Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நகர் மாவட்டக் காங்கிரஸார் 200 இடங்களில் தேசியக் கொடி ஏற்றினர்.
வெள்ளிக்கிழமை காலை, காமராஜர் சாலையில் உள்ள நகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
நகர் மாவட்டத் தலைவர் பி. சேதுராமன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு, மாநில பொதுச் செயலர் எம். பழனிவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினர் காந்தி, மாநில துணைத் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் வி. குமரேசன், பி. ராஜாங்கம், எல். முருகேசன், நாஞ்சில் பால்ஜோசப், பொதுச் செயலர் எல். விஜயராகவன், சிறுபான்மை பிரிவுத் தலைவர் மைதீன் பாஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள 21 வட்டக் கிளைகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பல்வேறு குழுக்களாகச் சென்று இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
100 வார்டுகளிலும் மொத்தம் 200 இடங்களில் தேசியக் கொடியேற்றி, லட்டு, ஜாங்கிரி போன்ற இனிப்புகளை வழங்கினர். 4ஆவது வார்டில் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
ஜனதா தளம்: மதுரை மாநகர் மாவட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில், விளக்குத்தூண் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மாநகர் மாவட்டத் தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். கைத்தறிப் பிரிவுத் தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் க.ஜான்மோசஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், இப்பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு, புறநகர் மாவட்டத் தலைவர் கே. பாக்கியத் தேவர் மாலை அணிவித்தார். கட்சி நிர்வாகிகள் எஸ்.எம். செல்லப்பாண்டி, எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வர்த்தக சங்கங்கள்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில், அதன் தலைவர் என். ஜெகதீசன் தேசியக் கொடி ஏற்றினார். விழாவில், செயலர் ஜே. ராஜமோகன், முன்னாள் தலைவர் எஸ். ரத்தினவேலு உள்ளிட்ட நிர்வாகிகள், வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில், அதன் தலைவர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். விழாவில், சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 comments: