Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுவதாக, மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
விவேகானந்தரின் பிறந்த நாளான தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் பிரிவில் 9,10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு வழங்கிய அறிவுரை, சுவாமி விவேகானந்தரும் தமிழ்நாடும், சுவாமி விவேகானந்தரின் சிறப்பியல்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
இரண்டாம் பிரிவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், சுவாமி விவேகானந்தரை நான் விரும்புவதற்குக் காரணம், சுவாமி விவேகானந்தர் விரும்பிய வீர இளைஞர்கள் யார், சுவாமி விவேகானந்தரும் தேச பக்தியும் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
மூன்றாம் பிரிவில் கல்லூரி மாணவ, மாணவியர், சுவாமி விவேகானந்தர் இளைஞர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார், நமது நாட்டை வல்லரசாக்குவதற்கு சுவாமி விவேகானந்தர் வழியில் என் பங்கு, சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகச் சிந்தனைகள் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். இப் போட்டியில் வெற்றிபெறும் மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் சுவாமி விவேகானந்தர் நூல்களும் 2015-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் நடைபெறும், தேசிய இளைஞர் தினம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் கட்டுரைகளை ஆங்கிலம் அல்லது தமிழில் ஏ4 தாளில் மூன்று பக்கங்கள் எழுத வேண்டும். கட்டுரைகளை நவம்பர் 10-ம் தேதிக்குள் ஸ்ரீராமகிருஷ்ணா மடம், ரிசர்வ் லைன், மதுரை-625014 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்