Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,

மதுரை அருகே வணிகவரித் துறை அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து, நாற்பத்தொன்பதரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
புதுவிளாங்குடி தென்றல் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மோகனசுந்தரி (48), வணிகவரித் துறை அதிகாரி. இவர், குடும்பத்துடன் சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்கு சென்றுவிட்டு, பின்னர் குற்றாலம் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களது வீட்டின் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், மதுரை திரும்பிய மோகனசுந்தரி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சாவி மூலம் பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த நாற்பத்து ஒன்பதரைப் பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், கூடல்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்