Thursday, May 09, 2019

On Thursday, May 09, 2019 by Tamilnewstv in ,    
 திருச்சி அருகே உள்ள மண்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. 24 வயதாகும் இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரசவம் நடந்து முடிந்தது. அப்போது முதல் இவரது வயிறு பகுதி வீங்கிய வடிவில் இருந்துள்ளது. வயிறு தொப்பை காரணமாக இவ்வாறு இருக்கலாம் என்று பெரியவர்கள் கூறிய ஆலோசனையின்படி மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.

 இந்நிலையில், நேற்று இரவு இவருக்கு வயிற்றில் வலி அதிகமாகியுள்ளது. இதனால் வேறு வழியின்றி திருச்சி புத்தூரில் உள்ள "க்யூ மெட்" மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வயிற்றில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பை அருகே உள்ள சினைப்பையில் இருந்து இந்த கட்டி முளைக்கத் தொடங்கியுள்ளது. இதை அவரும், அவரது குடும்பத்தாரும் கவனிக்கத் தவறிவிட்டனர். இதன் காரணமாக அந்த கட்டி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னரே அவர்கள் உள்ளூர் மருத்துவரின் ஆலோசனையின்படி எங்களது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதனடிப்படையில் ஸ்கேன் பரிசோதனைக்குப் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்


 மேலும், இந்த கட்டி திசு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் இந்த கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பது குறித்து தெரியவரும். இதன் மூலம் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது கிடையாது. வயிறு பெரிதாக இருந்தால் தொப்பை, அப்படித்தான் இருக்கும் என்ற நிலைமையில் இருந்து விடுகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. உரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்” என்றார்.

Tuesday, May 07, 2019

On Tuesday, May 07, 2019 by Tamilnewstv in ,    


திறன் மேம்பாட்டுபயிற்சி துவக்க விழா




திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகே பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆறு 900 மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது
லெனோவா மற்றும் எடுப்புச் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன


இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான லெனோவா ஏழ்மை நிலையில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு குறிக்கோளின் அடிப்படையில் இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தை இந்தியாவின் மிக முக்கிய நகரங்களாக புவனேஸ்வர் எர்ணாகுளம் டு மைசூர் டெல்லி சண்டிகர் மற்றும் திருச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது திருச்சியில் இத்திட்டத்தின் கீழ் துவக்க விழா நடைபெற்றது
லெனோவா மோட்டரோலா திறன் மேம்பாட்டு கழகம் 6 ஆயிரத்து 900 மேற்பட்ட இளைஞர்களுக்கு மடி கணினி அலைபேசி பழுதுபார்த்தல் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் சில்லரை வர்த்தக குறித்த பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது
இத்திட்டத்தை செயல்படுத்த லெனோவா மோட்டரோலா மும்பையை சேர்ந்த பயிற்சி நிறுவனமான பிரிட்ஜ் உடன் இணைந்து தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பணியாற்றும் நிறுவனமாகும்
திருச்சியில் நடைபெற்ற துவக்க விழாவில் பேசிய லெனோவா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு உப தலைவர் சு பங்கர் ராய் சவுத்ரி கூறுகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் மூலம் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உருவாகும் இந்த திட்டத்தின் திருச்சியில் அறிமுகப்படுத்தியதே நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் அடுத்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 900 மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வது எங்கள் குறிக்கோளாக கொண்டுள்ள இந்த பயனாளிகள் சுமார் 4 ஆயிரத்து 200 பேர் இந்தியா முழுவதும் 7 இடங்களில் அமைந்துள்ள லெனோவா மோட்டரோலா திறன் மேம்பாட்டு கழகத்தில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்

Sunday, April 21, 2019

On Sunday, April 21, 2019 by Tamilnewstv   
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா முத்தையாம்பாளையம் கிராமத்தில் கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமியையொட்டி


இக்கோவிலின் திருவிழா  நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிடிகாசு எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வீசப்படும் சில்லறை காசுகளை எடுத்து வீட்டில் வைத்தால் சிறப்பு என்பதால் கூட்டத்தினர் முண்டியடித்துக்கொண்டு காசுகளை எடுக்க முயற்சித்தனர்.


இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, April 20, 2019

On Saturday, April 20, 2019 by Tamilnewstv in ,    
குணசீலம் தெப்ப உற்சவம்  நடைபெற்றது


வைகுண்ட வாசுதேவன் குணசீல மகரிஷி யின் தவத்திற்காக ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசன் ஆக காட்சியளித்த திருத்தலம் குணசீலம் இந்த க்ஷேத்திரத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் சங்கு சக்கரதாரியாக கையில் சங்கு சக்கரத்துடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் முக்கியமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் பூஜித்து வந்தால் அவருடைய பிரச்சனைகள் தீரும் என்பது அதிகம் அதேபோன்று திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செலுத்த இயலாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செலுத்துவதால் தென் திருப்பதி  என்று அழைக்கிறார்கள் இந்த இடத்திலே பிரதி வருடம் சித்ரா பௌர்ணமி அன்று எம்பெருமானுக்கு மிக விசேஷமாக நடைபெறுகிறது எம்பெருமானுடைய அந்த புராண அந்த வரலாறு நிறைவு பெறும் வழியாக ஆதிமூலமே என்று அழைத்து அந்த கஜேந்திர மோட்சம் அளித்தார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த குணசீல  பெருமானுக்கு எப்போதும் சித்ரா பௌர்ணமியன்று பிரதி வருட  நடைபெற்று வருகிறது வருகிறது அவ்வாறு வருடமும் இந்த வருடமும் நடைபெற்றது


ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரனுக்கு மோட்சம் பாடி அருளிய ஸ்ரீமன் நாராயணனை போற்றும் வகையிலே இந்த திருக்கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்திலே எம்பெருமானுடைய சன்னதிக்கு முன் புறமாக உள்ள பாபவிநாச தீர்த்தம் தொடக்கத்திலே தற்போது மிகவும் விசேஷமாக நடைபெற்று வருகிறது அவ்விதமே இந்த வருடமும் இந்த சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் அன்று எம்பெருமானுக்கு தற்போது விசேஷமாக நடைபெற்றுள்ளது எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி சகஸ்கர தீப அலங்கார சேவை கண்டருளி அதன்பின் எம்பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார் அதன்பின் இங்கே மைய மண்டபத்தில் அபிஷேக ஆராதனையும் அதன் பின்பாக விசேஷமான ஆராதனைகளும் நடைபெற்று எம்பெருமான் மண்டபத்தில் எழுந்தருளிய தீபாராதனை நடைபெற்றது அதன் பின்பு கண்ணாடி அறை சேவை நிறைவுபெற்று எம்பெருமான் எழுந்தருளினார் விசேஷமான வருடா வருடம் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்திலே சிறப்பாக நடைபெற்றது

Thursday, April 18, 2019

On Thursday, April 18, 2019 by Tamilnewstv   
திருச்சி,


 நாடாளுமன்ற திருச்சி தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 15 லட்சத்து 8 ஆயிரத்து 379 .

இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை  7 லட்சத்து 39 ஆயிரத்து 241,  பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 68 ஆயிரத்து 940, திருநங்கைகள் 148 பேர் வாக்கு செலுத்தவுள்ளனர்.

 914 மையங்களில், ஆயிரத்து 660 வாக்குச் சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. முன்னதாக காலை 6 மணிக்கு வாக்கு பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்க, மாதிரி வாக்கு பதிவு நடத்தப்படுகிறது.

தேர்தல் மண்டல அலுவலர்கள்,  மேற்பார்வையாளர்கள்,  பறக்கும்படையினர்,  நிலை குழுவினர்,  வீடியோ கண்காணிப்புக் குழுவினர்,  துணை ராணுவப் படையினர்,  காவல்துறையினர் உள்ளிட்ட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர்,  இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் நேரு திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் வாக்களித்தார் திருச்சி சிவா திமுக மற்றும் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் சிறுபான்மை துறை அமைச்சர் வளர்மதி உறையூர் sms பள்ளியில் வாக்களித்தார் திருச்சி சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பாலக்கரை பகுதியில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்


திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பரபரப்பு பேட்டி





திருச்சி வேட்பாளர் இளங்கோவன் அவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்


வாக்காளர் பெருமக்கள் காலையிலிருந்து எழுச்சியோடு வாக்களித்து கொண்டிருக்கிறார்கள் என்ற  மேலான தகவலை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 37 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது என்பது வரலாறு இந்த முறை 10 கட்சிகளோடு கூட்டணியில் உள்ளோம் ஒரு லட்சத்தி 55 ஆயிரம் வாக்குகள் சென்றமுறை அதிகமாக பெற்று வெற்றி வாய்ப்பை பெற்றோம் இந்த முறை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேட்டி அளித்தார் மேலும் வாக்கு இயந்திரங்கள் பழுதடைந்தால் உடனடிய ஆக  சரி சரிசெய்யப்பட்டு வாக்குு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்

Tuesday, April 16, 2019

On Tuesday, April 16, 2019 by Tamilnewstv   
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு


கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு 17/04/2018. சித்திரை  திருத்தேர் விழா.  அம்மனுக்கு மிகமிக விசேஷமானது.
சக்தி வழிபாட்டிற்குரிய ஸ்தலங்கள் பலவற்றில் தமிழகத்திலே 'சாய்ஞ்சா கண்ணபுரம், சாதிச்சா சமயபுரம்' எனும் வாக்கிற்கிணங்க பிரத்யட்ச தெய்வமாக தன் கண்ணசைவினாலேயே லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்தவண்ணம் காவிரி நதி பாயும் சோழ நாட்டிலே திருச்சியிலிருந்து வடக்கே 6 கி.மீ. தொலைவிலுள்ள கண்ணபுரம் எனப்படும் சமயபுரத்திலே அமர்ந்த நிலையிலுள்ள எழிற்கோலத்திலே அழகுறக் காட்சி தருகிறாள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்.

'சாதிச்சா சமயபுரம்' எனும் பெருவாக்கிற்கிணங்க, சமயபுரத்திலே தனக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்ரீமாரியம்மனின் லீலா வினோதத்தைச் சற்றே காண்போமா!

விஜயநகர அரசுக்குத் தளர்ச்சி நேர்ந்தபோது விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்றுவந்த ஸ்ரீமாரியம்மன் உற்சவர் சிலையைத் தங்கப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்தனராம். அவ்விதம் ஊர்வலமாக வந்தவர்கள் உணவு உட்கொள்ள வேண்டி சமயபுரத்தில் ஸ்ரீமாரியம்மனை இருத்தினர். உணவு உட்கொண்ட பின்னர் மாரியம்மனைத் தூக்க முயன்று முடியாமற்போகவே வருந்தினராம். தனக்குரிய இடம் இதுவே என்று அன்னையே சமயபுரத்தில் நிலைத்த பின்னர் விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி.1706-1732) அவரது காலத்தில்தான் அன்னைக்குத் தனிக்கோயில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தாரென்றும் சொல்லப்படுகிறது. 
இந்த விஜயரெங்க சொக்கநாத நாயக்கரிடம்தான் மௌனகுருவை குருவாகக் கொண்டு வாழ்ந்த தாயுமான சுவாமிகள் கணக்கராக இருந்தார். பின்னர் துறவு பூண்டார்.

விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில்தான் விறலிவிடு தூது, கூளப்ப நாயக்கன் காதலை இயற்றிய சுப்ரதீபக் கவிராயர் வாழ்ந்தார். சுப்ரதீபக் கவிராயரிடம்தான் வீரமா முனிவர் தமிழ் பயின்றார்.

தமிழ்ப் புலவர்களை ஆதரிக்காது தெலுங்கு மொழிக்கே ஆதரவு தந்து வந்த நாயக்க மன்னர்கள் வாழ்ந்த அந்த காலகட்டத்தில் தமிழ்மொழியை நிலைநாட்ட தாயுமான சுவாமிகள் போன்றோரை தோற்றுவித்தும், சமயத்தை நிலைநாட்ட இதுதான் சமயம் என்று(ம்) சமயபுரத்திலே அமர்ந்திட்ட மாரியம்மனின் லீலா விநோதத்தை என்னவென்று சொல்வது?

கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு ஆடிமாதம், தைமாதம், நவராத்திரி இவைகளெல்லாம் விசேஷமெனில் மாசி மாதம் வரும் பூச்சொரிதல் விழாவோ மிகமிக விசேஷமானது. இப்பூச்சொரிதல் விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் திரளாக வந்திருந்து ஸ்ரீமாரியம்மனின் மேல் பூவைச் சொரிந்து அம்மனை வழிபடுவர்.

மாசி மாதம் கடைசி ஞாயிறன்று பூச்சொரிதல் உற்சவம் நடைபெறுகிறது. பூச்சொரிதல் நாள் முதல் பங்குனி மாதம் வரை ஒவ்வொரு ஞாயிறன்றும் பூச்சொரிதல் விழா நடைபெறும். பூச்சொரிதல் நாள் முதல் 4 வாரங்களுக்கு ஸ்ரீமாரியம்மனுக்குப் பச்சைப் பட்டினி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறதாம்.

பூச்சொரிதல் விழாவின் தாத்பர்யம்: ஊரெங்கும் 'மாரி' போடும் சமயங்களிலே உடம்பில் ஏற்படும் முத்துக்களைத் தானே ஏற்று அந்தப் பூ முத்துக்களை  பூப்போல ஸ்ரீமாரியம்மன் உதிர்த்து விடுதலால் உள்ளத்தில் எழும் அந்த நன்றியுணர்வை பக்தர்கள் அந்த மாரியம்மனுக்கு வௌதக்காட்டும் செயலின் வௌதப்பாடே பூச்சொரிதல் விழா.

பூச்சொரிதல் விழாவில் முதல் பூ திருவரங்கம் ஸ்ரீஅரங்கநாதரிடமிருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே எல்லா ஊர்களிலிருந்தும் வரும் பூக்கள் அம்மனுக்கு பூச்சொரியப்படுகிறது. பூச்சொரிதலுக்கு உதிரிப் பூக்களே பயன்படுத்தப்படுகிறது. சென்னை சிம்சனிலிருந்தும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு லாரியில் பூக்கள் பூச்சொரிதலுக்கு அனுப்பப்படுகிறதாம். பூச்சொரிதல் உற்சவம் காலைமுதல் இரவு வரை நடைபெறுமாம். 
பூச்சொரிதலில் சொரியப்படும் பூவானது ஸ்ரீமாரியம்மனின் சிரசிலிருந்து போடப்படும். இவ்விழாவில் ஸ்ரீமாரியம்மனின் திருமுகத்தை மட்டுமே காண்பிக்கும் அளவுக்கு அம்மன் பூக்குவியலில் மூழ்கித் திளைப்பாள்.

பூச்சொரிதல் விழாவில் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுடன் உடன்பிறந்த சகோதரிகள் அறுவரில் முதல் பூ சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கே. ஏனெனில் பெரியம்மை போடும் மூத்தவளுக்கு அதை எடுக்கத் தெரியாதாம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மனே அந்த முத்துக்களை உதிர்த்தலால் முதல் மரியாதை இந்த மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது. அடுத்து இரண்டாவது பூ அன்பிலூர் மாரியம்மனுக்கும், மூன்றாவது பூ நார்த்தாமலை மாரியம்மனுக்கும்
கடைசி பூ பெரியம்மை போடும் பெரியவளான பாலக்காடு மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது.

இப்பூச்சொரிதல் விழா ஆரம்பமான பின்னர்தான் ஊரெங்கிலுமுள்ள வேம்பு மரங்களிலே வேப்பம்பூவானது அரும்பு கட்ட ஆரம்பிக்குமாம்.


பூச்சொரிதல் விழாவின் முடிவில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையில் தேரோட்டமும், அதற்கடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.  சித்திரை மாதக் கடைசியில் வசந்த விழாவும், வைகாசி மாதம் முதல் தேதியில் பஞ்சபிரகார உற்சவமும் நடைபெறுகிறது.




On Tuesday, April 16, 2019 by Tamilnewstv   
*திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்*


பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமான இக்கோயிலில் கடந்த மாதம்   பூச்சொரிதல் விழா தொடங்கிய நாளில் உலக நன்மைக்காக அம்மனும்,  அவரின் பக்தர்களும்  28 நாட்கள் கடைப்பிடித்த  பச்சைப் பட்டினி விரத நிறைவு, பூச்சொரிதல் விழா நிறைவு, சித்திரை தேர் திருவிழா தொடக்கம் ஆகியவை கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றன.


அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,   கொடி மரத்துக்கு அபிஷேகம் நடைபெற்று,  அம்பாள் முன்னிலையில் மேஷ லக்னத்தில் கொடியேற்றப்பட்டது.  திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்ற நிலையில்,   ஞாயிற்றுக்கிழமை இரவு குதிரை வாகனத்திலும்,   திங்கள்கிழமை இரவு வெள்ளி குதிரை வாகனத்திலும்  திருவீதி உலா நடைபெற்றது.  செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்பட்டது நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இவர்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
On Tuesday, April 16, 2019 by Tamilnewstv   
திருச்சி விமான நிலையத்தில்  99.8 கிராம்  தங்கச் சங்கிலி பறிமுதல்.

 சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது திருவாரூரை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவர் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 3,15,767 மதிப்புள்ள 99.8  கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Monday, April 08, 2019

On Monday, April 08, 2019 by Tamilnewstv   
ராஜகோபுரத்தின் முன்னிருந்து ராஜ வம்சத்தினருக்கு வாக்கு கேட்கிறேன்



அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து டி ஆர் சரஸ்வதி ஸ்ரீரங்கத்தில் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டு பேசுகையில், திமுக அதிமுகவிற்கு இல்லாத  தில் டிடிவி தினகரனுக்கு உண்டு. கழகத் துணை பொதுச்செயலாளர் வீடு உறவினர்கள் வீட்டில் எல்லாம் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். பல்வேறு நெருக்கடிக்கு ஆளானார்.அப்பொழுது என்னை 20 வருடம் சிறையில் அடைத்தாலும் 21 வது வருடம் எதிர்த்து நிற்பேன் என்று கூறினார். பதவிக்காக கூனிக்குறுகி காலில் விழும் துரோகிகள் முட்டிப் போட்டு முதலமைச்சர் ஆனவர்கள் எல்லாம் இன்று பேசுகின்றார்கள். இத்தேர்தல் துரோகத்திற்கும் தர்மத்திற்கும் நடைபெறும் தேர்தலாகும். திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார்கள். இவர்கள் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்கள். நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இவர்கள். நாங்கள் பதவிக்கு அலையல பணத்துக்கு அலையல அதனால நாங்க அண்ணன் டிடிவி பக்கம் இருக்கின்றோம் ராஜகோபுரம் முன்பிருந்து ராஜவம்சத்தில் உள்ள சாருபாலா தொண்டைமானுக்காக பரிசு பெட்டகத்தில் வாக்கு சேகரித்து பேசுகின்றேன். ஆண்டவன் முன்பிருந்து பேசுகிறேன் .சிந்தித்துப் பாருங்கள் அம்மாவை சட்டசபையில் நாக்கு துருத்தி பேசியவர்கள் அம்மாவின் சமாதிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மானம் இருக்கா வெட்கம் இருக்கா தூன்னு துப்பல என்று கூறியவர்கள் கூட எல்லாம் கூட்டணி வைத்து விட்டு இப்பொழுது வாக்கு சேகரிக்க வருகின்றார்கள் .இது துரோகம் இல்லையா ஆண்டவனும் அம்மாவும் எங்க பக்கம் இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் என்று ராஜகோபுரம் முன்பிருந்து ராஜ வம்ச சாருபாலா தொண்டைமானுக்கு சரஸ்வதி பரப்புரை மேற்கொண்டார் பகுதி செயலாளர் இளையராஜா மகளிரணி செயலாளர் சித்ரா விஜயகுமார் ஒன்றிய செயலாளர் வாசு உட்பட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்