Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    

அந்தியூர், ; ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு ரூ.44 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் காவல் நிலையம் கவுந்தபாடி செல்லும் மெயின்ரோட்டில் 1998ம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதியில்லாமல் நெருக்கடியில் இயங்கி வருவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 
தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் மூலம் ஆப்பக்கூடல் காவல் நிலையம் கட்டிடம் கட்ட ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு பவானி மெயின் ரோட்டில், கால்நடை மருத்துவமனை அருகில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. புதியதாக கட்டப்படும் காவல் நிலையம் இரண்டு அடுக்குமாடிகளை கொண்டது.
 பூமி பூஜையில், பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் பாலக்கால் போட்டு பணியைத் துவக்கிவைத்தார். எஸ்.ஐ.க்கள் மணி, ராமதிலகம், பூபதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

0 comments: