Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
மதுக் கடைகளை மூடுமாறு, மதுரையில் நடைபெற்ற பெண்கள் மாதிரி சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை பாத்திமா கல்லூரியில், வெள்ளிக்கிழமை பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாதிரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன. சட்டப்பேரவையில் முழுவதும் பெண்கள் பங்கேற்றால் எந்த மாதிரியான விவாதங்கள் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இக்கூட்டம் நடத்தப்பட்டது.
பாத்திமா கல்லூரி மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. கூட்டத்தில், மதுவால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் பலரும், மதுவால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், இளைஞர்கள் வழிப்பறி மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். எனவே, மதுக் கடைகளை மூடவேண்டும் என ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். பெண்கள் மேம்பாடு, மீனவர் பிரச்னை, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம், ஏழைகளுக்கு வீடுகள் என்பது போன்ற பல தலைப்புகளில் உறுப்பினர்கள் விவாதித்தனர். இதில், பெண்களுக்கான கூட்டுத் திட்ட இயக்கத்தின் ஜோஸ்னா சட்டர்ஜி, பாத்திமா கல்லூரி துணை முதல்வர் கே. பாத்திமா மேரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

0 comments: