Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by தமிழக முரசு in ,
திருமங்கலம் பாண்டியன் நகரில் குடியிருப்பவர் ஷேக்மைதீன். இவருக்கு பகீர்முகமது (வயது32), காதர் மைதீன்(28) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
பகீர்முகமது திருமணமாகி பரமக்குடியில் உள்ளார். இவர் பூ கட்டி விற்பனை செய்கிறார். காதர்மைதீன் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். காதர்மைதீனுக்கு பகீர்முகமது மனைவியின் தங்கையை நிச்சயம் செய்து வருகிற 31–ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக திருமணம் செய்ய விருப்பமில்லை என காதர்மைதீன் கூறி உள்ளார். இதனால் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
சம்பவத்தன்று வீட்டின் மாடியில் இருந்த காதர் மைதீனை, அண்ணன் பகீர் முகமது சந்தித்து பேசி உள்ளார்.
வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த பகீர் முகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதர்மைதீனின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார்.
உடனடியாக திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி. அரசு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காதர்மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் தப்பி ஓடிய பகீர்முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.