Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு தனியார் நிலங்களில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 11,190 கனமீட்டர் கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதிக்கக் கோரி மூன்று மனுக்களை மதுரை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.
அரசு புறம்போக்கு நிலங்கள், நீரோடை, பொதுப்பணித்துறை கண்மாய்கள், கனிமவளத்துறை மலைகளையும் சட்டவிரோதமாக வெட்டித் திருடி கடத்தியதாக பி.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் மீது 92 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய்வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இக்குற்றச்செயல்கள் குறித்து முந்தைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா விசாரணை நடத்தினார். மேலும் தனியார் நிலங்களில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலத்தில்விட அனுமதிகோரி மனுக்கள் மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுக்கள் மீதான விசாரணை ஓர் ஆண்டை கடந்துள்ள நிலையில், தற்போதைய ஆட்சியர் மேலும் மூன்று மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
அதில், பழனிச்சாமி, அவர் மனைவி, மகள், மகன்கள் மற்றும் உறவினர்களது பெயர்களிலுள்ள இடையபட்டி பகுதிகளிலும், ஜெம். கிரானைட் வீரமணி, எஸ்.ஆர். குமார், ஆர்.சேகர், கார்த்திகேயன், செந்தில்குமார், சுரேஷ்குமார், தெய்வேந்திரன் உள்ளிட்டோரது நிலங்களில் புதுக்கிவைக்கப்பட்டுள்ள 11,190 கனமீட்óடர் கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதிகோரி மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனுக்களை விசாரித்த மாஜிஸ்திரேட் கே.வி.மகேந்திரபூபதி விசாரணையை செப்டம்பர் 19-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்