Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
வேலூரில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் விளையாட 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி, ஆகஸ்ட் 11இல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், ரேங்கிங் அடிப்படையில், ஜே.சிபி. (அமெரிக்கன் கல்லூரி, மதுரை), ஜி. தினேஷ்குமார் (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), எஸ். ஹரிஹரன் (சி.பி.ஏ. கல்லூரி, போடி), எம். தங்கதுரை (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), பி. ஜெயக்குமார் (மதுரைக் கல்லூரி, மதுரை), ஆர். மங்களேஸ்வரன் (எஸ்.வி.என். கல்லூரி, மதுரை) ஆகிய 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள், வேலூர் விஐடி-யில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழக சதுரங்கப் போட்டியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் என். ராஜசேகர் பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி துறைத் தலைவர் கே. சந்திரசேகரன், உடற்கல்வி இயக்குநர் வி. ஜெயவீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments: