Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
திருப்பரங்குன்றம் பசுமலை திகாராஜர் காலனியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் அந்த பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரெங்கநாயகி (வயது 45).
இன்று காலையில் ரெங்க நாயகி வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று ரெங்கநாயகியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தனர்.
உஷாரான ரெங்கநாயகி கழுத்தில் கிடந்த செயினை பிடித்து கொண்டார். பாதி செயினுடன் 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். உடனே அவர் கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களையும் விரட்டினர். அதற்குள் அவர்கள் மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து ரெங்கநாயகி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி–செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: