Sunday, July 20, 2014

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் கடந்த ஜூன் 11–ம் தேதி தாளவாடி முகமது இலியாஸ் (25) என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார். மேலும், கடந்த 16–ந் தேதி இரவு திம்பம் வனச்சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த வனக்காவலர் கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது.
இந்த 2 பேரையும் திம்பத்தில் உலாவும் சிறுத்தை தான் கடித்துக் கொன்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சிறுத்தை திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனால் திம்பம், காளி திம்பம் மற்றும் ஆசனூர் மலை பகுதியில் உள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்,
சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திம்பம் மலைப்பாதையில் பொருத்தப்பட்ட தானியங்கி காமிராவில் சிறுத்தை நடமாடுவது பதிவாகியுள்ளது. இதையடுத்து சிறுத்தை அதே பகுதியில் உலாவுவது உறுதிபடுத்தப்பட்டதை அதனை பிடிக்க நீர்நீலை மற்றும் வழித்தடத்தில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன.
சிறுத்தை நடமாடிய பாதையில் நேற்று மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. இரு கூண்டுகளில் ஆடுகளும் ஒரு கூண்டில் நாயும் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, துப்பாக்கி மூலம் மயக்கஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் மற்றொறு பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர்.
சத்தி, ஆசனூர் புலிகள் காப்பக கள துணை இயக்குநர்கள் சி.ஹெச்.பத்மா, கே.ராஜ்குமார், வனசரக அலுலவர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் என மொத்தமாக 100–க்கும் மேற்பட்டோர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் முடக்கி விடப்பட்டுள்ளனர். இதற்கென அவர்கள் நவீன தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–
சிறுத்தையால் வனக்காவலர் கொல்லப்பட்ட பிறகு சிறுத்தையின் கால் தடங்கள் உள்ள பகுதியில் 3–வது கூண்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது சாரல் மழை பெய்து கொண்டிருப்பதாலும் திம்பம் பகுதியில் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளதாலும் சிறுத்தை மீண்டும் சாலையோரம் தென்பட வாய்ப்புள்ளது. இதனால் விரைவில் சிறுத்தை உயிருடன் பிடிபட வாய்ப்புள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment