Friday, March 06, 2020

On Friday, March 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா


108 பந்தங்களுடன்.... ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் தெப்பத் திருநாள் ஸ்ரீநம்பெருமாள் பந்தக் காட்சியுடன் நிறைவு பெற்றது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா
தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நிறைவடைந்தது பின்னர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பதிருவிழா வரும் 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வரும் 27-ந் தேதி தொடங்கி வருகிற 6ம் தேதி வரை நடைபெறும்.
தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான 5-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில்; நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து  சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
9ம் திருநாளான 6-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன்,  ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில்  ஊழியர்கள் செய்திருந்தனர்


On Friday, March 06, 2020 by Tamilnewstv in    

On Friday, March 06, 2020 by Tamilnewstv in    
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.


திருச்சி அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் பிரான்சிஸ் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சுந்தர்  ஈஸ்வர்  மாவட்டச் செயலாளர்  முரளிதரன் மற்றும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


 இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை தொடங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் கனவு திட்டமான தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட இரண்டாவது தலைநகரை உருவாக்கிட தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்ள படுகிறது. எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் இளைஞரணி சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மத்திய தொழிற் பணிகளிலும், தமிழக அரசின் வேலைவாய்ப்பு களிலும் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இந்த கூட்டத்தில் இளைஞர் அணி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

பேட்டி:
சமத்துவ மக்கள் கட்சி
மாநில இளைஞரணி செயலாளர்.

 பிரான்சிஸ் அந்தோணிராஜ்
On Friday, March 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி: 

ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

                    
திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தெற்கு ரயில்வே அனைத்து கோட்ட மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஈகிள் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துராமன், பொருளாளர் வெங்கடாசல பெருமாள் உட்பட ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து இதில் ஈகிள் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட திருச்சி, சேலம், மதுரை, சென்னை ஆகிய 4 கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 300 ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.  தற்போது 500 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. கடந்த ஆறு மாத காலமாக இந்த நிலுவைத் தொகையை வழங்காமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. 


ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இருந்தபோது ஒப்பந்த தொகை உடனடியாக வழங்கப்பட்டது. தற்போது பொது பட்ஜெட்டுடன் இணைந்த பிறகு நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த வகையில் இந்தியா முழுவதும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

நாங்கள் இந்த போராட்டத்தை அறிவித்த பின்னரே பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறி இருக்கிறார்கள். எனினும் உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வில்லை. அதனால் இந்த போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத் தொகை நிலுவையில் இருப்பதால் பணியாளர்களுக்கு கூலி வழங்க முடியவில்லை. வங்கிகளில் கடன் திருப்பி செலுத்த முடியவில்லை. அதனால் தொழில் பாதித்துள்ள து என்றார். 
On Friday, March 06, 2020 by Tamilnewstv in    


திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

. "யுகா" அமைப்பு நிர்வாகி அல்லிராணி
 மகப்பேறு நிபுணர்,
ராமகிருஷ்ணா மருத்துவமனை
  டாக்டர் ரமணி தேவி ,மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் மகப்பேறு நிபுணர்,
ராமகிருஷ்ணா மருத்துவமனை
  டாக்டர் ரமணி தேவி பேசுகையில்,


 கொரோனா வைரஸ் நோய் தற்போது ஈரான், இத்தாலி, சீனா, கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

 கடந்த மாதம் சீனாவில் இந்த நோயால் தினமும் 3,500 பேர் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. தற்போது இந்த எண்ணிக்கை 300 ஆக குறைந்துள்ளது.
இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் காரணம். இந்நோய்க்கான தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை முறைகளை கண்டுபிடிக்குமாறு மருத்துவர்களுக்கு தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  குழந்தைகள், முதியவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் போன்ற நோய்க்கு ஆளாகியவர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது. தற்போதைய சூழ்நிலையில் இதற்கு சிகிச்சை முறை, மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள மூலிகை மருந்துகளுக்கு நிகராக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் மருந்துகள் உள்ளது. குறிப்பாக கொரோனா நோயை தடுக்க கை கழுவும் முறையை சிறந்த தடுப்பு முறையாகும். நமது நாடு தூசிகள் நிறைந்த நாடு. அதனால் கை கழுவும் பழக்கத்தை வழக்கமாக மேற்கொள்ளவேண்டும்.


நம் கைகள் மூலம் மூக்கு வாய் போன்றவற்றை அடிக்கடி தொடக்கூடாது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிலவும் வெப்பநிலையில் கொரோனா நோய் பரவ வாய்ப்பு கிடையாது. 15 டிகிரி செல்சியஸ் இருந்தாலே கொரோனா கிருமி  அழிந்துவிடும். மூச்சுத் திணறல், உடல் வலி, தலைவலி, இருமல், சளி போன்றவை இந்நோய்க்கான அறிகுறியாகும். இத்தகைய அறிகுறி இருந்தாலே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று நோய் தாக்குதல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நோய் தாக்குதல் இருந்தால் உடனடியாக அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்படும். நுரையீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்து உயிர் இழப்பை சந்திக்க நேரிடும். 100 பேருக்கு இந்நோய் இருந்தால் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்களே இறப்புகளை சந்திக்கின்றனர்.
 52% பேர் குறைந்த அளவிலான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 15 சதவீதம் பேர் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். 3 சதவீதம் பேர் மட்டுமே சிக்கலுக்கு ஆளாகின்றனர்.


மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு செல்வதை தவிர்த்து தனிமையில் இருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்களுக்கு இத்தகைய நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கை கழுவுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பேட்டி: மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்

Thursday, March 05, 2020

On Thursday, March 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் என்றழைக்கப்படும்

ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்

ரெங்கநாதர்  கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா வரும் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.  தெப்பத்திருவிழாவின் 7ம் நாளான இன்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான அன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து


மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார்.  இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 9ம் திருநாளான 6ம் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில்நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
On Thursday, March 05, 2020 by Tamilnewstv in    
இன்பச் சுற்றுலாவில்  கைதானவர்கள். ஜாமீனில்  வந்தாலும் ஜாமீன் ரத்து செய்தாலும் கவலையில்லை.

திருச்சி மன்னார்புரத்தில் தலைமை இடம் அமைத்து பொதுமக்களை ஏமாற்றி வரும் நிறுவனம் எல்பின்.
இந்நிறுவனத்தின் சார்பில் கடந்த மாதம் தஞ்சாவூரில் பிரசன்னா வெங்கடேஷ் என்பவர் தலைமையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனுமதியில்லாத இக்கூட்டத்தை தஞ்சை போலீசார் தடுத்து நிறுத்தி கூட்டத்தை ஏற்பாடு செய்த பிரசன்ன வெங்கடேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார், கிங்ஸ்லி சில நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். காவல்துறை  இருவரையும் கைது செய்தது.



பல நாட்களாக சிறையில் இருந்த இருவரையும் எல்பின் சகோதரர்கள் ராஜா மற்றும் ரமேஷ் இருவரும் பல கோடி ரூபாய் பணம் கட்டி ஜாமீனில் வெளியே எடுத்தனர். இவர்களுடன் சத்யபிரியா என்ற பெண்மணி தேடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அழகர்சாமி என்கிற ராஜா எஸ்ஆர்கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் ஆகியோர் துபாயில்  இருந்துகொண்டே அழகர்சாமி என்கிற ராஜா தமிழக காவல்துறையே  வியக்கும் வகைபில் தஞ்சை காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் ஆடியோ வெளியிட்டிருந்தார்

இந்நிலையில் எல்பின் குடும்பத்தினர் என கூறி 800க்கும் மேற்பட்டோர் துபாய்க்கு  இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பல நூறு பவுன் வரை பரிசளிக்க உள்ளனர் எல்பின்  நிறுவனர்கள்  அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஜாமினில் வெளிவந்துள்ள பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி இருவரும் இவர்களுடன் இன்பச்சுற்றுலா துபாய் சென்றுள்ளனர்


இப்படி சென்றதற்கு  முறையாக நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்றார்களா ? அல்லது எந்த அனுமதி பெறாமல் நீதிமன்றத்திற்கும் காவல்துறைக்கும் தெரியாமல்  அறிவிக்காமல் துபாய் சென்று உள்ளார்களா அவர்களது பாஸ்போர்ட்டில் சென்றார்களா அல்லது போலி பாஸ்போர்ட்டில் சென்றார்களா என தெரியவில்லை. முறைப்படி அனுமதி வாங்காமல் எப்படி ஜாமினில் வெளியில் வந்தவர்கள் வெளிநாடு உடனடியாக எப்படி சென்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது?
இப்படி பட்ட சம்பவங்கள் தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் வகையில் உள்ளது. இதற்கு மத்திய புலனாய்வுத்துறை மற்றும் காவல்துறை தான் உடனடி ஆக்சன் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது
On Thursday, March 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா, 1500 ஆடுகளின் ரத்தத்தை குடித்து மருளாளி அருள்வாக்கு கூறினார்.

திருச்சி புத்தூரில் பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா சிறப்பு வாய்ந்தது, இந்த ஆண்டு மாசித் திருவிழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது, அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாம் தேதி மறு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.


நேற்று ஓலை பிடாரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் இன்று காலை புத்தூர் மந்தையில் கோலாகலமாக  துவங்கியது.
ஓலை சப்பரத்தில் அம்மன் புத்தூர் மந்தைக்கு கொண்டுவரப்பட்டது, இதைத்தொடர்ந்து குட்டிக்குடி துவங்கியது முதல் மரியாதையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் ஆட்டுக்கிடா வழங்கப்பட்டது, கழுத்தைக் கடித்து ரத்தத்தை மருளாளி சிவக்குமார் குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார், இதில் சுமார் 1500 கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
On Thursday, March 05, 2020 by Tamilnewstv in    
அத்துமீறி அண்ணன்  வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளால் கிராமம் காலணி தெருவைச் சேர்ந்தவர்  முரளிராஜாவின் மகன் முரளி(32). இவருக்கு வெற்றிச்செல்வி என்ற மனைவியும்,10 வயதிற்க்குள் 2 மகன் களும்,ஒரு மகளும் உள்ளனர். சொந்தமாக வீடு இல்லாத நிலையில் கூலி வேலை செய்து பிழைப்புபிழைப்பு நடத்தி வருகிறார்.அதேபோல சற்று அருகே இவருடைய அண்ணன் பிரபு(35) தன் மனைவி சுதாவுடன் தனியாக வசித்து வருகிறார். பிரபு வீட்டிற்கு நேர் எதிரே வசிக்கும்  கலியமூர்த்தி மகன் வசந்தகுமார் (24).இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதில் பிரவு,,முரளியின்  மனைவிகள் அக் கா,தங்கைகளாவார்கள்


இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்க்கு முன் குடிபோதையில் பிரபுவின் வீட்டிற்கு இரவில்  தவறான நோக்கத்துடன்   அத்துமீறி உள்ளே புகுந்துள்ளார். இதை கண்ட பிரபு வசந்தகுமாரை பிடித்து விசாரிக்கையில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். வசந்தகுமார் இங்கிருந்தால் பிரச்சனையாகிவிடும் எண்ணி அவனது பெற்றோர் உறவினர் வீட்டிற்கு சென்று மறைந்து கொள்ளும்படி  அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஊர் தலைவரிடம் முரளி குடும்பத்தினர்  புகார் கூறியுள்ளனர். ஊர் பெரியவர்களும் வசந்தகுமாரின் பெற் றோரிடம் அவனை ஊருக்கு வரச்சொல்லியுள்ளனர். ஆனால் கிராமத்தின் விசாரணைக்கு முன் வசந்தகுமார் முரளி கண்முன் மோட்டார் சைக்கிளில்  போக்கு காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முரளி தன் அண்ணன் பிரபுவை கூட்டிக் கொண்டு வசந்தகுமாரிடம் கேட்க வீட்டிற்கு சென்றுள்ளார்.பிரபு தூங்கிக் கொண் டிருந்நதால் திரும்பிய  முரளியை வசந்தகுமார் அம்மா புஷ்பா திட்டியதால் இதைக் தட்டி கேட்ட முரளியை வசந்தகுமார், தந்தை கலியமூர்த்தி, தாய் புஷ்பா,வசந்தகுமாரின் அக்கா கணவர் நாகராஜ் மற்றும் உறவினர்கள் என 6 பேர் கொண்ட கும்பல் முரளியை தாக்கியுள்ளனர். ஏற்கனவே கொலைத் திட்டத்தோடு  மதுபோதையில் இருந்த வசந்தகுமார் அன் கோ  கத்தியால் சரமாரியா குத்தியுள்ளனர். 9 க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்  துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (60) என்பவர் தடுக்க முயன்ற போது அவருக்கு கத்திகுத்து விழுந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.


தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். வசந்நகுமார்,அவரது அக்கா கணவர் நாகராஜ்,தந்தை கலியமூர்த்தி, தாய் புஷ்பா  ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து ்வருகின்றனர்.