Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by தமிழக முரசு in ,
ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரிய துரைதயாநிதியின் மனு தள்ளுபடிமுன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2012-ம் ஆண்டு கீழவளவு போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்றேன். அந்த சமயத்தில், நான் வெளிநாடு செல்வதற்கு முன்பும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்பும் மேலூர் கோர்ட்டில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. நான் திரைப்படம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறேன். இதற்காக, படப்பிடிப்பு குழுவினருடன் அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனையால் தொழில் ரீதியாக பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, வெளிநாடு செல்லும் தகவலை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.