Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
பல சிறப்புகளை கொண்ட நாட்டின் சுதந்திர தினம்: மதுரை ஆதீனம் வாழ்த்துசுதந்திர தினத்தையொட்டி மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–
நமது இந்திய திருநாடு 1947–ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15–ம் நாள் சுதந்திரம் பெற்றது. அந்த நாள் இந்திய வரலாற்றில் பல சிறப்புகளை கொண்டது.
உலகமே உறங்கி கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா விழித்தெழுகிறது என ஆகஸ்ட் 15 ஆம் நாள் பண்டித ஜவகர்லால் நேரு கூறினார்.
சுதந்திரம் பெற்றபோது, நமது மதுரை ஆதீனத்தில் 290–ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள் அருளாட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். ஆதீன அன்பர்கள் நால்வரை தேர்வு செய்து அவர்களிடம் திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய கோளறு திருப்பதிகம், ஆதீன வரலாறு, திருநீற்று பிரசாரம, சாதரா, தங்கம் கட்டி 108 உத்திராக்கம் அனைத்தையும் டெல்லிக்கு அனுப்பி வைத்து, பண்டித ஜவகர்லால் நேருவுக்கு சிறப்பு செய்தார்கள். இந்நிகழ்வு மதுரை ஆதீனத்திற்கும் பண்டி நேருவுக்கும் பெருமிதமான மகிழ்ச்சியான காட்சியாக இருந்தது.
1769–ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 15 ஆம் நாளில் தான் மாவீரன் நெப்போலியன் பிறந்தான். 1914–ம் ஆண்டு பிரமாண்டமான பனாமா கால்வாய் திறக்கப்பெற்றது. 1948–ல் முதன் முதலாக காந்தியடிகளின் உருவம் பொறிக்கப் பெற்ற நினைவு அஞ்சல் தலையை இந்தியா வெளியிட்டது. 1960 ஆம் ஆண்டு காங்கோ நாடு சுதந்திரம் பெற்றது. 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் நாடு சுதந்திரம் பெற்றது.
மேலும் பாரத மாதாவுக்கு முதல் முதலில் கோவில் எழுப்பி சிறப்பு செய்தார், சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா. ஒரு பெண்மனி விடுதலை போராட்ட முதுபெருந் தலைவி என்று அழைக்கப் பெற்றார். அவர்தான் அருணா ஆசப் அலி.
ஆச்சார்ய வினோபா பாவே பூமிதான இயக்கத்தை தொடங்கினார். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு, இன்னமும் கோவை மத்திய சிறையில் பாதுகாப்பாக வைக்கப் பெற்றுள்ளது.
வீரர் வாஞ்சிநாதன் தமிழ்நாட்டின் பகத்சிங் என அழைக்கப்பெற்றார். இப்படி நமது நாட்டின் சுதந்திர பெருமையை அடுக்கி கொண்டே போகலாம்.
எல்லோர்க்கும் சுதந்திர தின நல்லாசிகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments: