Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
சின்னாளபட்டி பகுதியில் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சும் பொதுமக்கள்
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுமார் 4500–க்கு மேல் குடி தண்ணீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
குடிதண்ணீர் 10 நாட்களுக்கு ஒருமுறை 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யும் போது ஒரு சிலர் அதிக சக்தி கொண்ட மின்மோட்டார்களைக் கொண்டு குடிதண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.
குடிப்பதற்கு மட்டும் வினியோகிக்கப்படும் குடிதண்ணீரை ஒரு சிலர் கழிவறை, மற்றும் வீடுகள் சுத்தம் செய்ய தங்களுடைய கார், பைக், வாகனங்களை கழுவுவதற்கு மின்மோட்டார் மூலம் எடுக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மேடான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிதண்ணீர் சீராக கிடைப்பதில்லை என கடந்த 3 வருடங்களாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
பேரூராட்சி நிர்வாகம் குடிதண்ணீர் வினியோகம் செய்யும் போது ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் சென்று சுமார் 80 மோட்டார்களை பறிமுதல் செய்தது. ஆனால் சின்னாளபட்டியில் 1000–க்கும் மேல் உள்ள வீடுகளில் மின்மோட்டார்களை வைத்து தண்ணீர் எடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் பாரபட்சம் இன்றி அனைத்து வார்டுகளுக்கும் சென்று மின்மோட்டார் மூலம் குடிதண்ணீர் உறிஞ்சுவதைக் கண்டுபிடித்து மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன

0 comments: