுள்ளேன். திருச்சி புதிதல்ல. மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். பெரிய அளவில் வெற்றி பெறுவேன். சின்னம் குறித்த வழக்கின் தீர்ப்பை தமிழகம் முழுவதும் இன்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். எங்களது வெற்றி சின்னமே டிடிவி தினகரன் தான். எங்களது வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள் என்றார்
On Tuesday, March 26, 2019 by Tamilnewstv   
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி தொழிலதிபர் பொன்மலைப்பட்டி கண்ணையனிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, இணைச்செயலர் சேட் ஜோதிவானன், உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் , உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.