Friday, April 03, 2020

On Friday, April 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 03

திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு
மலிவு விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. 

இதையடுத்து தமிழக அரசின் உள்ளாட்சி துறை சார்பில் மலிவு விலையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று இந்த விற்பனையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,  வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள் 150 ரூபாய் என்ற மலிவு விலைக்கு தமிழக அரசால் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக வீடுகள் தோறும் சென்று இந்த காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை மக்கள் வாங்கி பயன் அடைந்து கொள்ள வேண்டும்.  வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை உள்ளடக்கிய 4 கோட்ட பகுதிகளில் தினமும் இந்த காய்கறி விற்பனை நடைபெறும். அதனால் கொரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


On Friday, April 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 03

திருச்சி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த 500 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியா உல் ஹக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருச்சி மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் 600 பேர் மீது 500 வழக்கு பதியப்பட்டு, 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமலும், விதிமீறல் செய்தவர்கள் எனவும் என  2300 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி முதல் நேற்று
2558 நபர்கள் மீது
2151வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுவரை 2228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரணமின்றி சுற்றித் இருந்ததாக மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல்
2வரை 19 ஆயிரத்து, 970 வழக்குகள் பதியப்பட்டுள்ளது
என தெரிவித்துள்ளார்.


On Friday, April 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாநகர காவல் துறையினருக்கு சனிடைசர் மற்றும் முக கவசம் மாநகர காவல்துறை ஆணையர்  வழங்கினார்


திருச்சி மாநகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிய 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 அது சம்பந்தமாக காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்தும் பொருட்டும் சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்கவும் தற்காலிக காய்கறிகள் அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி மாநகரில் முக்கியமான பகுதிகளில் காவல் துறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் சட்டம் மற்றும் ஒழுங்கு குற்றப்பிரிவு சிறப்பு பிரிவுகள் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மாநகர ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை மற்றும் திருச்சி மாநகரத்தில் பணிக்கு வந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிய அமைச்சுப் பணியாளர்கள் ஆகிய 2500 நபர்களுக்கு தலா 500 மில்லி லிட்டர் பாட்டில் ஒன்று முக கவசம் 2 மற்றும் பொருட்கள் அடங்கிய பையனை மாநகர காவல்துறை ஆணையர் வழங்கினார்

Thursday, April 02, 2020

On Thursday, April 02, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 02

திருச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வரை சந்தித்தனர்.

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடைய
பல ஆயிரம் பேர் கொரோனா தாக்கியிருக்கக் கூடிய அபாயத்தில் இருப்பதாக தகவலையடுத்து பல இடங்களில் இஸ்லாமியர்களை தவறான கண்ணோட்டத்துடன் செய்தி பரவி வருகிறது.
மேலும் தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்து 600 பேர், வெளிநாட்டவர்கள் ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தகைய நபர்கள் மேலும் இருந்தால் கண்டறிய
24மாநிலங்கள்,
4யூனியன் பிரதேசங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை, தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

                           (அப்துல்லா)


                 
                         ( முகமது அலி)

( திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் வீடியோ பதிவு வாட்ஸ்அப்பில் வந்தது)

இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 190 தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா ஆகியோரை சந்தித்தனர்.

இருவரையும் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிக் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் இஸ்லாமியில் டெல்லி மாநாட்டுக்கு சென்ற வந்தவர்கள் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தானாக வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.



 அவர்களுக்கான ரத்தபரிசோதனை முடிவு இதுவரை வரவில்லை
இந்நிலையில் மருத்துவ துறையினர் மருத்துவமனையில் உள்ளவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு கட்டாயபடுத்தி அழைக்க கூடாது என தெரிவித்துள்ளோம்.
மேலும் அப்படி  சென்றால் அப்பகுதியில் உள்ள ஜமாத்தினர் உதவியுடன் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக  கூறினார்.
On Thursday, April 02, 2020 by Tamilnewstv in    
Today evening Coimbatore CBOA team
ESWAR AGS and RS Mathson along with other office bearers visited E-Syndicate bank RO, (Now RO II) and had a friendly and informal meeting.

The RO head Mr Sivaraman AGM was very friendly, and during the talk we came to know his native as Andaman. A very knowledgeable and an affectionate person he was, and with a little tinge of pain in his heart, remarked that their Bank is non existent now.

Friends, this is an emotion which is looming large, when one loves the institution so much and committed to that job of taking it to greater heights. After so many years of toil and at one point of time when one realises that the bank for which he had worked for, is no more it gives rise to the natural emotions.

Some express it, just as the AGM did, but most of them do not reveal their emotions and try to conceal it in the darkest part in their heart.

Let us welcome our friends in e-Syndicate Bank with an open heart and let us make them feel at ease and take a vow that, at any point of time we should not be out of sync or for that matter make them feel insecure or inferior during any conversation or meeting.

E-Syndicate Bank has 39 branches in Coimbatore district and their Coimbatore region (RO II) also comprises of the branches in the Coimbatore region alone. We, in the days to come will have to visit more branches, as in order to inculcate the culture of CANPAL among them also.

The amalgamation of our Associations will be a smooth affair and as per the guidance and leader ship of our beloved GS Manimaran sir.

