Monday, August 26, 2024

On Monday, August 26, 2024 by Tamilnewstv in ,    

பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!



திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி மற்றும் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக் கண்காட்சி  திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்யா குளிர் அரங்கில்  மூன்று நாட்கள் நடைபெற்றது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டியானது யுகேஜி, எல்.கே.ஜி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல் பிரிவில் கேம்பியன் பள்ளி யுவின் விராஜ் முதலிடமும், அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளி பூஜா ஸ்ரீ இரண்டாம் இடமும், ராஜாஜி வித்யாலயா பள்ளி இனியன் மூன்றாம் இடமும் பெற்றனர்.

பறவைகள் படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் பிரிவில் கேந்திர வித்யாலயா பள்ளி  பிருத்திகா முதலிடமும், சந்தானம் வித்யாலயா பள்ளி பிரதன்யா இரண்டாம் இடமும், மகாத்மா காந்தி வித்யாலயா பள்ளி தீக்ஷிதா மூன்றாம் இடமும் பெற்றனர்.

பிறந்த தின விழா கேக் வரைந்து வண்ணம் தீட்டும் பிரிவில் ஆர்.எஸ்.கே பள்ளி லிங்கேஸ்வரர் முதலிடமும், கமலா நிகேதன் பள்ளி தியா கார்த்தி இரண்டாம் இடமும், ஆர்ச்சர்டு பள்ளி மணிஷ் கார்த்திக் மூன்றாம் இடமும் பெற்றனர் 

உணவு பாதுகாப்பு குறித்து படம் வரைந்து வண்ணம் தீட்டும் பிரிவில் தூய ஆண்டனி மேல்நிலைப்பள்ளி ஆண்டனி மரியா சூசை முதலிடமும், எஸ்ஆர்வி சீனியர் செகண்டரி பள்ளி ஜனாலினி இரண்டாம் இடமும், காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி சஞ்சிதா மூன்றாம் இடமும் பெற்றனர். 

 சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம்
தலைப்பில் நடைபெற்ற
3 நாட்கள் ஓவிய கண்காட்சியில் 
33 இளம் ஓவியர்கள் 
பங்கேற்று இந்திய அரசியலமைப்பு  சட்டங்களை தூரிகை ஓவியத்தில் உயர் பண மதிப்பிழப்பு சட்டம், போக்சோ சட்டம், வன உயிர் பாதுகாப்பு சட்டம், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், கல்வி உரிமைச் சட்டம். கையால் துப்புரவு பணி செய்பவர்கள் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுவது தடைச் சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு  நலன் சட்டம் என பல்வேறு தலைப்புகளில்  
133 ஓவியங்களை காட்சிப்படுத்தினர்.

 ஒவிய கண்காட்சியினை மேனாள் நீதி அரசர் கே. சந்துரு துவங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி எம்.மகாலட்சுமி,
 ஓவியர்  என் எஸ். மனோகர்  ஒவியங்கள் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

பரிசளிப்பு விழாவில் டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார் இயக்குனர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றினார்

ஓவியப் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஒவிய கண்காட்சியில் பங்கேற்ற இளம் ஓவியர்களுக்கும், ஓவியக்கலை பயின்ற ஓவியர்களுக்கும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ  சான்றிதழும் பரிசுகளையும் வழங்குகினார்.

கவிஞர் நந்தலாலா,
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மதிவதனி உள்ளிட்டோர்
வாழ்த்துரைவழங்கினர். 

 முன்னதாக பொற்கொடி வரவேற்க, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரொஹையா  ஷேக் முகமது
 திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்  கட்சி நிர்வாகிகள் பகுதிச் செயலாளர் செல்லதுரை உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Saturday, May 04, 2024

On Saturday, May 04, 2024 by Tamilnewstv   

 



திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி

 மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு  மாணவிகள் (ரஞ்சிதா,ரோஷினி, சாய் லக்ஷ்மி, ஷாலினி, சிந்து,சுஜிதா ஶ்ரீ, சன்மதி, சுமிப்ரீதி, சுவேதா, தாமரை, த்ரிஷா, வைதீஸ்வரி,) ஊரக பங்கீடு மதிப்பீடு ஏற்பாடு செய்தனர். அங்கு கிராமிய மதிப்பீடு வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கு மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான கிராமப்புற மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்கள் கிராமத்தை பற்றிய பல்வேறு தகவல்களை மாணவிகளுக்கு தெரிவித்தனர்.இந்நிகழ்வில் மாணவிகள் அகிராமத்தின் மதிப்பீடான சமூக வரைபடம், வள வரைபடம், தினசரி வேலைப்பாடு கடிகாரம், இயக்க வரைபடம், பருவ கால அட்டவணை, நலன் தரவரிசை, பிரச்சனை மரம்,அருகாமையில் உள்ள வளங்களுக்கான வென் வரைபடம், மனித உடல் வரைபடம் மற்றும் காலக்கோடு ஆகியவற்றை வரைந்து கிராமிய மதிப்பீட்டின் வரைபடம் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

செயல்முறை விளக்கம்:

இந்நிகழ்வில் அக்கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு வேளாண் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுதியதோடு விவசாயிகளுக்கு வியசாயம் சார்ந்த செயலிகள் பற்றி காட்சியளித்து எடுத்துரைத்தனர்.

Friday, September 29, 2023

On Friday, September 29, 2023 by Tamilnewstv in ,    

 


திருச்சி உழவர் சந்தை பகுதியில்  தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு கோரிக்கைகளை வரிவொருத்தி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியிலே தேவேந்திர வெளாளர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரு நபர்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் உறுப்பினராக நியமிக்கப்பட்டதுமற்றும் சுமார் 75 மாவட்டசெயலாளர் ஒருவர் கூட தேவேந்திர வெளாளர்கள்சமுதாயத்தை சேர்ந்தவர்கள்ஒருவர் கூட திமுக மாவட்ட செயலாளர் ஆகஇல்லை மற்றும் 21 மாநகராட்சியில் மேயர் பதவிக்கு தேவேந்திர குல வெளாளாளர்களுக்கு வழங்கவில்லை மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில ஒருங்கிணைப்பாளர் .மு. கண்ணுச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அனைத்துக் கட்சி தேவேந்திர குல வெளnளாளர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் வழக்கறிஞர் முத்துச்சாமி, சேட்டு, செல்வராஜ், ராஜமாணிக்கம், ராணி, ஆறுமுகம், சிற்றரசு, மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள் 

Wednesday, September 06, 2023

On Wednesday, September 06, 2023 by Tamilnewstv in    

 


தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவன தலைவர்             மு . கண்ணபிரான் பாண்டியன் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று 05.09.2023ல்  வழக்கறிஞர் ஓ .முத்துவேல்..          பொதுச் செயலாளர் அவர்கள் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் குழுமணி   

                            அ. அருண்குமார் அவர்கள் ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் மல்லை சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Monday, July 31, 2023

On Monday, July 31, 2023 by Tamilnewstv in    

 திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி


28.7.2023 குற்றவியல் வழக்கறிஞர்கள்  சங்க தேர்தல்  நடைபெற்றது இதில் தலைவர் துணைத் தலைவர் இணைச் செயலாளர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது 



388 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன் மூத்த வழக்கறிஞர்கள் மதிப்பிற்குரிய பெண் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றும்  மேலும் சங்க வளர்ச்சிக்காக அனைத்து மதிப்பிற்குரிய மூத்த வழக்கறிகளையும் வழிகாட்டுதலின்படி இளம் வழக்கறிஞரின் கூட்டு பலத்துடன் திறன்பட செயல்படுவோம்


மேலும் பெண் வழக்கறிஞர்கள் குற்ற வழக்கறிஞர்கள் நபர்கள் கூடி விட்டதால் அவர்களுக்கு பார் அருகிலேயே தனி அறை ஏற்படுத்தித் தருவோம் திறம்பட செயலாற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன் என்று திருச்சி குற்றவியல் சங்க செயலாளர் திரு வெங்கட் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது சட்ட உரிமை பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர்  அருண் சித்தார்த்தா மற்றும் பெண் வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்


பேட்டி .....குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு வெங்கட்

Saturday, June 17, 2023

On Saturday, June 17, 2023 by Tamilnewstv in    

 



அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


மதுரையில் தலைமை இடமாகக் கொண்டு தமிழக முழுவதும் போலி மருத்துவ சான்றிதழ் வழக்கறிஞர்கள் குழு பகீர் குற்றச்சாட்டு

சுகாதாரத் துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்த வழக்கறிஞர்கள் குழு தமிழக முழுவதும் போலி மருத்துவ சான்றிதழ் கொண்டு எலக்ட்ரோ ஹோமியோபதி என்கிற பெயரில் ஐந்தாண்டு மருத்துவம் படித்தது போல் சான்றிதழ்

 இதழ்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி போலி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் உலாவி வருகின்றனர் 


அதன் ஒரு பகுதியாக திருச்சியில் மையமாக வைத்து பல்வேறு ஆங்கில மற்றும் சித்த மருத்துவம் காலாவதியான மருந்துகளை வைத்து மருத்துவம் செய்து வந்துள்ளார் மேலும் ஊசி மருந்துகள் வைத்து மருத்துவம் பார்த்துள்ளார் 


 பொன்ராஜ் என்பவர் அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் வழக்கறிஞர்கள் குழுவில் உள்ள ஒருவருக்கு வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்பட்டது


 அப்போது பொன்ராஜ் என்பவர் அக்குபஞ்சர் மருத்துவம் செய்து வருவதாக கூறினர்


 அதன் அடிப்படையில் மருத்துவ குழு பொன்ராஜ் அவர்களை சந்தித்து மருத்துவம் செய்ய கோரிய பொழுது நான் எலெக்ட்ரோ ஹோமியோபதி என்ற மருத்துவம் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்



அவரும் மருத்துவம் செய்துள்ளார், அருகில் ஊஷி ஆங்கில மருத்துவம் பார்த்துள்ளார், வழக்கறிஞர்கள்

 கண்டறிந்து ஆதாரங்கள் திரட்டி இணை இயக்குனர் சுகாதாரத்துறை அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டு தற்போது ஆய்வு செய்து அவருடைய சான்றிதழ் போலியான நிரூபிக்கும் அளவிற்கு தெரியவந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றனர் இன்ஜினியரிங் படிப்பில் மின்சார சார்ந்த படிப்பை படித்துள்ள பொன்ராஜ் எந்த ஆண்டு எங்கு எதன் அடிப்படையில் மருத்துவ படிப்பு படித்துள்ளார் என்பதை விளக்கம் கேட்டதற்கு இதனால் வரை பதில் இல்லை என்று வழக்கறிஞர்கள் குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது போன்ற போலி மருத்துவர்கள் மருத்துவம் செய்தால் பொதுமக்களிடையே அரசின் மீது நம்பிக்கை தன்மை இழந்து விடும் ஆகையால் மருத்துவ துறை சார்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற போலி மருத்துவர்கள் கைது செய்ய வேண்டும் என வழக்கறிஞர் சார்பாக தெரிவித்துள்ளனர் அப்படி செய்தால் மட்டுமே இது போன்ற போலி மருத்துவர்கள் இரும்பு கரம் கொண்டு தடுக்க முடியும் எனவும் வலியுறுத்துகின்றனர் அரசு உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்துகின்றனர் எலக்ட்ரோ ஹோமியோபதி தமிழக அரசால் ஏற்காத நிலையில் உள்ள இந்த படிப்பை படித்தோம் எனக் கூறிக்கொண்டு மருத்துவம் செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

Sunday, August 28, 2022

 திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில்,  புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம்.

 ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திருச்சியில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. 



இம்மருத்துவமனையில் நான்கு கோணங்களில் புற்றுநோய் சிகிச்சை வழங்கப்படுகிறது.  



அவை, புற்றுநோய் தடுப்பு, புற்றுநோய் சிகிச்சை, புற்று நோய் நிவாரணம் மற்றும் புற்றுநோய் மறுவாழ்வு ஆகியவை.



 2010ஆம் ஆண்டு திருச்சி தில்லைநகர் பகுதியில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, பின்னர் உறையூருக்கு மாற்றப்பட்டு, தற்போது திருச்சி நாகமங்கலத்தில் புற்றுநோய்க்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மையத்தை நிறுவியுள்ளது.



ஹர்ஷமித்ரா மருத்துவமனை, திருச்சியில் புற்றுநோய் சிகிச்சையில் ட்யூமர் போர்டு என்ற கருத்தை நடைமுறைப்படுத்திய முதல் மருத்துவமனையாகும்.


 ட்யூமர் போர்டு என்பது அறுவைசிகிச்சை புற்றுநோயியல், கதிர்வீச்சு மற்றும் புற்றுநோயியல் மருந்து (கீமோதெரபி) போன்ற பல்வேறு சிறப்புகளால் அமைக்கப்பட்ட ஒரு பல்துறை குழு கூட்டம் ஆகும்.


இதன் மூலம் மூன்று சிறப்பு மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே இடத்தில் கலந்து ஆலோசித்து, நோயாளிக்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை அல்லது மருந்தியல் சிகிச்சை தேவையா என்பதை தீர்மானிக்கிறார்கள்.  புற்று நோயின் நிலை மற்றும் நோயின் தீவிரம் பொருத்து இந்த கூட்டு சிகிச்சை முடிவு செய்யப்படுகிறது.


இந்த ட்யூமர் போர்டு சிகிச்சையின் மூலம், நோயாளிகளுக்கு ஒரே இடத்தில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.


 "புற்றுநோய் சிகிச்சையில், கதிர்வீச்சு சிகிச்சை மிக முக்கியமான சிகிச்சை முறைகளில் ஒன்றாகும்.


 கதிரியக்க சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன, அவை வெளிப்புற கதிர்வீச்சு மற்றும் உள் கதிர்வீச்சு என்று அழைக்கப்படுகின்றன.


 வெளிப்புற கதிர்வீச்சு முப்பரிமாண கதிர்வீச்சு, தீவிர பண்பேற்றப்பட்ட கதிர்வீச்சு, விரைவான வில் கதிர்வீச்சு போன்ற பல்வேறு நுட்பங்களில் வழங்கப்படுகிறது.


 இந்த மருத்துவமனை கடந்த 4 ஆண்டுகளாக வெளிப்புற கதிர்வீச்சின் மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல வகையான புற்றுநோய்களுக்கு அதிக பக்க விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளித்து வருகிறது.


 கதிரியக்க சிகிச்சையைப் பயன்படுத்தி, பல சூழ்நிலைகளில் அறுவை சிகிச்சையைத் தவிர்க்கலாம், மற்றும் பாதிக்கப்பட்ட உறுப்பைக் காப்பாற்றலாம்.


உதாரணமாக, சிறுநீர்ப்பை அல்லது குரல்வளையில் புற்றுநோய் இருந்தால், அந்த உறுப்புகளை வழக்கமாக அறுவை சிகிச்சை மூலம் உடலில் இருந்து அகற்ற வேண்டும்.  இது முறையே நிரந்தர சிறுநீர் மாற்று ஸ்டோமாக்கள் மற்றும் நிரந்தர சுவாச துளைகளை ஏற்படுத்தும்.  நோயாளிகள், தங்கள் உடல் உறுப்புகளில் நிரந்தரமான மாற்றங்களுடன் வாழ வேண்டியிருக்கும். மற்றும் உடலில் துளைகள் அல்லது பைகளுடன் வாழ வேண்டும்.


ஆனால் இன்றைய நவீன புற்றுநோய் மருத்துவத்தில் அறுவை சிகிச்சையின்றி கதிர்வீச்சு, கீமோதெரபி போன்றவற்றைப் பயன்படுத்தி உறுப்புகளை அகற்றாமலேயே இதுபோன்ற சிறுநீர்ப்பை மற்றும் குரல்வளை புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்த முடியும்.


பல புற்றுநோய்களில் அறுவை சிகிச்சையைத் தவிர்ப்பதற்காக ரேடியோதெரபி இன்று மிகவும் மேம்பட்டதாகி வருகிறது.


 புற்றுநோய் சிகிச்சையில் கதிரியக்க சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்க, ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தில் மற்றொரு இயந்திரம் தொடங்கப்பட்டுள்ளது" என்கிறார் மருத்துவமனையின் இயக்குநரும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணருமான டாக்டர்.பொ.சசிப்ரியா.


மருத்துவமனையின் 13வது ஆண்டு விழாவில், திருச்சியின் முதல் 24 சேனல் பிராக்கிதெரபி கருவி 28.8.2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.


தொடக்க விழாவிற்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர், திரு. தென்காசி எஸ் ஜவஹர் ஐஏஎஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.


விழாவில் திரு.  M. பிரதீப் குமார், IAS., மாவட்ட ஆட்சியர்., திருச்சி, திரு.சுஜித் குமார்., IPS., காவல் கண்காணிப்பாளர், திருச்சி, திருமதி. R. அபிராமி, B.Tech.  மாவட்ட வருவாய் அலுவலர், திருச்சி, டாக்டர். ஆர். மோகன், MS.,M.Ch., FICS., தலைவர்., IMA திருச்சி கிளை., திருமதி. K. கமலம் கருப்பையா, சேர்மன்.  மணிகண்டம் ஒன்றியம், திரு.G.வெள்ளைச்சாமி, தலைவர், நாகமங்கலம் ஊராட்சி மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மருத்துவர்கள், பிற மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், ஹர்ஷமித்ரா  மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நாகமங்கலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிர்வாக இயக்குநர் டாக்டர்.க.கோவிந்த ராஜ்வர்த்தனன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார், அவரும், பிராக்கிதெரபி பற்றி அறிமுகவுரையாற்றிய டாக்டர்.பொ.சசிப்பிரியாவும் விருந்தினர்களை கவுரவித்தனர்.


 சிறப்பு விருந்தினர்கள் கூட்டத்தில் உரையாற்றினர்.


 டாக்டர் கே.எஸ்.செந்தில்குமார் நன்றி கூறினார்.


 "பிராக்கிதெரபி சிகிச்சை முறை நாடு முழுவதும் 232 மையங்களில் பயன்படுத்தப்பட்டாலும், திருச்சியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனைதான் முதன்முதலில் 24 சேனல் பிராக்கிதெரபியை அறிமுகப்படுத்தியுள்ளது" என்கிறார் டாக்டர் பொ.சசிப்ரியா.


 "பிராக்கிதெரபி என்பது கதிர்வீச்சை வெளியிடும் இரிடியம் ஐசோடோப்பைப் பயன்படுத்தும் ஒரு நுட்பமாகும்.


இந்த ஐசோடோப்பு பொதுவாக எந்த கதிரியக்கமும் வெளியேறாமல் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிராக்கிதெரபி இயந்திரத்திற்குள் பாதுகாப்பாக இருக்கும்.


சிகிச்சையின் போது, ​​இரிடியம் ஐசோடோப்பு, இந்த இயந்திரத்திலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெளியிடப்படுகிறது.  இந்த இரிடியம் ஐசோடோப்பானது, இயந்திரத்தின் 24 சேனல்கள் வழியாக,  குறிப்பாக கட்டி அமைந்துள்ள இலக்கை அடைந்து உடலில் உள்ள கட்டியை நேரடியாக தாக்குகிறது.


அறுவைசிகிச்சை இல்லாமல் பல புற்றுநோய்களில் முழுமையான சிகிச்சையை அடைவதற்கு இத்தகைய உள் கதிர்வீச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


உதாரணமாக, கன்னத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி, கட்டியின் அளவைக் குறைக்க வெளிப்புற கதிர்வீச்சு மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். பின்னர் மீதமுள்ள கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.  இது போன்ற சமயங்களில் அறுவை சிகிச்சை மூலம் முழுமையான சிகிச்சை பெற முடியும் என்றாலும், முக அமைப்பில் மாற்றம் ஏற்படும்.  மேலும் கழுத்துப் பகுதியில் உள்ள சதையை எடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும்.

 ஆனால் ரேடியேஷன் தெரபியை ப்ராக்கிதெரபி மூலம் எஞ்சிய கட்டியின் மீது நேரடியாக அளிக்கும் போது, ​​அறுவை சிகிச்சை தேவையில்லை, முக அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் புற்றுநோயை குணப்படுத்த முடியும்.


 உள் கதிர்வீச்சு சிகிச்சையில் பின்வரும் நான்கு வகைகள் உள்ளன:

 1. மேற்பரப்பு கதிர்வீச்சு

 2. உள் திசு கதிர்வீச்சு

 3. உள்குகை கதிர்வீச்சு

 4. இன்ட்ராலுமினல் கதிர்வீச்சு


மார்பகம், கருப்பை வாய், வாய் மற்றும் கன்னப்பகுதி, மென்மையான திசுக்கள், புரோஸ்டேட், உணவுக்குழாய் மற்றும் மலக்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு, இந்த உள் கதிர் வீச்சு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  பிராக்கிதெரபி சிகிச்சைக்கு, ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே ஆகும்.


குறைந்த அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை (எல்.டி.ஆர்) மற்றும் அதிக அளவு கதிர்வீச்சு சிகிச்சை (எச்.டி.ஆர்) எனப்படும் இரண்டு வகையான ப்ராக்கிதெரபி இயந்திரங்கள் உள்ளன.  எல்டிஆர் இயந்திரங்கள் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டன.  இந்த எல்.டி.ஆர் இயந்திரங்களுக்கு நீண்ட சிகிச்சை காலம் தேவைப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு அதிக அசௌகரியம் ஏற்பட்டது. மேலும் நோயாளிகள் நீண்ட நேரம் தனிமைப்படுத்தப்பட்டனர்.


எனவே, சமீப காலங்களில், எச்.டி.ஆர் இயந்திரங்கள், சர்வதேச புற்றுநோய் மையங்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.


 இதுபோன்ற மேம்பட்ட எச்.டி.ஆர் இயந்திரத்தை எங்கள் மருத்துவமனையில் அறிமுகப்படுத்துகிறோம் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.


இந்த இயந்திரம் மூலம் நோயாளிகள் சிகிச்சையை விரைவாக முடிக்க முடியும்.  நீண்ட தனிமைப்படுத்தல் அவசியமில்லை" என்கிறார் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். பொ.சசிப்ரியா.


 "நாகமங்கலத்தில் உள்ள எங்கள் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், அரசு காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறோம். 


கடந்த 12 ஆண்டுகளாக புற்றுநோயைத் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 


திருச்சி மலைக்கோட்டை முழுவதும் இளஞ்சிவப்பு வணன விளக்கேற்றுவது போன்ற மிகப்பெரிய பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.  மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக சர்வதேச அளவில் நியமிக்கப்பட்ட மாதமான 'பிங்க் அக்டோபர்' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் இளஞ்சிவப்பு விளக்குகளுடன், திருச்சி மலைக்கோட்டைய ஹர்ஷமித்ரா மருத்துவமனை மின்ன செய்துள்ளது.


புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட உபகரணங்களுடன் மருத்துவத் துறை மாறிக்கொண்டே இருந்தாலும், சர்வதேச புற்றுநோய் மையங்களுக்கு இணையாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படும் வகையில், சமீபத்திய முன்னேற்றங்களுக்கு ஏற்பவும், ஹர்ஷமித்ரா மருத்துவமனை நோக்கி வரும் மக்களுக்கு, அவற்றைக் கிடைக்கச் செய்யவும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடுமையாக பாடுபடுகிறது.


எனவே, புற்றுநோய் குறித்து இனி பயப்படத் தேவையில்லை, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மட்டுமே தேவை’’ என்கிறார் டாக்டர்.பொ.சசிப்ரியா.


புற்றுநோயின் எட்டு அறிகுறிகளை அறிந்து கொள்வது அனைவருக்கும் நல்லது என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

 1. உடலில் எங்காவது ஆறாத புண்

 2.உடலில் எங்கிருந்தாவது அசாதாரண இரத்தப்போக்கு

 3.மார்பகத்திலோ அல்லது உடலில் வேறு இடத்திலோ கட்டி

 4. மரு அல்லது மச்சத்தில் மாற்றம்

 5. மலம் அல்லது சிறுநீர் கழிப்பதில் மாற்றம், அஜீரணம் அல்லது உணவை விழுங்குவதில் சிரமம்

 6.குரல் மாற்றம் அல்லது கரகரப்பு

 7. தொடர் இருமல் அல்லது இரத்தம் கலந்த சளி

 8. காரணம் இல்லாத எடை இழப்பு


 இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், மக்கள் உடனடியாக புற்றுநோயியல் நிபுணரைத் தொடர்புகொண்டு தகுந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், இதனால் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முழுமையாக குணப்படுத்த முடியும்.

மேலும் எந்த தொந்தரவும் இல்லாதவர்கள் கூட ஆண்டு தோறும் பரிசோதனைகளை மேற்கொண்டு புற்று நோய் வருவதற்கு முந்தைய நிலையிலேயே கண்டு பிடித்து புற்று நோய் வராமலேயே தடுத்துக்கொள்ளும் வகையில், ஸ்கிரீனிங் பரிசோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும்.

Saturday, August 20, 2022

On Saturday, August 20, 2022 by Tamilnewstv in    

 *போதை பொருள் ஒழிப்பு -டிஜிபி ஆலோசனை கூட்டம்*


தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு கொடுத்து மக்களுக்காக பணியாற்றி வருகிறது.


 தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் உத்தரவுபடி தமிழக முழுவதும் போதைப் பொருள்கள் தடுப்பதற்கு மற்றும் பொதுமக்களிடையேவும் மாணவ மாணவியர் சமுதாயத்தினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் விழிப்புணர்வுகள் மாவட்ட ரீதியாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் காவல்துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக

அனைத்து காவல் அதிகாரிகளுடன் இணையதள ஆலோசனை கூட்டம் ,டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையில் நடைபெற்றது. சென்னை காவல் ஆணையர், ஆவடி காவல் ஆணையர், தாம்பரம் காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் தலைமை இயக்குநர், அனைத்து சரக ஐ. ஜி க்கள், டிஐஜி க்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Friday, August 19, 2022

On Friday, August 19, 2022 by Tamilnewstv in    

 *புதிய வகை* *ஆன்லைன் மோசடி:*

*டி.ஜி.பி. சைலேந்திர  பாபு எச்சரிக்கை*



தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு

 ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர்.


தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்கள் பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை

 'ஆன்லைன்' மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் நேற்று விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். 


அதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியிருப்பதாவது:-


ஆன்லைனில் புதிய வகை மோசடி வந்துள்ளது. 


நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பெரிய அதிகாரி, கலெக்டர், டி.ஜி.பி. போன்றவர்கள் செல்போனில் பேசுவது போன்று பேசி, நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன்.


 அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. ஒரு கூப்பன் விலை ரூ.10 ஆயிரம். 10 கூப்பன் வாங்கி அனுப்புங்கள். நான் அப்புறம் பணம் கொடுத்து விடுகிறேன்.' என்று கூறுவார்கள்.

கூப்பன் என்று சொன்னால் ரூ.5 லட்சம் ஆகும். இதெல்லாம் முடிந்த பின்னர், எங்கள் அதிகாரி இப்படி கேட்க மாட்டார். நான் ஏமாந்துவிட்டேன்

என்பது உங்களுக்கு தெரியும். 


இதுபோன்ற மோசடி நடைபெற்றால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். 


காவலன் உதவி செயலியை உங்களுடைய செல்போனில் பதவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். 

இதில் ஆன்லைன் மோசடி என்பதை தொட்டாலே, 1930 என்ற எண்ணுக்கு அழைப்பு போய் விடும். 

இதன் மூலம் உங்களுடைய பணத்தை காப்பாற்றி கொள்ளலாம். 

தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு

'பாஸ் ஸ்கேம்' என்று பெயர் ஆகும். உங்களுக்கு வரும் அழைப்பை பார்த்தால் உங்கள் அதிகாரி பெயர், புகைப்படம், எண் போன்றே இருக்கும். 


ஆனால் அது அவர்கள் கிடையாது. எனவே மோசடி பேர்வழி தான் நம்மை தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எனவே இது போன்ற மோசடியில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் விழுந்து உங்கள் பணத்தை இழந்துவிடாதீர்கள்.

பணம் மட்டுமின்றி உங்கள் மானமும் போய்விடும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

Friday, July 08, 2022

On Friday, July 08, 2022 by Tamilnewstv in    

திருச்சி



வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கணவன் மனைவியை  கொலை வெறி தாக்குதல் 

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அம்பலக்காரர் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஜான் பீட்டர்  இவரது மனைவி சகாய மேரி. இவர்களுடன் சகாய  மேரியின் தந்தையும் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் முத்துமாணிக்கம் வயது 35 இவருக்கும் ஜான் பீட்டருக்கும் இடையே சொத்து பிரச்சினை சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஜான் பீட்டர் தனது வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மார்க்கெட் சென்றபோது அவரை வழிமறித்த முத்து மாணிக்கம் வழக்கை வாபஸ் வாங்க கோரி தகராறில் ஈடுபட்டுள்ளார்.மேலும் அருகில் கிடந்த கல்லைக் கொண்டு ஜான் பீட்டர் முகத்தில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஜான் பீட்டர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து தன்னை தாக்கிய முத்துமாணிக்கம் மீது புகார் அளித்தார். இந்நிலையில் ஜான் பீட்டர் காவல் நிலையத்தில் தன் மீது புகார் அளித்ததை அறிந்து கொண்ட முத்துமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் முத்தையன் ஆகியோர் ஜான் பீட்டரை தேடி அவரது வீட்டிற்கு வந்தனர். ஜான் பீட்டர் வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் அவரது வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அவரது மனைவி சகாய மேரியை தாக்கி இரும்பு கடப்பாரையால் கை மற்றும் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அறிந்து வந்த ஜான் பீட்டர் உடனடியாக தனது மனைவியை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கடப்பாரையால் வயிற்றில் குத்தியதில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.கொலை வெறியுடன் கணவன் மனைவியை தாக்கிய முத்துமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் முத்தையன் ஆகியோரை கைது செய்யக்கோரி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஜான் பீட்டர் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் இதில் முத்தையன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முத்து மாணிக்கம் தற்போது தலைமுறைவாகியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://youtu.be/-SCxEDkWN4I

Monday, June 27, 2022

On Monday, June 27, 2022 by Tamilnewstv in ,    



பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் திண்டுகல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தலுக்கா  கொண்டங்கி கீரனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில்   தனியார் துறை வேலைவாய்ப்பு  மூலம் தமிழக அரசு  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட திண்டுகல் மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இதன் மூலமாக பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டம் , மற்றும் உணவு பாதுகாப்பு திட்டத்தின்  /போஸ்டக், சோலார் மின்சக்தி மூலம் வீடு மற்றும் விவசாய நீர் பாசனத்திற்கு மின்சக்தி பயன்படுத்தும் திட்டம், மத்திய அரசின் மருத்துவ அட்டை அதன் பயன்பாடு ஆகிய பணிக்காக பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு  பணி  துவக்கி வைக்கப்பட்டது, இவற்றில் கொண்டங்கி கீரனூர் ஊராட்சி  மன்ற தலைவர் விஜயலக்ஷ்மி ஷண்முக சுந்தரம் ,  ஆகியோர் முன்னிலையில்  திரு பிஸ்னஸ் சர்விஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் மற்றும் திரு பிஸ்னஸ் சர்வீஸ் வெல்பர் அசோசிசன் மூலம் சுமார் 14 நபர்களுக்கு திண்டுகல்  மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டு பணி துவங்கப்பட்டது.


 (திரு பிசினஸ்  சர்விஸ் வெல்பர் அசோசியேசன் மூலம் தமிழகம் முழுவதும்  உள்ள  கிராம மற்றும் நகர்புற படித்த இளஞ்சார்களுக்கு வேலை   வாய்ப்பு ஏற்புத்தி தரும் நல்நோக்கத்துடன் எங்கள் அமைப்பு தமிழக அரசு தானியார் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தமிழகம் முழுவது பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு முதற்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு கீழ்க்காணும் சேவை துவங்கி வைக்கப்பட்டும், நாங்கள் கீழ்காணும் நலத்திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு மற்றும் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் நல்நோக்கத்தோடு பணியினை தொடர்கிறோம். 


சூரிய மின்சக்தி திட்டங்களின் பயன்பாடு மற்றும் பெறுதல்:


 இன்றைய காலகட்டத்தில் மின்சாரமின்றி எந்த ஒரு பணியும் நடைபெறாத சூழலில் இவற்றில் நமே தன்நிறைவு பெரும்வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் நாம் சூரிய மின்சக்தி மூலமாக தன்னிறைவு பெற்று திகழ வீடு, கடைகள் மற்றும் விவசாய விலைநிலங்களுக்காக நீர்ப்பாசன மின்மோட்டார் ஆகியவற்றிக்கு சூரிய மின்சக்க்தி மூலம் மின்சாரம்`பெற்று பயனடைய விழிப்புணர்வு மற்றும் அவரவர் தேவைக்கேற்ப பெற்றும் தருகிறோம், 


விழிப்புணர்வு :


இன்னுயிர் காக்கும் வகையில் மருத்துவ காப்பீடு, ஆயுள்காப்பீடு திட்டங்களின் பயன்பாடு பெற்று நம்மை நோயின் பிடியில் இருந்து காக்கும் நல்நோக்கத்தோடு தமிழக அரசு முதல்வர் காப்பீடு என்னும் மகத்தான திட்டத்தினை துவங்கி  ஏனைய மக்கள் பயன்பெறும் இனி பயன்பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தினை வழங்கி வருகிறது இவரின் கீழ் அனைத்து மக்களும் பயன்பெற்று வருகின்றனர், இதுபோலவே மத்திய அரசும் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமாந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு எண் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவக்காப்பீடு மற்றும் மருத்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகின்றனர். இவரிக்கிடையில் கரோண போன்ற பெரும்தொற்றில் இருந்த்து நம்மை வருங்காலங்களில் எப்படி காத்துக்கொள்வது மற்றும் நோய்த்தொற்று பரவாமல் நம்மை காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தருகிறோம்


விவசாயசத்திற்குக்கும் விவசாய பெருமக்கள் பயன் நலன்:             

    

திடீர் என்று ஏற்படும் இயற்க்கை பேரிடலால்  நம் விவசாயிகள்  பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு உதவும் வகையில் பயீர்காப்பீட்டின் பயன்பாடு மற்றும் விவசாய கடன் பெறுதல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பெற்று தருதல் 


கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஏற்படுத்துதல்: 


அமைப்பின் முக்கிய செயல்பாடாக தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கும்  படித்த இளைஞர்களுக்கு எங்களது அமைப்பில்  பணியினை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரித்து வருகிறோம். மேலும் சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிகள் மூலமாக பயிற்சி மற்றும் கடன் உதவி பெற்று கிராமப்புற இளைஞர்களை சுயதொழில் ஏற்படுத்தி வருகிறது.)

On Monday, June 27, 2022 by Tamilnewstv in ,    

பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  படைப்பையில் உள்ள தனியார் மண்டபத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு  மூலம் தமிழக அரசு  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இதன் மூலமாக பிரதமந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டம் , மற்றும் உணவு பாதுகாப்பு திட்டத்தின்  /போஸ்டக், சோலார் மின்சக்தி மூலம் வீடு மற்றும் விவசாய நீர் பாசனத்திற்கு மின்சக்தி பயன்படுத்தும் திட்டம், மத்திய அரசின் மருத்துவ அட்டை அதன் பயன்பாடு ஆகிய பணிக்காக பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு  பணி  துவக்கி வைக்கப்பட்டது, இவற்றில் ஒரத்தூர் ஊராட்சி  மன்ற தலைவர் வள்ளி சுந்தர், மற்றும் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன்,  ஆகியோர் முன்னிலையில்  திரு பிஸ்னஸ் சர்விஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் மற்றும் திரு பிஸ்னஸ் சர்வீஸ் வெல்பர் அசோசிசன் மூலம் சுமார் 24 நபர்களுக்கு காஞ்சிபுரம்  மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டு பணி துவங்கப்பட்டது.

(திரு.பிசினஸ்  சர்விஸ் வெல்பர் அசோசியேசன் மூலம் தமிழகம் முழுவதும்  உள்ள  கிராம மற்றும் நகர்புற படித்த இளஞ்சார்களுக்கு வேலை வேலைவாய்ப்பு    ஏற்புத்தி தரும் நல்நோக்கத்துடன் எங்கள் அமைப்பு தமிழக அரசு தானியார் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தமிழகம் முழுவது பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு முதற்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணிக்காக தேர்வு செய்யபட்ட இளஞ்சார்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு கீழ்க்காணும் சேவை துவங்கி வைக்கப்பட்டும், நாங்கள் கீழ்காணும் நலத்திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு மற்றும் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் நல்நோக்கத்தோடு பணியினை தொடர்கிறோம். 


சூரிய மின்சக்தி திட்டங்களின் பயன்பாடு மற்றும் பெறுதல்:


 இன்றைய காலகட்டத்தில் மின்சாரமின்றி எந்த ஒரு பணியும் நடைபெறாத சூழலில் இவற்றில் நமே தன்நிறைவு பெரும்வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் நாம் சூரிய மின்சக்தி மூலமாக தன்னிறைவு பெற்று திகழ வீடு, கடைகள் மற்றும் விவசாய விலைநிலங்களுக்காக நீர்ப்பாசன மின்மோட்டார் ஆகியவற்றிக்கு சூரிய மின்சக்க்தி மூலம் மின்சாரம்`பெற்று பயனடைய விழிப்புணர்வு மற்றும் அவரவர் தேவைக்கேற்ப பெற்றும் தருகிறோம், 


விழிப்புணர்வு :


இன்னுயிர் காக்கும் வகையில் மருத்துவ காப்பீடு, ஆயுள்காப்பீடு திட்டங்களின் பயன்பாடு பெற்று நம்மை நோயின் பிடியில் இருந்து காக்கும் நல்நோக்கத்தோடு தமிழக அரசு முதல்வர் காப்பீடு என்னும் மகத்தான திட்டத்தினை துவங்கி  ஏனைய மக்கள் பயன்பெறும் இனி பயன்பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தினை வழங்கி வருகிறது இவரின் கீழ் அனைத்து மக்களும் பயன்பெற்று வருகின்றனர், இதுபோலவே மத்திய அரசும் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமாந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு எண் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவக்காப்பீடு மற்றும் மருத்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகின்றனர். இவரிக்கிடையில் கரோண போன்ற பெரும்தொற்றில் இருந்த்து நம்மை வருங்காலங்களில் எப்படி காத்துக்கொள்வது மற்றும் நோய்த்தொற்று பரவாமல் நம்மை காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தருகிறோம்


விவசாயசத்திற்குக்கும் விவசாய பெருமக்கள் பயன் நலன்:             

    

திடீர் என்று ஏற்படும் இயற்க்கை பேரிடலால்  நம் விவசாயிகள்  பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு உதவும் வகையில் பயீர்காப்பீட்டின் பயன்பாடு மற்றும் விவசாய கடன் பெறுதல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பெற்று தருதல் 


கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஏற்படுத்துதல்: 

அமைப்பின் முக்கிய செயல்பாடாக தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கும்  படித்த இளைஞர்களுக்கு எங்களது அமைப்பில்  பணியினை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரித்து வருகிறோம். மேலும் சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிகள் மூலமாக பயிற்சி மற்றும் கடன் உதவி பெற்று கிராமப்புற இளைஞர்களை சுயதொழில் ஏற்படுத்தி வருகிறது)

Sunday, June 19, 2022

On Sunday, June 19, 2022 by Tamilnewstv in    

 திருச்சி 



எல்ஃபின் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து "முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கத்தை திருச்சியில் துவக்கினர்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்ஃபின் தனியார் நிதி நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் இயங்கி வந்தது. இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் ரமேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் எங்களின் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு பன்மடங்கு திருப்பி தரப்படும் என்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறியதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில்


இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தனர். ஆனால் டெபாசிட் செய்தவர்களின் முதிர்வு காலம் முடிந்த நிலையிலும், பலருக்கு பணம் திரும்பி தரப்படாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் பணம் திருப்பி கிடைக்காத ஆத்திரத்தில் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் எல்ஃபின் நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் எல்ஃபின் நிதி நிறுவனத்தின் உரிமையாளரான ராஜா மற்றும் ரமேஷ் மீது பல்வேறு மோசடி வழக்குகள் தொடுத்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர்  0003161010 & 0006833411, Infi Galaxy marketing India pvt ltd 

Chennai என்று இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN என்ற நிறுவனம் நடத்தி மக்களை தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர் . 


மேலும் எல்பின் மற்றும் அறம் மக்கள் நலச்சங்கம் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் மீது விருதுநகர் மாவட்டம் E.O.W 8/2015 திருச்சி E.O.W 1/2019 பெரம்பலூர் 69/2019 மதுரை மாவட்டம் C.C.B 49/2019 தஞ்சாவூர் மாவட்டம் குற்றப்பிரிவில் 1/2020 மதுரை சிட்டி அவனியாபுரம் காவல் நிலையம் 218/2020 திருச்சி உறையூர் காவல் நிலையம் 104/2020 திருச்சி உறையூர் காவல் நிலையம் கன்டோன்மென்ட் நிலையத்தில்554/2020 மதுரை சிட்டி கே புதூர் 25/2021 மதுரை சிசிபி 49/2019, 12/2021 ,2/2022 சிவகங்கை மாவட்டம் என்று இவர்கள் மீது தமிழகம் முழுவதும் பல வழக்குகள் மேல் நிலுவையில் உள்ள போதும் இதனால் வரை சொத்துகள் முடக்க வில்லை ரெவின்யூ காவல்துறை பத்திரப்பதிவு அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை.

இந்நிலையில் எல்ஃபின் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து புதிதாக முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கத்தை தொடங்கியுள்ளனர். இந்த சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள அமோக திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கவிதா பொருளாளர் ஹேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திலிருந்து எல்ஃபின் நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பங்குதாரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



பொருளாளர் ஹேமா கூறுகையில்

முதல் முதலில் புகார் அளிக்க வேண்டும் பிறகு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் என்பது இருக்கிறது அத்தனையும் கடந்து வந்தால் தான் அவர்களுக்கு பணம் திருப்பி பெற முடியும் மக்களுக்கு ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பு கொடுப்பதற்காக தான் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனி படைக்கும் எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் துரித நடவடிக்கை எடுத்து எங்களுக்கு எங்களுடைய பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்.


காலத்திற்கான நீதி எங்களுக்கு கிடைக்க வேண்டும் காலந்தாழ்த்தி நீதி கிடைத்தாலும் அது அநீதி தான் அதற்காக தான் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைத்து உள்ளோம் எங்களுடைய ஒத்துழைப்பு இன்றைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு உண்டு எங்களுடைய வேதனையும் வலியும் புரிந்து கொண்டு இந்த வழக்கை சிறப்பு வழக்காக நடத்தி எங்களுக்கு எங்களுடைய பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.


உறவு முறைகளை கூறி ராஜா என்கிற அழகர்சாமி ,எஸ் .ஆர்.கே ரமேஷ் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் எங்களுடைய நகையெல்லாம் விற்கத் செய்து பணத்தை முதலீடு செய்ய கூறி ஆசை வார்த்தைகள் தூண்டி முதலீடு செய்தால் அதற்குரிய தண்டனையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் ஏராளமானோர் இதனால் பாதிக்கப்பட்டு ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன கல்லூரிகளுக்கு படிப்பு படிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கம் செயலாளர் கவிதா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-


முதலீட்டு செய்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுது அவர்கள் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதனை வழிகாட்டவே இந்த சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எல்ஃபின் நிதிநிறுவனம் பொதுமக்களிடம் கோடிகணக்கில் பணத்தை ஏமாற்றி உள்ளனர் அதற்காக நாங்கள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினோம் தனித்தனியாக செயல்பட்டு பல முயற்ச்சிகளை மேற்கொண்டோம் எங்களை போலவே பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு பலர் புகார் கூட அளிக்கவில்லை அவர்களுக்கு எப்படி புகார் அளிப்பது என்கிற ஆலோசனை வழங்கப்படும். எங்களுக்கான தனி விசாரணைக் அமைக்கப்பட்டுள்ளது அந்த விசாரணையை எப்படி மேற்கொள்ள வேண்டும் பலருக்கு இந்த விசாரணைக் குழு அமைத்தது தெரியவில்லை பாதிக்கப்பட்ட நபர் களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த சங்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். முழு ஒத்துழைப்பையையும் விசாரணை குழுவுக்கு அளிப்போம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

பேட்டி:- கவிதா

முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்க செயலாளர்

Wednesday, February 09, 2022

On Wednesday, February 09, 2022 by Tamilnewstv in ,    

 திருச்சி 


திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்க துறை,  தமிழாய்வுத் துறை மற்றும் மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை  இணைந்து ஊராட்சி ஒன்றிய பள்ளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செப்பர்டு விரிவாக்கத் துறை இயக்குனர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் தலைமையில், மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சுப்ரமணி முன்னிலையில் நடைபெற்றது. 

திருச்சி அடுத்துள்ள குள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு   மற்றும் திருச்சி மாவட்டம் அளுந்தூர் அடுத்துள்ள கொட்டப்பட்டு புனித லூர்ட்ஸ் தொடக்கப் பள்ளிகளுக்கு கணினி, மேசைகள் பீரோ மற்றும் கற்றல்  உபகரணங்கள்,  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழாய்வுத் துறை தலைவர் முனைவர் பெஸ்கி, மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார், பேராசியர்கள் ஜெயக்குமார், ஜெரோம், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமாரி,  புனித லூர்ட்ஸ் தொடக்கப் பள்ளி உதவி ஆசிரியர் ஆரோக்கியசுந்தர்,

தமிழ்துறை மாணவர்கள்  சந்தோஷ், கஸ்தூரி செபாஸ்டின் மாதேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செப்பர்டு விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளர் ஜோசப்,  கிறிஸ்துராஜா,செய்திருந்தார்.



Monday, February 07, 2022

On Monday, February 07, 2022 by Tamilnewstv in ,    

 


திருச்சி கம்பரசம்பேட்டை அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கம்பரசம் பேட்டையில் ஸ்ரீ விசாலாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நாலு கால யாக சால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 9.45 மணிக்கு கோவில் கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


தொடர்ந்து 10.15 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வானது முத்துக் குமார சிவாச்சாரியார், சதீஷ் சிவாச்சாரியார், பிரபு சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

மேலும் இவ்விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த கம்பரசம்பேட்டை பொதுமக்கள், ராதே கிருஷ்ணா வெல்ஃபேர் டிரஸ்ட், மணி ஐயர் ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கோவில் அறங்காவலர்கள் மணி அய்யர், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், திருப்பணி குழுவினர் கண்ணன், ரவிசங்கர், கோவிந்தராஜன் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு விசாலாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். 


Wednesday, January 12, 2022

On Wednesday, January 12, 2022 by Tamilnewstv in    

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை திரு பிசினஸ் சர்வீஸ் வெல்பர்


அசோஷியேஷன்  நிர்வாக குழு சார்பில் சங்கத்தின் செயலாளர் திரு. ஷோக்கத் அலி தலைமையில் பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டம் பணி குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இத்திட்டத்தின் வாயிலாக பயனடைய பொதுமக்களுக்கு, வியாபார பெருமக்களுக்கு வங்கிகளின் கடன் பெரும்  சலுகைகளின் பணி குறித்தும் பணி ஆரம்பக் கூட்டம் நடை பெற்றது   


பொதுமக்களுக்கு இத்திட்டம் சேர்ந்து அடையும் வண்ணமாக ஆலோசகர்கள் நியமனம் செய்து இத்திட்டத்தை பற்றி விளக்கமாக பொது மக்களுக்கு தகவல் கிடைத்திட கூட்டம் நடைபெற்றது 


மேலும் இந்த கூட்டத்தில் பங்குபெற்ற நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது நடைபெற்ற கூட்டத்தில் கடன் பெறுவது குறித்தும் இத்திட்டம் பயனாளிகளுக்கு சேர்ந்து அடையும்  விதமாக ஆலோசனைகள் கூறப்பட்டது பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு முகவர்கள் ஆண்கள் பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

                             

Saturday, December 11, 2021

On Saturday, December 11, 2021 by Tamilnewstv in ,    

 திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் இடும்பன் மதுரைவீரன் கருப்பண்ணசுவாமி சமேத ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா கடந்த 4ஆம் தேதி அன்று முதல் கால யாக பூஜையுடன் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 5 ஆம் தேதி ஸ்ரீசக்தி மாரியம்மனுக்கு முதல் கால யாக பூஜையும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது

ஆறாம் தேதி திங்கட்கிழமை அன்று மூன்றாம் கால யாக பூஜையும் இதனைத் தொடர்ந்து ஏழாம் தேதி யாகசாலையில் மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐந்து ரூபமாக விளங்கும் அன்னைக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை காரியகாரப்பிள்ளை சிவக்குமார் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

On Saturday, December 11, 2021 by Tamilnewstv in ,    
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்  சிறப்புரையாற்றினார்.

முன்னதாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமி இயக்குனர் விஜயாலயன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் குரு.அரங்கநாதன் மற்றும் தொழிலதிபர் காஜா மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பயிற்றுநர்கள் மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இங்கு படித்த 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அதிகாரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, November 14, 2021

On Sunday, November 14, 2021 by Tamilnewstv in ,    

 குழந்தைகள் தின விழா ஓவியப்போட்டியில் தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்திய பிஞ்சு குழந்தைகள்.....


குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பாங்க் ஆஃப் இந்தியா சார்பாக திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது இந்த ஓவிய போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்து வண்ணம் தீட்டினர் இதற்கான ஏற்பாட்டை பேங்க் ஆப் இந்தியா சிலை கிளையின் ஊழியர்கள் செய்திருந்தனர்

கிளை மேலாளர் மணிவண்ணன் பாங்க் ஆப் இந்தியா கூறுகையி்ல் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது


பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது


குறைந்த வட்டியில் லோன் பற்றிய விழிப்புணர்வாக குழந்தைகள் வீடுகள் மற்றும் கார் படங்கள் வரைந்து காட்டினர் இந்த ஓவியப் போட்டியில் சிறப்பு ஓவியங்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்படும் என கிளை மேலாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

Tuesday, October 05, 2021

On Tuesday, October 05, 2021 by Tamilnewstv in    

 படித்துறை அங்காளம்மன் கோவிலில் ராகு தோஷ நிவர்த்தி பிரதிஷ்டை



திருச்சி குடமுருட்டி பாலம் அருகே அமைந்துள்ள அய்யாளம்மன் கோயிலின் அருகே  காவேரி கரையில் அங்காளம்மன் கோயில் உள்ளது


இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அமைந்துள்ள கோயில் என்பது குறிப்பிடத்தக்கது இந்த கோயிலில் அந்த ஊர் பொதுமக்கள் படித்துறை அருகே அமைந்துள்ளது படித்துறை அங்காளம்மன் என்று கூறுவது வழக்கம் அப்படி சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்று ராகுவின் திரு உருவம் ஆன பாம்பின் வடிவில் ஹிந்து முறைப்படி மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு கல் பிரதிஷ்டை செய்யப்பட்டது

மேலும் இந்தக் கோயிலில் காவல் தெய்வங்கள் மதுரை வீரன் சங்கிலிக்கருப்பு பைரவர் விநாயகர் அம்மனின் திருவுருவங்கள் போன்ற சிறப்பம்சங்களை கொண்ட கோயிலில்

பிரதிஷ்டை செய்யப்பட்ட பாம்பின் உருவம் கொண்ட ராகு தோஷ நிவர்த்தி கல்லுக்கு படையல் போடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பல ஊர்களில் இருந்து வந்த ஆண்கள் ,பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட்டு அரசு விதிகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.