Wednesday, August 27, 2014
மதுரை தெய்வநெறிக் கழகத்தில் திரிவேணி விழா 1–ந்தேதி தொடங்கி 8–ந்தேதி வரை நடக்கிறது.
இது குறித்து மதுரை தெய்வநெறிக் கழகம் மற்றும் சிவானந்த தபோவனத்தின் தலைவர் ஸ்ரீ சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:–
குருதேவர் ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் 128–வது ஜெயந்தி விழா மதுரை தெய்வநெறி கழகத்தின் 76–வது ஆண்டுவிழா மற்றும் மதுரை சிவானந்த தபோவனத்தின் 47–வது ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா திரிவேணி விழாவாக செப்டம்பர் 1–ம் தேதிமுதல் 8–ம் தேதி வரை காலை 6 மணி முதல் 8.30 மணி வரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள தெய்வநெறிக் கழகத்திலும், மாலையில் தினசரி 6 மணி முதல் சங்கீர்த்தன நிகழ்ச்சியும், 7 மணி முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மீனாட்சி கோவில் வடக்காடி வீதி, திருவள்ளுவர் கழகத்திலும் நடைபெற உள்ளது.
1–ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை, ஆல் இந்தியா ரேடியோ உதவி நிலைய இயக்குநர் அசோக் விழாவினை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன்பின்னர் தமிழகத்தின் தவப்புதல்வர் சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் பேராசிரியர் ஞான சம்பந்தன் சிறப்புரையும் மறுநாள் (2–ந்தேதி) மாலையில் ஞானியார் மரபில் சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
மாலையில் குரு மகிமையும்–நாம மகிமையும் என்ற தலைப்பில் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் சிஷ்யர் ப்ரும்ம ஸ்ரீ ராமானுஜம் சிறப்புரையும், 4–ந்தேதி புட்டு திருவிழாவை முன்னிட்டு நடை சாத்தப்படுவதால் காலை நிகழ்ச்சி சொக்கப்ப நாயக்கன் தெரு, ரமண மந்திரத்திலும், மாலையில் மேலமாசி வீதி, மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பரணி போற்றும் பார் புகழ் சிவானந்தர் என்ற தலைப்பில் ராஜகோபால கனபாடிகள் சிறப்புரையும் நடக்கிறது.
5–ந்தேதி மாலையில் பத்தமடை தந்த பரமஞானி சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் சிறப்புரையும், 6–ந்தேதி மாலையில் சன்மார்க்க தந்தை சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜோதி ராமகிருஷ்ணா சொற்பொழிவும், 7–ந்தேதி மாலையில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் சிந்தனை மன்றம் நடக்கிறது.
குருதேவர் சுவாமி சிவானந்தர் பெரிதும் வலியுறுத்துவது பக்தி நெறியையே என பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன், ரேவதி சுப்புலெட்சுமி ஆகியோரும் தொண்டு நெறியையே என பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன், ராஜா ஆகியோரும் கருத்து கூறுகின்றனர்.
8–ந்தேதி மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சியாக மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இணை பேராசிரியை பாலா நந்தகுமார் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் நடராஜன் பரிசுகள் வழங்குகிறார். மேற்கண்ட அனைத்து நாட்களிலும் காலையில் 6 மணிக்கு கீதைப்பாராயணமும், 7 மணிக்கு கைவல்ய நவநீதம் என்னும் தலைப்பில் தென்காசி ஜகத்குரு ஸ்ரீ வேதவியாச ஆசிரமம் தலைவர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி அநந்தானந்த சரஸ்வதி தொடர் விரிவுரையும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயி...
-
கோவை அருகே உள்ளது ஒண்டிப்புதூர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். பஸ் நிறுத்தம் அருகே ஒரு வேன் மற்றும் 2 சக்...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
0 comments:
Post a Comment