*CBOA ZINDABAD*
On Thursday, April 02, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 2

திருச்சி அரசு  மருத்துவமனையில் கொரோனா வைரஸ்
நோய் 100ஐ தாண்டியது  - வெளியில் சுற்றி திரிந்தால்  இனி  குற்றவியல் வழக்கு தான் -


மாவட்ட
ஆட்சித்தலைவர் எச்சரிக்கை 


திருச்சி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
3நபர்கள் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு தனி பிரிவில் சிகிச்சைபெற்று வந்தனர்
இதில் ஈரோட்டை சேர்ந்த நபருக்கு
கொரோனா வைரஸ்
நோய் உள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 80நபர்களும்
இன்று 27நபர்களும் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளனர்
இதில் 43நபர்களுக்கு இரத்த மாதிரி
பரிசோதனை
எடுக்கப்பட்டுள்ளது.
இது வரை மொத்தம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
110 நபர்கள்
சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில்
1 நபர் - மட்டுமே மாஸ்க் அணிந்து பயணம்
செய்ய வேண்டும். பொதுமக்கள் சிலர்
காய்கறிகள் வாங்க குழந்தைகளுடன் வருவதை தவிர்த்தல் வேண்டும்
2நபர்கள் பயணம்
செய்தால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் வாகனம் பறிமுதல்
செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  எச்சரித்துள்ளார்.

On Thursday, April 02, 2020 by Tamilnewstv in    
*திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்*

கொரோனா உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகினறனர்.

 அதனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய்  நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் பணி இன்று முதல் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.
 இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மரக்கடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இதை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு உணவுப் பொருட்களை பெற்று சென்றனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில். கரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக  திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 84 ஆயிரத்து 587 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையும், உணவுப்பொருட்களும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டும். வெளியில் வரக்கூடாது.  அனைவரும் வெளியில் வரக் கூடாது என்பதற்காக தான் இந்த ஒரு மாதத்திற்கான உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும். கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து திருச்சி கடைவீதியில் உள்ள பெரிய கம்மாள தெரு மற்றும் சின்ன கம்மாள தெரு ஆகிய தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுப்பட்டு பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது பொறுப்பாளர்கள் ஜவகர்,அன்பழகன்,சந்துகடைசந்துரூ,
உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்

Wednesday, April 01, 2020

On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி அமைச்சர் வளர்மதி இலவசமாக முகக் கவசம் வழங்கினார்

திருச்சி



கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.



இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வரும்  ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் உள்ள வார்டுகளை தமிழக பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வைரஸ் தாக்கத்தில் இருந்து காத்து கொள்ளும் வகையில் மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் இருந்து பொது மக்களுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை கூறினார்.

இந்நிகழ்வின்போதுபகுதிச் செயலாளர் டைமன்செயலாளர் டைமண்ட் திருப்பதி  அமைச்சர் நேர்முக உதவியாளர் முருகன் அதிமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 01


திருச்சி மாநகரில் 336 வழக்குகள் பதிவு -1000 நபர்கள் கைது -
10இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும்
கடைகள் - மாநகர காவல்துறை ஆணையர்

இது குறித்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில்

திருச்சி மாநகரத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக சமூக விலகலை
கடைபிடிக்க வேண்டி மார்ச் 25-ந்தேதி முதல் 21 நாட்களுக்கு மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளின்றி
வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு
கடந்த 24-ந்தேதி அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை வாகனங்கள் மற்றும்
தனியார் வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு
பொதுமக்களுக்கு திருச்சி மாநகரம் முழுவதும் காவல்துறையினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
மேலும், அரசின் உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியில்
சுற்றித்திரிந்ததற்காக திருச்சி மாநகரில் 336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1000 நபர்கள் கைது
செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்968 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே.நகர்
மாநகர ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,08,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி தேவையில்லாமல் வெளியே வருவதை
தவிர்க்கும்படியும், மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர
காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாநகரில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி
10இடங்களில்
(1.மதுரம் மைதானம், கீழப்புலிவார்டு ரோடு, 2. அண்ணா நகர் உழவர் சந்தை, தென்னூர், 3. அண்ணா
விளையாட்டரங்க முன்புறம், 4. கே.கே.நகர் உழவர் சந்தை, 5.மத்திய பேருந்து நிலையம், 6.எஸ்.ஐ.டி.
மைதானம், அரியமங்கலம், 7.பிஷப்ஹீபர் கல்லூரி மைதானம், புத்தூர், 8.சத்திரம் பேருந்து
நிலைய சுற்று வட்டாரப் பகுதி,
9.N.S.மேல்நிலைபள்ளி மற்றும் 10. ஸ்ரீரங்கம் ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி) காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும் சில்லறை விற்பனை சந்தைகள் செயல்பட்டு
வருகிறது. மேற்படி இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் திருச்சி காவேரி பாலத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் நாளை முதல்
(02.04.2020) இயங்காது என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேற்கண்ட
இடங்களில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட் கடைகள் காலை 06.00 மணிமுதல் மதியம் 02.30
மணிவரை செயல்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறதுமேலும் ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்தும் பொருட்டும், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து,
தேவையற்ற பிற நடமாட்டங்களை குறைக்கும் வகையிலும் மாநகரில் வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று
வருகிறது.