Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by Anonymous in ,    
கோவில்பட்டியில் தபால் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
துறை ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழுவே புறநிலை ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்டவைகளை பரிசீலித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.


கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணாவுக்கு தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் புறநிலை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க தபால்காரர் மற்றும் 4–ம் பிரிவு மாநிலத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சுப்பையா, புறநிலை ஊழியர் சங்க உதவி கோட்டத் தலைவர் மணி, அஞ்சல் 4ஆம் பிரிவு தென்காசி கிளைச் செயலாளர் சிவசங்கரன், கோவில்பட்டி கோட்ட அஞ்சல் 3ஆம் பிரிவுச் செயலர் பொன்னுச்சாமி ஆகியோர் பேசினர். தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் புறநிலை ஊழியர் சங்க கோட்டச் செயலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

0 comments: