Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
மதுரை அரசு மருத்துவமனையில் தலைமைக் காவலரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றுள்ளனர்.
அலங்காநல்லூர் அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கனிச்செல்வம் (32). ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார்.
அப் பகுதியில் திங்கள்கிழமை காலை முத்துச்செல்வம் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த கனிச்செல்வம், தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவின் முன் நிறுத்தியிருந்தாராம்.
பணிமுடிந்து கனிச்செல்வம் திரும்பிவந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
மோட்டார் சைக்கிளை 2 இளைஞர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மருத்துவமனை கண்காணிப்புக் காமிராவில் மோட்டார் சைக்கிள் திருடுவது பதிவான நிலையில், வழக்கம்போல, திருடியவர்கள் முகம் தெளிவாகத் தெரியவில்லை.
மருத்துவமனையில் 52 இடங்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவை தரமற்றவை என புகார்கள் எழுந்துள்ளன.
குழந்தைத் திருட்டு, வாகனங்கள் தொடர் திருட்டு நடந்துவரும் நிலையில், தரமற்ற காமிரா விஷயத்தில் யாரும் கவனம் செலுத்தாதது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமிராக்களை மருத்துவமனை காவல் நிலையம், டீன் அலுவலகம், செவிலியர் கண்காணிப்பு அலுவலகம் என பல இடங்களில் கண்காணிக்க வசதியிருந்தும் யாரும் கண்காணிப்பை முறையாக மேற்கொள்வதில்லை என்றும் செவிலியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.