Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராக இருப்பவர் கண்ணன் (வயது45). இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியின் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.பின்னர் அந்த எண்ணுக்கு ஆபாச வாசகங்களுடன் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.அவர்கள் உதவி பேராசிரியர் கண்ணனை கண்டித்துள்ளனர். அப்போது அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தாராம். மறுநாள் கல்லூரிக்கு சென்ற மாணவியை 2 பேர் வழி மறித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.பேராசிரியர் கண்ணன் தூண்டுதலின்பேரிலேயே இந்த கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக நாக மலைப்புதுக்கோட்டை போலீசில் மாணவியின் தந்தை புகார் கொடுத்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பேராசிரியர் கண்ணனை கைது செய்தனர். கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளன

0 comments: