Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
மேலூர், ஆக. 26:   மேலூர் ஊராட்சி ஒன்றியம் புலிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மூன்று மடிக்கணினிகள் திருடு போனது தொடர்பாக, போலீஸார் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஆசிரியர்களிடையே ஏற்பட்ட பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் பள்ளியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 இப்பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று மடிக்கணினிகள் திருடுபோனது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இதுதொடர்பாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடமும் விசாரித்தனர்.
 இதையடுத்து, ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைக்கேள்விப்பட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மேலூர் உதவித் தொடக்க கல்வி அலுவலர் சின்னவெள்ளைச்சாமி அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

0 comments: