Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,

மதுரை யாதவர் கல்லூரியில் நடைபெறவுள்ள நாட்டுப்புறக் கலை விழாவின் வழியாக, அறிவியல் கருத்துக்களைப் பரப்புதல் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க, அறிவியல் தொடர்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, யாதவர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சி. தனசேகரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
இக்கருத்தரங்கம் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பயிற்சி மற்றும் விளக்கவுரைகள் மூலம், திறமைவாய்ந்த ஆளுமைத் தன்மையுடைய தற்கால அறிவியல் வல்லுநர்கள் விவரிக்கின்றனர். எந்தத் துறையைச் சார்ந்த பட்டதாரிகளாக இருந்தாலும், அவர்களை அறிவியல் தகவல் தொடர்பு கொள்ள அச்சு, காணொலிக் காட்சிகள் மற்றும் பொதுத் தொடர்பு சாதனங்கள் வாயிலாகப் பயிற்சியாளர்களுக்கு இந்தப் பணிமனையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
இப்பணிமனையில், அறிவியல் தொடர்பாளர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 94862-26443, 93823-14805 ஆகிய எண்களில் தொடர்பு கொளளலாம், எனத் தெரிவித்துள்ளா