Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையேயான இருபாலர் சதுரங்கப் போட்டிகள் மு.வரதராசனார் அரங்கில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு துவங்கியது.
பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் குத்துவிளக்கு ஏற்றி போட்டிகளைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் நா. ராஜசேகர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி விஜயன், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து கல்லூரி உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) வீ. ஜெயவீரபாண்டியன் வரவேற்றுப் பேச, சரஸ்வதி நாராயணன் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சொக்கநாதன் நன்றி கூறினார்.