Thursday, August 28, 2014

On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    



ஈரோடு ரெயில்நிலையத்தில் நேற்று இரவு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது பிளாட்பார பகுதியில் பள்ளிக்கூட சீருடையில் ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான். அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவன் கோவை மாவட்டம், சிட்டாப்பூர் பொன்நகர் லே அவுட் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் கிஷோர்குமார் (வயது 14) என்பதும், அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.
கிஷோர்குமாரை அவரது தாய் படிக்க சொல்லி திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி கோவை ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளான். பின்னர் அங்கு இருந்து பயணிகள் ரெயிலில் ஏறி ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கிஷோர்குமாரை கோவைக்கு அழைத்து சென்றனர்.

0 comments: