Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கக் கோரி நடைபெறவுள்ள வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஆயத்த விளக்க வாயிற்கூட்டம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல தலைமையகம் முன்பு நடந்தது. தொமுச தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரவை தலைவர் நடராஜன், மாவட்ட திமுக செயலாளர் ராஜா, மாநகர செயலாளர் குமார்முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். 
இந்த கூட்டத்தில், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், 11வது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரத்துகளை அமல்படுத்த வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி பென்சன் வழங்க வேண்டும், பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்கவும், ஓய்வு பெறும்போதே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவை அறிவித்துள்ளபடி வரும் 1ம்தேதி வேலைநிறுத்த போராட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், தொமுச பொதுச்செயலாளர் குழந்தைசாமி, பேரவை துணை தலைவர் ரத்தினவேலு, மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம், பொருளாளர் தங்கமுத்து, தமிழ்ச்செல்வன், மாது உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொமுச பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

0 comments: