Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
சோழவந்தானில் பிளாஸ்டிக் பைகள் விற்ற நிறுவனங்களுக்கு அபராதம்
சோழவந்தானில் பேரூராட்சி சார்பில் தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடைகளில் சுகாதார ஆய்வாளர் கணேசன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் சோதனை செய்தனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதாக சோழவந்தானில் கடை வீதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இருந்து பைகள் கைப்பற்றி அபராதம் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெரிய கடைவீதியில் உள்ள பலசரக்கு நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் ஆகியவற்றை சோதனை செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
பின் கறிக்கடை வீதி, மார்க்கெட்ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பஸ்நிலையம், காமராசர் சிலை அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் அருகில், சின்னக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

0 comments: