Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு கல்விக்கடன் முகாம் வரும் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் கல்விக்கடன் பெறுவதற்கான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வரும் 2ம் தேதி முதல் கல்விக்கடன் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. 
2ம் தேதி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், 3ம் தேதி அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், 4ம் தேதி பவானி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளிலும், 5ம் தேதி பவானிசாகர், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 9ம் தேதி நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திலும், 10ம் தேதி கோபி ஊராட்சி ஒன்றியத்திலும், 11ம் தேதி பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திலும், 12ம் தேதி ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திலும், 16ம் தேதி சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திலும், 17ம் தேதி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திலும், 18ம் தேதி கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திலும், 19ம் தேதி தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திலும், 26ம் தேதி தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. 
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோருடன் கல்விக்கடன் பெற விரும்புவோரின் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரியின் அனுமதி கடிதம், அரசின் கலந்தாய்வு கடிதம், ரேசன் கார்டு ஆகியவற்றின் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். 
இந்த கல்விக்கடன் முகாம்களில் அந்தந்த வட்டாரத்தை சேர்ந்த வங்கியாளர்கள் கலந்து கொண்டு தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வார்கள். 
ஈரோடு மாவட்டத்தில் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள கல்விக்கடன் பெறுவதற்கான முகாம்களை மாணவ, மாணவிகள் உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

0 comments: